அண்மையில், திபெத் தேசிய இனக் கல்லூரி நிறுவப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவு விழாவுக்கான மாநாடு நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஹூசிந்தாவ், கடிதத்தை அனுப்பி, வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இக்கல்லூரி நிறுவப்பட்ட 50 ஆண்டுகளில், 30 ஆயிரத்துக்கு அதிகமான பல்வகை திறமைசாலிகளை பயிற்றுவித்துள்ளது. இவர்களில், 30க்கு அதிகமான மாநில நிலை தலைமை ஊழியர்களும், பல கலைஞர், படைப்பாளர், பேராசிரியர், மருத்துவ அறிவியலாளர், வேளாண் அறிவியாளர், பொறியியலாளர் முதலியவர்களும் இடம் பெறுகின்றனர்.
தற்போது, இளங்கலைக் கல்வியை முக்கியமாகக் கொண்டு, பட்டப்பின்படிப்புக் கல்வியும் கொண்ட நவீன உயர் கல்வி நிலையமாக திபெத் தேசிய இனக் கல்லூரி மாறியுள்ளது.
|