சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசத்திலான மொத்தம் உயிரின மூல வளத்தின் அளவு சுமார் 130கோடி டனாகும். இதை வளர்த்து பயன்படுத்துவதற்கு நல்ல எதிர்காலம் உள்ளது. திபெத்தின் உயிரின மூல வளத்தின் வளர்ச்சி மற்றும் பயன்பாட்டு கருத்தரங்கிலிருந்து கிடைந்த தகவல் கூறியது.
மாட்டு பலம், புற்தரை, மரக்கிளை முதலிய உயிரின ஆற்றல், திபெத் ஆண்டுத்தோறும் நுகர்வு செய்யும் அளவு மொத்த எரியாற்றல் செலவிலான 80விழுக்காடு வகிக்கின்றது. உயிரின ஆற்றலை தாறுமாறாக பயன்படுத்தப்பட்டதால், அதிகப்படியான மரங்கள், மேய்ச்சல் தளம் முதலியவை பாதிக்கப்பட்டன.
உயிரினச்சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக, மரக்கிளைக்கு பதிலாக புதிய எரியாற்றலை வளர்ப்பது பற்றிய விதியை திபெத் வகுத்துள்ளது. இவ்வாண்டின் இறுதி முதல் 2010ம் ஆண்டு வரை, திபெத்தின் 59 மாவட்டங்களில், 2இலட்சம் மீத்தேன் வாயு குளங்கள் நிறுவப்படும்.
|