• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-10 08:51:10    
சீனாவின் லோபா இனம்

cri
லோபா இன மக்கள், முக்கியமாக லோபா தன்னாட்சிப் பிரதேசத்தின் மிலின், மோடோ முதிலிய இடங்களில் கூடி வாழ்கின்றனர். இதன் மொத்த மக்கள் தொகை, 2300 ஆகும். இது, சீனாவின் சிறுபான்மை தேசிய இனங்களில் மிகு குறைவான மக்கள் தொகை வாய்ந்த இனமாகும்.

லோபா திபெத் இனத்தவர்கள் வழங்கிய பெயராகும். இதற்கு, தெற்கு வகுதியில் வாழ்ந்தனர் என்பது பொருள். அவர்கள், தொடக்கத்தில் yaluzangbu ஆற்றுப்பள்ளதாக்கில் வளரத் தொடங்கிய வேளாண்மை பழங்குடியாகும். 1965ம் ஆண்டு லோபா தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்டது.

லோபா இன மக்கள் சொந்த மொழியையும் எழுத்துகளையும் கொண்டுள்ளனர். லோபா மொழி, சீன-லோபா மொழிக் குடும்பத்தின் லோபா-மியான்மார் கிளையைச் சேர்கிறது. அவர்களின் வழக்கப் பழக்கங்கள், பெரிதாக திபெத் இனத்தினால் செல்வாக்கப்பட்டன.

ஹ டா வழங்குவது, லோபா மக்கள் விருந்தினருக்கு மிக அதிகமான மதிப்பு அளிக்கின்ற பண்பான நடத்தையாகும். ஹ டா என்பதற்கு லோபா மொழியில் தலைக்குட்டை என்பது பொருள்.

லோபா மக்கள் புத்த மதத்தில் நம்பிக்கைக் கொண்டவர்கள். புத்த மதத்தில் சில உள்ளூர் நம்பிக்கைகளையும் சடங்குகளையும் சேர்த்து, லோபா இனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த புத்தமதம் உருவாகியுள்ளது.

கால்நடை வளர்ப்பு மற்றும் வேளாண்மை, லோபா பிரதேசப் பொருளாதாரத்தின் முக்கிய பணிகளாகும்.

முன்பு லோபா மக்கள் சாப்பிட்ட காய்கறி வகைகள் மிக குறைவு. ஆட்டு மாட்டு இறைச்சிகள் அதிகமாக சாப்பிடுகின்றனர். Su you cha என்னும் ஒரு வகை பட்டார் தேனீர் மிக அத்தியாவசியமானதாக அனைவரும் கருதுவதோடு, பாலையும் அருந்துகின்றனர். அவர்கள் பொதுவாக சிங்கோ பார்லியாலான சிங்கோ மது அருந்த விரும்புகின்றனர்.

லோபா நாள் காட்டியின்படி, ஆண்டுதோறும் முதலாவது திங்களின் முதல் நாள், புத்தாண்டு விழாவாகும். இது லோபா மக்களின் மிக முக்கிய பாரம்பரிய திருநாளாகும். எனவே கடந்த ஆண்டு 12வது திங்கள் முதல் இவ்விழாவைக் கொண்டாட அவர்கள் ஆயத்தப்படுத்துகின்றனர். அத்தியாவசிய பொருட்களை வாங்கி, guoziஎன்ற உணவு சமைத்து, புத்தாண்டுக்கு முந்தைய மாலையிலேயே சுற்றுபுறங்களைத் துப்புரவு செய்கின்றனர்.