• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-14 08:56:11    
ஒலிம்பிக்கில் சீனப் பண்பாட்டு அம்சங்கள்

cri

ஒலிம்பிக் தீபக்கோல்

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் சிறப்பம்சங்களில் ஒன்று இதன் தீபத்தொடரோட்டம். பல்வேறு நாடுகளை சுற்றிவந்த இந்த தீபம் ஒலிம்பிக்கின் உலகு தழுவிய ஏற்பையும், ஆதரவையும் நமக்கு எடுத்தியம்பியது. பெய்ஜின் ஒலிம்பிக் போட்டிக்கான ஒலிம்பிக் தீபத்தை தலையில் சுமந்த அந்த தீபக்கோலை பற்றி சில தகவல்கள். ஒலிம்பிக் தீபத்தொடரோட்டத்தில் பயன்படுத்தப்பட்ட தீபக்கோல், சீன மணம் கமழும், சீன கலைசிறப்பும், தொழில்நுட்ப நேர்த்தியும் ஒன்றிணைந்த ஒரு படைப்பாகும். பசுமையான ஒலிம்பிக், மக்கள் ஒலிம்பிக், உயர் தொழில்நுட்ப ஒலிம்பிக் ஆகிய கருத்துக்களை வெளிப்படுத்துவதாக இந்த தீபக்கோல் அமைந்தது. காகிதச்சுருள் வடிவில், அதிர்ஷ்ட மேகங்கள் பொறிக்கப்பட இணக்கத்தை அடையாளப்படுத்தியது இந்த தீபக்கோல். அதிர்ஷ்ட மேகங்கள் அல்லது மங்கல மேகங்கள் பொதுவாக சீன பழங்கதைகளில் பயன்படுத்தப்பட்ட அடையாளங்களாகும். பொதுவாக இந்த பழங்கதைகளில் வரும் தேவர்கள், கடவுளர்கள் எல்லாம் இந்த மங்கல மேகங்களின் மீது அமர்ந்தவர்களாய் வர்ணிக்கப்பட்டனர். இந்த மங்கல மேகங்கள் ஆசீரையும், சமூக இணக்கத்தையும் கொண்டு வருவதாக சீன மக்கள் நம்புகின்றனர், எதிர்பார்க்கின்றனர். சீனாவின் நான்கு மிகப்பெரிய கண்டுபிடிப்புகளில் ஒன்றாக காகிதம் அல்லது தாளின் சுருள் போன்று காணப்படும் இந்த தீபக்கோல், சீன நாகரிகத்தை உலகுக்கு வெளிப்படுத்தும் நோக்கில் தேர்வு செய்யப்பட்டது. பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிக்கான தீபக்கோல்தான் ஒலிம்பிக் வரலாற்றில் சிவப்பு நிறத்தை கொண்ட முதல் தீபக்கோலாகும். சீன மக்களது வாழ்வில் செந்நிறம் ஆழ வேரூன்றியுள்ளதும் உலக மக்களுக்குமே கூட செந்நிறம் என்றால் சீனா நினைவுக்கு வரத்தான் செய்கிறது. வெள்ளியாலான இந்த தீபக்கோலில் செந்நிற மேகங்கள் பொறிக்கப்பட்டமை, பண்டைய சீனாவையும், நவீன உலகையும் அடையாளப்படுத்துவதாக அமைகின்றன.


1 2