• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-14 09:33:56    
நேயர்களின் கருத்துக்கள்

cri

கலை: இலங்கை காத்தான்குடி ஏ. எஃஃப். ஷிஃப்னா எழுதிய கடிதம். மனதை துள்ளவைக்கும் நிகழ்ச்சிகளை வழங்கும் சீன வானொலியை கேட்டு நான் பயனடைந்து வருகிறேன். உணவு அரங்கம் நிகழ்ச்சியை இல்லதரசிகளுக்கு உதவக்கூடியதய் அமைத்து, உடல் நலத்துக்கு தேவையான நல்ல உணவு வகைகளை பற்றி அறியத்தருவது சிறப்பு.
க்ளீட்டஸ்: கவிநிலா சீன வானொலி நேயர் மன்றத்தினர் அனுப்பிய ஜூலை திங்களில் நடைபெற்ற கூட்டம் பற்றிய அறிக்கை.
1. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியும், மீட்பு மற்றும் புனரமைப்புப் பணிகளை விரைவாக மேற்கொண்ட சீன அரசுக்கு பாராட்டு கூறியும் தீர்மான நிறைவேற்றப்பட்டது.
2. பெய்சிங் ஒலிம்பிக் போட்டிக்கும், சீன வானொலி நடத்தும் அழகாஅ குவாங்சி எனும் பொது அறிவுப்போட்டிக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
3. பொது அறிவுப்போட்டிக்கான விடைத்தாள் சேகரித்து அனுப்புவது பற்றி விவாதிக்கப்பட்டது.


கலை: இலங்கை காத்தான்குடி ஏ. ஆர். தஸ்பீனா எழுதிய கடிதம். சீன வானொலியின் நேயராக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். சீனாவை பற்றி அதிகம் தெரிந்துகொள்ளாதவர்களுக்கு சீன வரலாற்றை தொகுத்து அளிக்கும் சீன வரலாற்றுச் சுவடுகள் நிகழ்ச்சியும், சீனாவில் இன்பப்பயணம், சீனப் பண்பாடு ஆகிய நிகழ்ச்சிகளும் பெரிதும் உதவுகின்றன. அறிவியல் கல்வி மற்றும் நலவாழ்வுப் பாதுகாப்பு சிறப்பான தகவல்களை அறிந்துகொள்ள முடிகிறது. வரலாற்றுச் சுவடுகள் நிகழ்ச்சியிலான தகவல்கள் மறு ஒலிபரப்பு செய்யப்படத்தக்கவை.
க்ளீட்டஸ்: நட்புப்பாலம் நிகழ்ச்சி குறித்து கீழ்குந்தா கே. கே. போஜன் எழுதிய கடிதம். ராணி வார இதழின் ஆசிரியாராக இருந்து ஓய்வு பெற்ற திரு. மாரிசாமி அவரது மனைவியாருடன் சீனப் பயணம் மேற்கொண்டது பற்றி கலையரசி மற்றும் தமிழன்பன் அவர்களுடனான பேட்டியில் தெரிவித்தார். சீன மொழி தெரியாத நிலையிலும் ஆங்கிலம் தெரிந்த ஒருவரின் துணையோடு சீனாவை சுற்றிப்பார்த்தை குறிப்பிட்டார். மேலும் சிறியதா பெரியதா என்று பார்க்காமல் உணவருந்த எல்லா ஹோட்டல்களுக்கும் செல்லும் பழக்கம் கொண்டுள்ளதை ஒரு ஆலோசனையாக கூறி, நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்த வழி கூறினார். எந்த நாட்டிற்கு சென்றாலும் அந்த நாட்டு மக்களையும், பண்பாட்டையும், உணவு வகைகளையும் அறிந்துகொள்ள அவரது இந்த யோசனை உதவும். சீனாவில் சிறிய ஹோட்டலோ, குறுவீதியோ எதுவாக இருப்பினும் சுத்தமாக வைத்திருப்பதை அவர் குறிப்பிட்டார். நேயர்களாகிய நாம் கூட, நம்மை சுற்றியுள்ள இடங்களை அப்படி சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும். யார் இதை செய்தவர்கள் என்று கேட்கும்போது சீன வானொலி நேயர்கள் என்று மற்றவர் கூறும்படி நாம் செய்யவேண்டும்.


கலை: சீன வரலாற்றுச் சுவடுகள் நிகழ்ச்சி குறித்து இலங்கை கினிகத்தேனை எம்.பி.மூர்த்தி எழுதிய கடிதம். சீனாவின் திபெத் பிரதேசம் முன்பு எப்படி இருந்தது. சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியின்றி மக்கள் மிகவும் இன்னலுற்ற நிலை, அவர்கள் அமைதியான விடுதலை பெற்ற பின் எப்படி மாறியது. திபெத் மக்களின் சமூக வாழ்வும், பொருளாதாரமும் முன்னேற சீன அரசு மேற்கொண்ட முயற்சிகள். இவற்றையெல்லாம் சீன வரலாற்றுச் சுவடுகள் நிகழ்ச்சியின் மூலம் அறிய முடிந்தது. அறிவிப்பாளர் தேன்மொழி சிறப்பாக தொகுத்தளித்தார். அவருக்கும், தமிழ்ப்பிரிவுக்கும் நன்றி.
க்ளீட்டஸ்: மணக்கால் இரா. அன்பழகன் எழுதிய கடிதம். மலர்ச்சோலை நிகழ்ச்சியில், சீன மருத்துவத்தை பற்றிய தகவல் சிறப்பாக இருந்தது. குறிப்பாக சீனப் பாரம்பரிய மருத்துவத்தின் மகிமை. வெளிநாட்டினர் அதன் மீது கொண்ட ஆர்வம் பற்றி அறிய முடிந்தது. ஜெர்மானியர்கள் சீனப் பாரம்பரிய மருத்துவத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டுள்ளதையும், மேற்கத்திய நாடுகளில் சீனப் பாரம்பரிய மருத்துவம் பரவியிருப்பதையும் அன்றைய மலர்ச்சோலை நிகழ்ச்சியின் மூலம் அறிந்துகொண்டேன்.


கலை: சீன உணவு அரங்கம் நிகழ்ச்சி பற்றி சென்னை 17, என். ராஜேந்திரன் எழுதிய கடிதம். மீனும் பட்டாணியும் கலந்த ஒரு சீன உணவு வகை பற்றிய அறிமுகம் கேட்டோம். ஆற்று மீனை பயன்படுத்தினால் நல்லது என்ற குறிப்புடன் வழங்கப்பட்ட அன்றைய சீன உணவு தயாரிப்புமுறையை கேட்டபோது, மீனும் பட்டாணியும் கலந்ததால், அந்த உணவை மீன்சுண்டல் என்றே அழைக்க தோன்றியது. சுவையான மீன்சுண்டல் உணவு பற்றிய தகவலுக்கு நன்றி.
க்ளீட்டஸ்: அறிவியல் கல்வி மற்றும் நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி குறித்து நெம்மேலி ஆர். சுரேஷ்குமார் எழுதிய கடிதம். உயர் வேளாண் அறிவியல் தொழில்நுட்ப மண்டலம் பற்றிய விரிவான தகவல்களை கேட்டேன். தொழில்நுட்பம் என்பது புதிய கண்டுபிடிப்புகளை அறிந்துகொண்டு பயன்படுத்துவது மட்டுமல்ல. உணவுத்தேவைக்கும் உரிய பங்களிக்கும் வகையில் நாடு தன்னிறைவு காண அறிவியலை பயன்படுத்துவது அவசியம். அந்த வகையில் உயர் வேளாண் அறிவியல் தொழில்நுட்ப மண்டலங்கள் உதவ முற்படுகின்றன என்பதை அறிந்துகொண்டேன். குறைந்த நிலப்பரப்பில், அதிக விளைச்சலை பெற முயலும் திட்டம் பற்றிய தகவலையும் நிகழ்ச்சியில் கேட்டேன். சீன அரசின் இந்த சேவை தொடரட்டும். உணவுத்தேவை நிறைவு காணட்டும்.
கலை: தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி குறித்து ஆண்டரசன்பட்டி கே. எம். ராஜு எழுதிய கடிதம். ஒரு ஆசிரியை மாணவனுக்கு அருகில் இருந்து பாடம் சொல்லிக்க்கொடுப்பது போல், தமிழ் மொழியில் சீன மொழியை கற்பிக்கும் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. மிகவும் தெளிவாக புரியும் விதத்தில் சீன மொழியின் சொற்களை உச்சரித்து விளக்குவது சிறப்பு. தொடரும் சீன வானொலியின் சேவைக்கு வாழ்த்துக்கள்.
அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் பாம்புகள் பற்றிய தகவல் மிகச் சிறப்பாக இருந்தது.


....மின்னஞ்சல்.......
......முனுகப்பட்டு.பி.கண்ணன்சேகர்......
" இந்தியாவின் கொல்கத்தாவில் சீனத் துணைத் தூதரகம், தொடங்கப்பட்டதை அறிந்து கொண்டேன். இந்த தொடக்க விழாவில் சீன வெளியுறவு அமைச்சர் யாங் ச்சியே ச்சு, இந்திய மேற்கு வங்க மாநில ஆளுநர் கோபாலகிருஷ்ணகாந்தி, மற்றும் உள்ளூரிலுள்ள பல்வேறு துறையினர், அங்கு வாழ்கின்ற சீனர்களின் பிரதிநிதிகள் ஆகியோர்,கலந்து கொண்டது சிற‌ப்புகுறிய‌தாகும்.
இது சீன-இந்திய உறவுக்கு புதிய வேகம் தரும் என்று யாங் ச்சே ச்சி தமது உரையில் கூறிய‌து ம‌கிழ்ச்சியான‌ செய்தியாகும்.


……தென்பொன்முடி தெ.நா.மணிகண்டன்……
நமது நிகழ்ச்சிகளில் அழகான குவாங்சி எனும் பொது அறிவுப் போட்டிக்கான இரண்டாவது கட்டுரையை கேட்டேன். இந்த கட்டுரைகள் மூலம் குவாங்சி மாநிலத்தின் அழகை பற்றி அறிந்துகொள்ள முடிந்தது.
.....பாண்டிச்சேரி ஜி. ராஜகோபால்......
செவிப்புலன்ற்ற சிங் குயின் அம்மையார் பற்றிய சீன மகளிர் நிகழ்ச்சியை கேட்டு ரசித்தேன். செவித்திறனற்ற ஆசிரியராக பணியில் இணைந்து, செவிப்புலனற்ற, வாய் பேசமுடியாத குழந்தைகளிடம் அன்பு செலுத்தி, அவர்களுக்கு தன்னம்பிகையை ஊட்டி கல்விப்பணி செய்து வரும் அவர் உண்மையில் பாராட்டப்பட வேண்டியவர். உன்னதமான, புதிய செய்தித் தகவல்கள் அனைத்தையும் நேயர்களான எங்களுக்கு அளித்து வரும் சீன வானொலிக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்!
......ஊட்டி; எஸ்.கே.சுரேந்திரன்......
செய்தித்தொகுப்பு நிகழ்ச்சியில் பெய்சிங் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டி பற்றி கேட்டேன். உலகின் பல்வேறு நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் ஆகியோர், பெய்சிங் பாராலிம்பிக் போட்டியின் அமைப்புப் பணியை வெகுவாக பாராட்டியதை அறிந்து மகிழ்ந்தேன்.
நடப்புப் போட்டியில் மொத்தம் 6000ற்கும் அதிகமான சீன மற்றும் வெளிநாட்டு செய்தியாளர்கள் இப்போட்டியை பற்றி அறிவிப்பதையும், இவ்வெண்ணிக்கை பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் வரலாற்றில் மிக அதிகமானது என்பதையும், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியுடன் ஒப்பிடும் போது பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் மீதான‌ மக்களின் ஆர்வம் சம நிலையில் காணப்படுகிறது என்பதையும் இந்த நிக‌ழ்ச்சியின் மூலம் அறிந்து கொண்டேன்.


......ஊட்டி,எஸ்.நித்தியா......
கடந்த நூற்றாண்டின் 90ம் ஆண்டு முதல் கான் சூ மாநிலத்தின் இயற்கை எரியாற்றல் ஆய்வகம் சூரிய ஆற்றல் தொழில் நுட்பத்தின் பயன்பாட்டுக்கான சர்வதேச பயிற்சியை நடத்தி வருவதையும். இது வரை 20பயிற்சி வகுப்புகள் நடந்துள்ளன எனவும் அறிந்தேன். இதில் கடந்த 60 நாட்களில் ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, உள்ளிட்ட 35 நாடுகளைச் சேர்ந்த 53 மாணவர்கள் சீனாவின் கான் சூ மாநிலத்தில் சூரிய ஆற்றல் தொழில் நுட்பத்தின் பயன்பாட்டுக்கான பயிற்சியை பெற்றதையும், பயிற்சியின் போது சீன மற்றும் உலகின் பல்வேறு நாடுகளின் சூரிய ஆற்றலின் ஆய்வுச் சாதனை தற்போதைய பயன்பாட்டு நிலைமை, வளர்ச்சி போக்கு ஆகியற்றையும் சூரிய எரியாற்றல் பற்றிய நடைமுறை தொழில் நுட்பத்தையும் அறிவையும் அவர்கள் முக்கியமாக கற்றுக்கொண்டதையும் அறிந்து மகிழ்ந்தேன். இயற்கை எரியாற்றலை அதிக அளவில் பயன்படுத்துவதிலும், சுற்றுச்சுழலை பாதுகாப்பதிலும் உலகின் முன்னோடியாக விளங்கும் சீனாவில் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மதுரை அண்ணாநகர் ஆர்.அமுதாராணி
அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் பிற மொழி அறியும்
தேனீக்கள் பற்றி ஒலிப்பரப்ப கேட்டேன். நமது தேவைகளை நாம் பிறருக்கு தெரிவிக்க நாம் பேசும் மொழிகள் போல் தேனீக்களுக்கு நடனங்கள் இருக்கின்றன என்று ஒர் ஆய்வு தெரிவிக்கிறது. பிறமொழி அறியும் தேனீக்கள் என்ற நிகழ்ச்சியின் மூலம் தேனீக்கள் எப்படி பிற கண்டங்களை சேர்ந்தனவாய் இருப்பினும் அவற்றின் நடனமொழியை புரிந்துகொள்ள அவை முற்படுகின்றன என்பதை அறிந்துகொள்ள முடிந்தது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளின் பரினாம வளர்ச்சிக்கு பின்னரும் நம்மால் அவற்றையெல்லாம் சரியாக புரிந்து கொள்ள முடியாமல் இருப்பது வியப்பான விடயமே.