• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-10 08:51:46    
பல்வேறு நாட்டுச் செய்தி ஊடகங்களின் பாராட்டு

cri
ஏறக்குறைய இரண்டு வாரங்கள் நீடித்த பெய்ஜிங் பாராலிம்பிக் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, செப்டம்பர் 17ம் நாள் நிறைவடைந்தது. போட்டியில் கலந்து கொண்டோரின் எண்ணிக்கை, கடந்த சில பாராலிம்பிக் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றவர்களை விட தாண்டியது. அது மட்டுமல்ல, இது உலகில் பல்வேறு இடங்களின் செய்தி ஊடகங்களையும் கவர்ந்துள்ளது.

6000க்கு மேலான செய்தியாளர்கள் பெய்ஜிங் பாராலிம்பிக் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான செய்தி சேவை பணியில் ஈடுபட்டனர். அவர்களில், வெளிநாட்டுச் செய்தியாளர்கள், 50 விழுக்காடு வகிக்கின்றனர். The Associated Press, Routers, Agence France Presse முதலிய உலகின் பல்வேறு பெரிய செய்தி நிறுவனங்கள், செய்திகளை வெளியிடும் வகையில், சிறப்புக் குழுக்களை அனுப்பியுள்ளன. கடந்த சில பாராலிம்பிக் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை விட, இந்தப் போட்டியில் செய்தி சேவையில் ஈடுபட்ட செய்தியாளர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகும்.
எகிப்து நைல் ஆற்று விளையாட்டுத் தொலைக்காட்சி நிறுவனத்தின் நிகழ்ச்சி தொகுப்பாளர் Suha Ibrahim அம்மையார், பல பாராலிம்பிக் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் செய்தி சேவைப் பணியில் ஈடுபட்டுள்ளார். பெய்ஜிங்கிப் அப்பணியை நிறைவேற்றும் வகையில், இம்முறை, எகிப்து 20க்கு மேலான செய்தியாளர்களை

அனுப்பியது. முன்பை விட, இது மிக அதிகமாகும். பெய்ஜிங் பாராலிம்பிக் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் ஏற்பாட்டுப் பணி, அவர் கலந்து கொண்ட அனைத்து பாராலிம்பிக் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை விட, மிகச் சிறப்பாக இருந்தது என்று Suha Ibrahim அம்மையார் கூறினார்.
Ali Faruk Mutkan, துருக்கித் தேசிய ஒலி மற்றும் ஒளிப்பரப்புச் நிறுவனத்தைச் சேர்ந்த செய்தியாளர் ஆவார். பாராலிம்பிக் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, செய்தி ஊடகங்களுக்கு வினியோகிக்கும் செய்தி சேவைகள், மிகவும் முழுமையாக இருக்கிறன. வசதிகள் மற்றும் பல்வேறு சேவைகள், எமக்கு மனநிறைவு தந்துள்ளன. தவிர, இங்குள்ள பணியாளர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டவர்களின் உற்சாகத்தால், எனது மனம் உருகியுள்ளது. எங்களுக்கு உதவி தேவைப்பட்ட போது, அவர்கள் தங்களால் இயன்ற அளவில் எங்களுக்கு உதவி செய்தனர் என்று அவர் கூறினார்.

இந்தச் செய்தி ஊடக குழுக்களில் சுமார் 50 உடல் சவால் கொண்ட செய்தியாளர்கள் இருக்கின்றனர். அமெரிக்காவைச் சேர்ந்த Tony Garrett, அவர்களில் ஒருவராவார். அவர், 2004ம் ஆண்டு ஏதென்ஸ் பாராலிம்பிக் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான செய்திப் பணியில் ஈடுபட்டுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன், நான் பெய்ஜிங்கிற்கு வந்துள்ளேன். ஆனால், நான் வெளியே சென்ற போது, வசதியாக இருக்கவில்லை. அப்போது, இங்குள்ள உடல் சவாலுற்றவர்களின் வசதிகள் சீராக இருக்கவில்லை. தற்போது, அந்நிலைமையை மேம்படுத்துவதற்காக, பெய்ஜிங் மாநகரம் அதிகமான திட்டப்பணிகளை மேற்கொண்டுள்ளதை நான் காண்கிறேன் என்று அவர் கூறினார். பெய்ஜிங் உடல் சவாலுற்றோரின் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, சீனாவின் ஊனமுற்ற இலட்சியத்தின் வளர்ச்சியை முன்னேற்றி, அவர்களது சமூகத் தகுநிலைகளை மேம்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.