திபெத்தின் கிராமப்புறங்களில் மின்னாற்றல் நிலையம்
cri
2001ம் ஆண்டு முதல், திபெத்தின் கிராமப்புறங்களில் மின்னாற்றல் நிலையங்களைக் கட்டியமைப்பதற்கு நடுவண் அரசு 280 கோடி யுவானுக்கு மேல் ஒதுக்கியுள்ளது. இத்தொகை மூலம், திபெத்தில் 79 மாவட்ட நிலை மின்னாற்றல் நிலையங்களும், 364 கிராம நிலை மின்னாற்றல் நிலையங்களும் கட்டியமைக்கப்பட்டன. கிராமப்புறம் மற்றும் கால் நடை வளர்ப்பு பிரதேசத்தின் மின்னாற்றல் தேவை பெரிதும் நிறைவேற்றப்பட்டது. திபெத் தன்னாட்சி பிரதேச அரசு அண்மையில் இத்தகவலை வெளியிட்டது.
தற்போது, திபெத்தின் 50 விழுக்காட்டுக்கு மேற்பட்ட கிராமப்புறங்களில் மின்னாற்றல் பயன்படுத்தப்படுகின்றது. உள்ளூர் அரசின் திட்டத்தின் படி, மேலும் 60 நீர் மின்னாற்றல் நிலையங்கள் கட்டியமைக்கப்படும் என்று தெரிய வருகின்றது.
|
|