• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-16 19:58:47    
அதிகமாகும் செல்லிடபேசி பயன்பாடு

cri
அதிகமாகும் செல்லிடபேசி பயன்பாடு

130 கோடி மக்கள்தொகை கொண்ட சீனாவில் 59.2 கோடி மக்கள் செல்லிடபேசி பயன்படுத்துவோராக இருக்கின்றனர். மொத்த மக்கள்தொகையில் இது ஏறக்குறைய பாதியாகும். செல்லிடபேசி கட்டணம் குறைந்துள்ளதால் இவ்வாண்டின் முதல் ஐந்து திங்களில் 44.8 மில்லியன் பேர் செல்லிடபேசி பயன்படுத்த தொடங்கியுள்ளதாக தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை தெரிவித்தது. இந்த ஐந்து மாதங்களிலும் பிரிந்த 330.6 பில்லியன் யுவான் (48 பில்லியன் அமெரிக்க டாலர்) கட்டணத்தொகை கடந்த ஆண்டைவிட 9.6 விழுக்காடு அதிகமாகும் என்று தொலைபேசி வாரியம் தெரிவித்தது. அதேவேளை தொலைபேசி துறையிலான நிரந்தர முதலீடு 2.7 விழுக்காட்டிலிருந்து 75.1 பில்லியன் யுவான் (11 பில்லியன் அமெரிக்க டாலர்) ஆக உயர்ந்துள்ளது.

எதிர்பாராத வாய்ப்பு

விமானத்தில் பணிபுரிந்துவரும் பிரான்ஸ் நாட்டு பெண்மணி ஒருவர் தான் உண்ட கிட்கேட் இனிப்பு மூலம் பெரும்பேறு பெற்றுள்ளார். ஆம். 32 வயதான மத்தில் தி எஃப்ரோன் என்பவர், 2010 ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ள விண்வெளி சுற்றுலாப் பயணத்தில் பங்குபெறும் வாய்ப்பை பெற்றுள்ளார். அவர் உண்ட மிட்டாய் பொதியில் எழுதப்பட்டிருந்த எண்கள் குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்டு கிடைத்துள்ள இந்தவாய்ப்புக்கு நெஸ்லே நிறுவனத்தின் கிட்கேட் மிட்டாய் உதவி வழங்குகிறது.

உள்ளூர் அங்காடியிலிருந்து கிட்கேட் மிட்டாய் வாங்கிய மத்தில் தி எஃப்ரோன், அதனை உண்டபின், பொதியை குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டார். ஆனால் இரண்டு மனிநேரம் கடந்தபின் அந்நிறுவனம் அறிவித்திருந்த விண்வெளி சுற்றுப்பயண வாய்ப்பு நினைவுக்கு வரவே குப்பைத்தொட்டியிலிருந்து மிட்டாய் பொதி தாளை எடுத்து அதில் எழுதப்பட்டிருந்த எண்களை கூறி விசாரித்திருக்கிறார். என்னே வியப்பு! விண்வெளி சுற்றுப்பயண வாய்ப்பு பெறுவதாக அவருடைய எண் தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. இதன்மூலம் விண்வெளி சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்யும் விண்கல நிறுவனம் அமைந்துள்ள Oklahoma வில் நான்கு நாட்கள் பயிற்சி மற்றும் விண்வெளியின் வெளிப்புறமென சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள 100 கிலோமீட்டர் உயரத்தில் விண்கலத்தில் பறக்கவும் அவர் வாய்ப்பு பெறுகிறார். அப்போது காற்றில்லா வெற்றிடத்தில் மிதக்கும் அனுபவம் பெறுவதோடு, சூரியனுக்கு கீழ் உருண்டையாய் உள்ள பூமியின் மிக விரிந்த காட்சியையும் அவர் காண முடியும்.