நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட திபெத் தன்னாட்சிப் பிரதேசத்திலான மக்கள் தங்கு தடையின்றி குளிர்காலத்தை சமாளிப்பதை உத்தரவாதம் செய்து, சாலைகளை செப்பணிட்டு, வீடுகளை கட்டியமைக்கும் வகையில், நிதியை திரட்ட திபெத் அரசு ஆக்கப்பூர்வமாக பாடுபடுகின்றது. திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் லாசா நகராட்சிக் கட்சிக் கமிட்டியின் செயலாளர் Qin Yizhi அண்மையில் இவ்வாறு தெரிவித்தார்.
அகடோபர் 6ம் நாள் திபெத்தின் Dang Xiong பிரதேசத்தில் நிலநடுக்கம் நிகழ்ந்த பின், திபெத்தின் பல்வேறு வாரியங்கள் பேரிடர் நீக்கம் மற்றும் மீட்புதவிப் பணியில் விரைவாக பங்கெடுத்து, கூடாரம், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட உடனடியாக தேவைப்படும் நிவாரணப் பொருட்களை ஏற்பாடு செய்தன. தற்போது, பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் உரிய முறையில் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.
|