• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-15 09:27:25    
அவனை பதவிநீக்கி அவ்விடத்தே நீ அமரு

cri
கிமு 210 ஆம் ஆண்டில், ச்சின் வம்சத்தின் முதல் பேரரசர் தனது ஆட்சியின் இறுதியாண்டின் பயணமாக கள ஆய்வு செய்ய குய்ச்சிக்கு சென்றார். செல்லும் வழியே ச்ழெ ஆற்றை கடந்து சென்றார். அதன்போது ஷியாங் யுவும், அவனது மாமன் ஷியாங் லியாங்கும் பேரரசர் மாட்சியுடன் படைகளின் அணிவகுப்பில் கடந்து சென்றதை காணச்சென்றனர். பேரரசரின் படைமாட்சியை கண்ட ஷியாங் யு, அவனது மாமனிடம் பேரரசரை பதவி நீக்கி அவரிடத்தில் நான் இருக்க வாய்ப்பு உண்டா என்று கேட்க, அவசர அவசரமாக ஷியாங் யுவின் வாயை பொத்திய அவனது மாமன் ஷியாங் லியாங், இதைப்போல் எங்கு பேசித்திரியாதே, பிறகு நம் குடும்பம் முழுவதையும் பலி கொடுக்க நேரிடும் என்று எச்சரித்தான். ஆனால் அப்போது முதல் ஷியாங் யுவை மகத்தான மனிதனாக வரக்கூடியவன் என்றுணர்ந்து மதிக்கத்தொடங்கினான் ஷியாங் லியாங். காலப்போக்கில் மாபெரும் ச்சின் வம்சத்தை ஆட்சியிலிருந்து நீக்கிய போராளிப்படையின் தலைவனாக இருந்தவன் அதே துடுக்கான ஷியாங் யுதான்.
இதுவே பிற்காலத்தில் ஒருவனை அப்புறப்படுத்தி அவனது இடத்தை பிடிப்பதை சுட்டிக்காட்ட qu er dai zhi அவனை பதவிநீக்கி அவ்விடத்தே நீ அமரு என்று பயன்படுத்தப்பட்டது.