• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-07 16:04:02    
நடு இலையுதிர் கால திருவிழா ஆ

cri
நிலவுத்திருநாளில், மக்கள் இனிப்புகளை உண்டு மகிழ்கின்றனர். அதிலும் சிறப்பாக மூன் கேக் எனப்படும் நிலவு போன்ற வட்ட வடிவ கேக், இந்த விழாவின் சிறப்பு இனிப்பு வகையாகும். இந்த நிலவு கேக் தோன்றியதன் பின்னணியை கூறுகிறது, அடுத்த கதை.

யுவான் வம்சக்காலத்தின் இறுதியில்தான் நடு இலையுதிர்காலத்தின் போது நிலா கேக் சாப்பிடும் வழமை தோன்றியதாம். யுவான் வம்சத்தின் இறுதிகட்டத்தில், மக்கள் அனைவரும் கொடுங்கோல் ஆட்சியை அனுபவித்தனராம். எனவே புதிதாக ஆட்சியேற்றவர்களுக்கு எதிராக மக்கள் போராடத் தொடங்கினர். அடக்குமுறைக்கு முகங்கொடுத்த மக்கள் பொறுத்தது போதுமென பொங்கியெழத்தொடகிய நேரம் அது. பல இடங்களில் மக்கள் குழுக்களாக அணிதிரண்டு அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்ய ஆயத்தம் செய்துகொண்டிருந்தனர். அவ்வமயம் ச்சூ யுவான்ஷாங் என்பவர் இத்தகைய போராளிக் குழுக்களை, மக்களை ஒன்று திரட்டி ஒருங்கிணைக்கத் தொடங்கினார். இந்த ச்சூ யுவான்ஷாங்தான் பின்னாளில் மிங் வம்சத்தின் முதல் பேரரசராக முடிசூட்டப்பட்டவர். ஆக மக்களை ஒருங்கிணைக்கும் பணியிலி ஈடுபட்டிருந்த ச்சூ யுவான்ஷாங்கிற்கு மிக அதிக சிக்கல்கள் ஏற்பட்டன. அரசின் தேடுதல் வேட்டை மற்றும் உளவுக்குழுக்களின் நடவடிக்கைகளால், மக்களை அணிதிரட்ட, அவர்களை அழைக்க சேதி சொல்வது அல்லது தகவலை மக்களுக்கு கொண்டு சேர்ப்பது மிக மிக சிக்கலான, கடினமான செயலாக இருந்தது. ஒரு நாள் ச்சூ யுவான்ஷாங்கின் ராணுவ ஆலோசகரான் லியு போவென், ஒரு அருமையான யோசனையை திட்டத்தை கூறினார். அதாவது நிலா கேக்கின் உள்ளே "எட்டாம் திங்கள் 15 நாளன்று போராட்டம்" அதாவது அரசுக்கு எதிரான கிளர்ச்சி நடவடிக்கை என்று எழுதப்பட்ட தாளை வைத்து மக்களுக்கு வினியோகிக்குமாறு உதவியாளர்களுக்கு உததரவிட்டார் லியு போவென். ஆக போராளிக்குழுக்களும், அரசுக்கெதிராக போராட தயாராயிருந்த மக்கள் கூட்டங்களுக்கும் எட்டாவது திங்கள் 15 நாளன்றைய போராட்டத்திற்கு தோள்கொடுத்து ஆதரிக்குமாறு கோரிக்கை விடுத்த நிலா கேக் வினியோகிக்கப்பட்டது. ஆக எட்டாவது திங்களின் 15ம் நாள் வந்தபோது, அனைத்து போராளிக்குழுக்களும், மக்கள் கூட்டமும் அணிதிரண்டு பெரும்படையாக இந்த எழுச்சியில், போராட்டத்தில் பங்கேற்க, தற்போதைய பெய்ஜிங்கானா அந்நாளைய யுவான் வம்ச தலைநகரம் தாதூ கைப்பற்றப்பட்டது. இந்த செய்தி ச்சூ யுவான்ஷாங்கின் செவிகளை எட்ட, மகிழ்ச்சியில் தன் படையினரை மற்ற மக்களோடு இணைந்து நடு இலையுதிர்கால திருவிழாவை கொண்டாட அனுமதித்ததோடு. போராட்ட செய்தியை மறைக்க உதவிய நிலா கேக்கை அனைவரும் அளித்து, உண்டு மகிழச் செய்தான். ஆக அப்போது முதல் நடு இலையுதிகாலத் திருவிழாவின் போது நிலா கேக் சாப்பிடும் வழமை தொடர்கிறது. காலம் செல்லச் செல்ல, மிக நேர்த்தியான, மிக மிகச் சுவையான, பல்வகை நிலா கேக்குகள் மக்கள் நடுவே பரவலாகி, மகிழ்ச்சியோடு சுவைக்கப்படுகின்றன.

முழு நிலவின் அழகை ரசிப்பதும், நிலா கேக்கை சுவைப்பதும், குடும்பத்தினர் ஒன்றாக கூடி மகிழ்வதுமாக இந்த நடு இலையுதிர்கால விழா சீனா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இருப்பினும், பல்வேறு இடங்களில் சில தனிச்சிறப்பு வாய்ந்த நடவடிக்கைகள், கொண்டாட்ட வழிமுறைகள் இருக்கத்தான் செய்கின்றன. மிகப்பெரிய நாடான சீனாவில் உள்ளூர் தனிச்சிறப்பு வாய்ந்த வழிமுறைகள் இருப்பதில் வியப்படைய ஒன்றுமில்லை. இது நம்மூரில் கொண்டாட்டப்படும் திருவிழாக்கள், பண்டிகைகளுக்கும் பொருந்தும்.

கிழக்கு சீனாவின் ஃப்பூச்சியன் மாநிலத்தின் ஃபபூச்செங் வட்டத்தில், நடு இலையுதிர் காலத் திருவிழா துவங்கும் போது, உள்ளூர் பெண்கள், நீண்ட வாழ்க்கையை பெற நான்பூ பாலத்தை கடக்கின்றனர். ஜியன்னின் வட்டத்தில் பெண்கள் இந்த திருவிழா நாளில் விளக்குகள் ஏந்தி, கருத்தரித்து தாயாக வேண்டுமென நிலவை நோக்கி மன்றாடுகின்றனர். லோங்யான் வட்டத்தில் நிலா கேக் சாப்பிடும்போது மூத்தவர்கள், நிலா கேக்கின் நடுவே ஒரு துளையை ஏற்படுத்துகின்றனர். முக்கிய ரகசியங்களை இளைய தலைமுறையினரிடமிருந்து பாதுகாப்பதை உணர்த்த வயதில் மூத்தவர்கள், முதியோர் இவ்வாறு செய்கின்றனர்.

குவாங்துங் மாநிலத்தின் சாவ்ஷோ மற்றும் ஷந்தோ பகுதிகளில் பெண்களும், குழந்தைகளும் நிலவை வழிபடும் வழமை உள்ளது. பொதுவாக ஆண்கள் நிலவை வழிபடுவதில்லை. "ஆண்கள் நிலவை வழிபடார், பெண்கள் சமையலறை தேவனை வழிபடார்" என்ற ஒரு பழமொழி கூட உண்டு. சூரியன் மறைந்து நிலவு வானில் தோன்றியதும், பெண்கள் ஒரு மேசையில் கனிகள், நிலா கேக், ஊதுவத்திகள், வாசனைப் பொருட்கள் எல்லாம் வைத்து நிலவை வணங்குகின்றனர். யாங்சு ஆற்றின் தெற்கே, நடு இலையுதிர்காலத் திருவிழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அங்கே நிலா கேக் தவிர்த்து குய்ஹுவா வாத்து என்ற சிறப்பு வாத்திறைச்சியும் விழா நாள் விருந்தில் முக்கிய இடம் பெறுகிறது. மட்டுமல்ல விழாவின் போது நடைபெறும் நிகழ்வுகளுக்கு சிறப்புப் பெயர்கள் கூட உண்டு. ச்சிங் துவான் துவான் எனப்படும் ஒன்றிணைப்பை கொண்டாடுதல் (முழு நிலவை குடும்பமாக அமர்ந்து ரசித்து மகிழ்ந்து, மதுவருந்தி கொண்டாடுவது), யுவான் யுவே எனப்படும் நிலவை வழிபடுவது, ட்சோ யுவே எனப்படும் நிலவோடு நடப்பது (ஒன்றாக இணைந்து நிலவொளியில் நடப்பது) ஆகிய சிறப்பு நடவடிக்கைகளை இந்த விழா நாளில் மக்கள் மேற்கொள்கின்றனர்.

நடு இலையுதிர்காலம் ஒருவகையில் அறுவடைக்காலமாகவும் அமைவதால், எளிய விவசாயிகள் நல்ல விளைச்சலை கொண்டாடும் நாளாகவும் இந்த விழா அமைகிறது ஒரு தனிச்சிறப்பாகும்.

கதிரவன் சாய்ந்த மாலையும் மெதுவாக தேய்ந்து இரவு சூழ, இரவுக்கு ஒளிதரும் இயற்கையின் கொடையாக, இருளை விரட்டும் முழு நிலவின் ஒளி புவியெங்கும் பரவ, வீட்டு முற்றத்தில், வீட்டு மாடியில் மேசைகளை வைத்து, குடும்பமாக ஒன்று கூடி, சிரித்து பேசி மகிழ்ந்து, நிலவை நன்றியோடு நினைத்து, அதன் அழகை ரசித்து, உண்டு, மகிழ்ந்து சீன மக்கள் இந்த நடு இலையுதிர்காலத் திருவிழா அதாவது நிலவுத் திருநாளை சிறப்பிக்கின்றனர்.