• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-16 09:54:55    
புதிராகவுள்ள சி சியா வம்சத்தை

cri
கி.பி 11ம் நூற்றாண்டின் துவக்கத்தில், சீனாவின் வடமேற்கு பகுதியில், சி சியா வம்சம் உருவாகி வளர்ந்தது. உலகில் மிக பண்டைய எழுத்துக்களை மாற்றி பொருத்தும் அச்சுப்பொருட்கள், இதுவரை முழுமையாக பாதுகாக்கப்பட்ட ஒரேயொரு பண்டைக்கால சீன நாட்டின் சட்டம் உள்ளிட்ட மதிப்புக்குரிய தொல் பொருட்களை, இந்த வம்சம் விட்டுச்சென்றுள்ளது. புதிர் போன்ற சி சியா வம்சத்தின் சிதிலங்கள், சீனாவின் நிங் சியா ஹுய் தன்னாட்சி பிரதேசத்தில் அமைந்துள்ளன. இன்றைய நிகழ்ச்சியில், நாம் அவற்றைப் பற்றி பார்க்கலாம்.

11ம் நூற்றாண்டின் துவக்கம் முதல் 13ம் நூற்றாண்டின் துவக்கம் வரையான இரண்டு நூற்றாண்டுகளில், நாடோடிகளாக மேய்ச்சல் வாழ்வைக் கொண்ட சியாங் இனத்தின் கிளையான தாங் சியாங் இனத்தவர்கள், தற்போதைய நிங் சியா ஹுய் தன்னாட்சி பிரதேசத்தை மையமாக கொண்ட சீனாவின் விடமேற்கு பகுதியில் சி சியா வம்சத்தை நிறுவினர். அப்போதைய ஜின் மற்றும் தெற்கு சூங் வம்சங்களுடன் சேர்ந்து ஒரே காலக்கட்டத்தில் இது நிலவியது. பிறகு, மங்கோலிய இராணுவப்படையால் சி சியா வம்சம், தோற்கடிக்கப்பட்டு, சீனாவின் ஹேன் இனத்திலும் இதர இனங்களிலும் படிப்படியாக கலந்துள்ளது.
சி சியா மக்கள், வளர்ச்சி மிக்க நாகரிகத்தை உருவாக்கியுள்ளனர். அவர்களின் தலைச்சிறந்த எழுத்துக்களால், அப்போதைய முன்னேறிய தொழில் நுட்பத்தைக்

கற்றுத்தேர்ந்துள்ளனர். ஏளாரமான தலைச்சிறந்த தொல்பொருட்கள், மதிப்புள்ள பண்டைகால நூல்கள், வரலாற்று சிதிலங்கள் ஆகியவை இதை எடுத்துக்காட்டியுள்ளன. அவற்றில், நிங் சியா ஹுய் தன்னாட்சி பிரதேசத்தின் தலைநகரான யின்சுவானின் மேற்கு புறநகரிலுள்ள சி சியா பேரரசரின் கல்லறை சிதிலங்கள் குறிப்பிடத்தக்கவை. 53 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், 9 மன்னர்களின் கல்லறைகள் ஒழுங்காக அமைக்கப்பட்டன. தவிர, 253 இணைப்பு கல்லறைகள் அவற்றைச் சுற்றியுள்ள பிரதேசத்தில் அமைந்துள்ளன. இவை, சீனாவில் இதுவரை பார்க்கப்பட முடியாத மிக பெரிய அளவிலான, தரையில் சிதிலங்கள் மிகவும் முழுமையாக உள்ள பேரரசர் கல்லறைக்களாகும். இது, கிழக்கு பிரமிடு என்று அழைக்கப்படுகிறது.

சி சியா வம்சத்தின் தொல்பொருள் ஆய்வகத்தின் ஆய்வாளர் நியூ தாசெங், சி சியா பேரரசர் கல்லறைகளைப் பார்த்ததை உணர்பூர்வமாக நினைவு கூர்ந்து கூறியதாவது:
மிகவும் பெரியதாகவும் தரிசாகவும் புதிராகவும் அவை இருப்பதை உணர்ந்து கொண்டேன். இதில் எத்தனை பொருட்கள் உள்ளதோ தெரியாது என்றார் அவர்.
கீழே வட்டமாகவும் உச்சியில் கூராகவும் முள்ள பிரமிட் போன்ற நூற்றுக்கணக்கான கூம்புகள், ஹேலன் மலைத்தொடர்களில் அமைந்துள்ளன. கடந்த ஆயிரம் ஆண்டுகளாக காற்று மற்றும் மழைகளால், அவற்றின் வடிவங்கள் படிப்படியாக சீர்குலைக்கப்பட்ட போதிலும், அதன் கட்டமைப்பு இன்னும் உறுதியாக உள்ளது.

பேரரசர் கல்லறை மண்டலத்தில், சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி மூன்று தலைச்சிறப்பியல்பான உயரமான கல் சிலைகளைச் சுற்றிப் பார்க்கின்றனர். இந்தச் சிலைகள் தற்காக உள்ளன என்பதை, பயணிகள் ஆலோசித்து யூகம் செய்கின்றனர். சீன சமூக அறிவியல் கழகத்தின் தேசிய இன ஆய்வகத்தின் ஆய்வாளர் பைய் பின் இதற்குப் பதிலளித்தார்.
அந்தக் கற்சிலைகள், மாளிகைகளின் கம்பங்களுக்கான அடிப்படைகளாகும் என்றார் அவர்.