• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-30 19:59:17    
நேயர்களின் கருத்துக்கள்

cri

.....................வளவனூர் புதுப்பாளையம் எஸ் செல்வம்
செப்டம்பர் திங்கள் 24 ஆம் நாள் இடம்பெற்ற நிகழ்ச்சிகளைக் கேட்டேன். இன்றைய 'சீன வரலாற்றுச் சுவடுகள்' நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ள தகவல்கள் யாவும் எனக்கு பிடித்திருந்தன. குறிப்பாக, எட்டு ஏகாதிபத்திய நாடுகளின் பெய்ஜிங் மீதான படையெடுப்பு பற்றிய தகவல்கள் என் உள்ளத்தை தொட்டன. வளமான பெய்ஜிங்கை கூட்டுக் கொள்ளையடித்த நிகழ்வு பற்றி அறிந்த
போது ஏதோ நெஞ்சில் முள் தைத்தது போல வலித்தது. பெய்ஜிங்கின் மீதான சுரண்டல் நடவடிக்கைகளை மீறி, தற்போது வளமான பெய்ஜிங் உருவாக்கப்பட்டிருக்கிறது என்றால், அதற்குக் காரணமான சீன மக்களைத்தான் பாராட்ட வேண்டும். இந்த ஆக்கிரமிப்பு போர் பற்றி மேலும் தகவல்களை அறிந்து கொள்ள நான் இணையத்தின் மூலம் சில முயற்சிகளை மேற்கொண்டேன். அப்போது, 1901 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 26 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை வெளியான Arizona Republican என்ற இதழின் பக்கம் எனக்கு கிடைத்தது. அதில் பெய்ஜிங் மீதான போர் பற்றி செய்தி காணப்படுகின்றது.


..........மதுரை-20 N.இராமசாமி
100ஆண்டுகள் வரலாறு வாய்ந்த நகரம் மஞ்சோலி இது சீனாவின் உள்மங்கோலியாவில் மிகப் பெரிய நுழைவாயிலாகும். ரசிய வணிகர்கள் நாள்தோறும் வணிகப் பொருட்கள்
வாங்க,மஞ்சோலி நுழைவாயிலில் நுழைகிறார்கள். இந்நகரில் ரஷியர்கள் சுற்றுப்பயணம் செய்கிறார்கள் இந்
நகரத்தின் கட்டுமானம் சீன ரசிய வர்த்தகம், மககள் நடமாட்டம் ஆகியவற்றை விரைவாக வளர்த்து வருகிறது என்பது
குறிப்பிடத்தக்கது.இது போன்ற பழமைவாய்ந்த பண்பாட்டு சின்னமாக விளக்கும் நகரங்கள் நிறைய சீனாவில்
இருக்கிறது என்பதை அறிந்து கொண்டேன்.
......... வளவனூர் முத்துசிவக்குமரன்
சீனாவின் நகரமயமாக்கப் போக்கு என்ற தலைப்பிலான செய்தியை படித்தேன். சீனாவின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 40 விழுக்காட்டினர் இப்போது நகரங்களில் வாழ்கின்றனர் என்றும் பெரும்பாலான இடங்கள் இப்போது நகர மயமாகி வருகின்றன என்றும் அந்த செய்தி கூறுகிறது. நகர மயமாதல் என்பது வரவேற்கத் தக்கது தான் என்றாலும், அது எந்த வகையிலும் விவசாய விளைநிலங்களை பாதித்து விடக்கூடாது என்பதில் நாம் மிக கவனமாக இருக்க வேண்டும். விளை நிலங்கள் எல்லாம், வீடுகளாகவும், தொழிற்சாலைகளாகவும் ஆகி விட்டால் பசியை போக்குவது எப்படி?
ஆனால் சீன அரசு இது போன்ற விடயங்களில், எச்சரிக்கையுடனும், எதிர்கால நலனை கருத்தில் கொண்டும் செயல்படும் என்பதில் சந்தேகமில்லை.
அது போல் கிராமப்புறங்களில் வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை கடந்த முப்பது ஆண்டுகளில் 25 கோடியிலிருந்து 2 கோடியாக குறைந்து விட்டது என்ற செய்தியின் மூலம் சீன அரசின் கிராமப் புற மேம்பாட்டுத் திட்டம் எந்த அளவுக்கு வெற்றிகரமாக செயல் படுத்தப்பட்டு வருகிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்,
.............. திருப்பூர் இரா.சின்ன‌ப்ப‌ன்
கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி மூலம் சீனக் கம்யூனிஸ்டு கட்சி தொடங்கப்பட்ட ஆண்டு 1921 ஜூலை மாதம் என்பதையும்,தற்போது அக்கட்சியில் 7 கோடி மக்கள் உறுப்பினர்கள் உள்ளனர் என்பதையும் அறியமுடிந்தது. மேலும் உலகிலேயே அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி சீனக்கம்யூனிஸ்டுக் கட்சியாகத்தான் இருக்கமுடியும் என நினைக்கிறேன்‍‍‍...சரிதானா?
சீனக்கம்யூனிஸ்டு கட்சியில் உறுப்பினராக எப்படிச் சேரமுடியும் என்ற கேள்விக்கு, கலை அவர்கள் தான் எப்படி உறுப்பினரானார் என்று விவரித்து எங்களுக்குத் தெளிவாகப்புரிய உதவியது.