• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-13 13:45:39    
2008 ஷாங்ஹாய் ஸ்னுகர் போட்டி

cri
2008ம் ஆண்டு ஷாங்ஹாய் ஸ்னுகர் போட்டி, 5ம் நாளிரவு, சீனாவின் கிழக்குப் பகுதியிலுள்ள ஷாங்ஹாயில் முடிவடைந்தது. வேல்ஸ் வீரர் வால்டென் சாம்பியன் பட்டம் பெற்றார்.

அன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், வால்டென் சிறப்பாக விளையாடி, 10-8 என்ற ஆட்ட கணக்கில், உலக தரவரிசையில் முதலிடம் வகித்த பிரிட்டன் வீரர் ஓ சுலிவான்னைத் தோற்கடித்து, சாம்பியன் பட்டம் பெற்றார். வால்டென் பெறும் முதல் தரவரிசை போட்டியின் சாம்பியன் பட்டம் இதுவாகும்.
ஸ்பெயின் கால்பந்து அணிகளுக்கிடையிலான 6வது சுற்றுப்போட்டிகள் 6ம் நாள் விடியற்காலை முடிவடைந்தன. வெற்றி பெற்ற, Valencia அணி, தரவரிசையின் முதலிடத்தில் தொடர்ந்து வகிக்கின்றது.

அன்றைய போட்டியில் Valencia அணி 1-0 என்ற கோல் கணக்கில் Real Valladolid அணியை தோற்கடித்தது. Fernandes தான் இந்த ஒரு கோலை அடித்தார்.
2008ம் ஆண்டு ஹாய்நான் தீவு சுற்றிவளையும் மிதிவண்டி போட்டியின் பரிசுத்தொகை 1 இலட்சத்து 50 ஆயிரத்திலிருந்து 2 இலட்சம் அமெரிக்க டாலர் வரை அதிகரிக்கும். இப்போட்டியில் கலந்துகொள்ளும் அணியின் எண்ணிக்கை, பல முறை நடைபெற்ற கடந்த போட்டிகளை விட அதிகமாகும் என்று இப்போட்டியின் அமைப்பு குழு 6ம் நாள் அறிவித்தது.

சர்வதேச மிதிவண்டி போட்டியுடன் தொடரவும், இப்போட்டியின் உலகப் புகழை உயர்த்தவும், இப்போட்டியின் துவக்க மற்றும் நிறைவு இடம், சீனாவில் புகழ்பெற்ற சேன் யா நகரில் அமைக்கப்பட்டது. 20 மிதிவண்டி அணிகளைச் சேர்ந்த 140 வீரர்கள் இப்போட்டியில் கலந்துகொள்வர் என்று ஹாய்நான் மாநிலத்தின் பண்பாட்டு விளையாட்டு ஆணையத்தின் தலைவர் fan xiao jun தெரிவித்தார்.
கடந்த போட்டிகளை விட, இப்போட்டியில் கலந்துகொள்ளும் அணிகளின் விளையாட்டு திறன் உயர்வாகும்.
நவம்பர் 11ம் நாள் துவங்கவுள்ள இப்போட்டியின் நீளம் ஆயிரத்து 260 கிலோமீட்டராகும். இது 9 நாள் நீடிக்கும்.