• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-15 10:40:08    
உலக மகளிர் டென்னிஸ் தரவரிசை

cri
உலக மகளிர் டென்னிஸ் விளையாட்டின் போர்ஷெ போட்டி, 5ம் நாள் ஜெர்மனியின் ஸ்துத்கார்த் நகரில் முடிவடைந்தது. செர்பிய வீராங்கனை ஜான்கோவிக் சாம்பியன் பட்டம் பெற்றார்.

இறுதிப் போட்டியில் அவர் 2-0 என்ற ஆட்டக் கணக்கில் ரஷியாவின் புகழ்பெற்ற வீராங்கனை பெட்ரோவாவை தோற்கடித்தார்.
இப்போட்டிக்குப் பின், உலக மகளிர் டென்னிஸ் தரவரிசையில் ஜான்கோவிக் முதலிடத்தில் உள்ளார்.
2008ம் ஆண்டு ஆசிய 16 வயதுக்குட்பட்டவருக்கான கால்பந்து போட்டியின் C பிரிவின் போட்டி, 5ம் நாள் உஸ்பெக்ஸ்தானில் நடைபெற்றது. சீன அணி, 2-1 என்ற கோல் கணக்கில் துர்க்மேனிஸ்தான் அணியை தோற்கடித்து, முதல் வெற்றி பெற்றது.

இவ்வாட்டத்தியில் சீன அணி, 1 கோல் பெற்று பின்தங்கி இருந்த நிலையில், nan yun qi, guo yi இரு வீரர்கள் அடித்த கோல்களால், வெற்றி பெற்றது.
இப்போட்டி, அக்டோபர் 18ம் நாள் முடிவடையும். மொத்தமாக 16 அணிகள் கலந்துகொள்கின்றன. சீனா, துர்க்மேனிஸ்தான், ஆஸ்திரேலியா, சௌதி அரேபியா ஆகிய 4 அணிகள், C குழுவில் இடம்பெற்றுள்ளன.
2008ம் ஆண்டு முதல் உலக அறிவாற்றல் விளையாட்டுப் போட்டியின் ஆடவர் சீன சதுரங்க ஆட்டம், 6ம் நாள் முடிவடைந்தது. சீன வீரர் வாங் யாங் தங்கப்பதக்கம் பெற்றார். இது, இப்போட்டியில் சீனா பெற்ற முதல் தங்கப்பதக்கமாகும்.
சீன வீரர் ஜியாங் சுன், வெள்ளிப்பதக்கம் பெற்றார்.

8ம் நாள் நடைபெற்ற ஆடவர் சதுரங்க போட்டியில் சீனாவின் வீரர் பு சியாங் சி, இப்போட்டியில் சீனாவிற்கு 2வது தங்கப்பதக்கம் பெற்று தந்தார். மகளிர் சதுரங்க போட்டியில் சீனாவின் வீராங்கனை சாவ் ஷு வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
முதல் உலக அறிவாற்றல் விளையாட்டுப் போட்டி, அக்டோபர் 3 முதல் 18ம் நாள் வரை பெய்ஜிங்கில் நடைபெறுகிறது. இப்போட்டியில், சீன சதுரங்கம், சதுரங்கம், சீன செக்கர்ஸ், கோ விளையாட்டு, BRIDGE என்ற சீட்டு விளையாட்டு ஆகிய போட்டிகளை கொண்டது. 143 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 3000க்கு மேலான வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இப்போட்டியில் கலந்துகொள்கின்றனர்.