திபெத் தன்னாட்சி பிரதேசம் தொல் பொருட்களுக்கான பாதுகாப்பு, பயன்பாடு மற்றும் நிர்வாகப் பணிகளை நடுவண் அரசின் பேராதரவை பெற்று, ஆக்கப்பூர்வமாக மேற்கொள்கின்றது. போத்தலா மாளிகை, லோபுலின்கா கோயில், சாஜா மடம் ஆகிய மூன்று முக்கிய தொல் பொருள் கட்டிடங்களையும், இதர முக்கிய தொல் பொருள் கட்டிடங்களையும் சொப்பனிட, சீனா சுமார் 100கோடிய யுவானை ஒதுக்கீடு செய்துள்ளது
திபெத் தன்னாட்சி பிரதேச அரசிலிருந்து கிடைத்த இத்தகவல் அறிந்தது. 2002ம் ஆண்டு முதல் இது வரை, மூன்று முக்கிய தொல் பொருள் கட்டிடங்களைச் செப்பனிடும் பணிக்காக சீனா ஒதுக்கிவைத்த தொகை 38கோடி யுவானாகும்.
தவிரவும், 180 முக்கிய திட்டங்கள் உள்ளிட்ட திபெத்தின் முக்கிய தொல் பொருள் கட்டிடங்களைச் செப்பனிடும் திட்டப்பணிகளுக்கு, 57கோடி யுவான் மதிப்புள்ள சிறப்பு நிதிக்கு சீனா ஏற்பாடு செய்துள்ளது.
|