சீனாவின் ஒவ்வொரு தேசியஇனத்துக்கும் தனிச்சிறப்பு வாய்ந்த இசைப் பண்பாடு உண்டு. 2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்துகின்ற உரிமையை பெய்ஜிங் பெற்ற பின், அத்தருணத்தைக் கொண்டாட, சீனாவின் 56 தேசிய இனங்களின் பாடல்கள் என்பதைத் தலைப்பாகக் கொண்ட தேசிய இன பாடல் ஒளிநாடாவைப் படைத்து, உலகின் பல்வேறு இடங்களிலிருந்து வரும் நண்பர்களுக்கு அன்பளிப்பாக வழங்கலாம் என்று சீனாவின் சில இசைத்துறையினர்களில் சிலர் விருப்பம் தெரிவித்தனர். இக்கருத்து பரந்த அளவில் ஆதாரவு பெற்றது
தொடர்ந்து வரும் அருமையான பிறந்த ஊர் என்ற பாடல், தூலோங் இனத்தின் நாட்டுப்புறப்பாடலாகும். தூலோங் இன மக்கள், முக்கியமாக யுன்னான் மாநிலத்தின் குங் சான் மலையின் தூலோங் ஆற்றுப் பள்ளத்தாக்கில் வாழ்கின்றனர். இவ்வினத்தின் மக்கள்தொகை குறைவே. நடனம் மற்றும் பாடல்கள் மூலம் உணர்வுகளையும், உற்பத்தி, அறுவடை செய்தல், வேட்டையாடுதல், திருமணம் முதலிய நிகழ்ச்சிகளையும் வெளிப்படுத்துவது தூலோங் இன மக்களின் வழக்கம். அருமையான பிறந்த ஊர் பாடல் பிறந்த ஊரைப் பாராட்டும் உற்சாக மிகுந்த பாடலாகும். கேட்டு ரசியுங்கள்.
|