• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-17 10:06:58    
மகௌ பூப்பந்து போட்டி

cri
7 நாள் நீடித்த 2008ம் ஆண்டு மகௌ பூப்பந்து போட்டி 5ம் நாள் நிறைவடைந்தது. சீனாவின் புதிய வீரர்கள், கலப்பு இரட்டையர், மகளிர் இரட்டையர் ஆகிய போட்டிகளில் சாம்பியன் பட்டங்களை பெற்றனர்.

சீன அணி xu chen/ zhao yun lei இணை, இறுதிப் போட்டியில் 2-0 என்ற ஆட்ட கணக்கில் சீன ஹாங்காங் அணியின் wei ren jun/zhou kai hua இணையை தோற்கடித்து, கலப்பு இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் பெற்றனர்.
சீன மகளிர் இரட்டையர் அணி cheng shu/zhao yun lei இணை, 2-0 என்ற ஆட்டக் கணக்கில், சக அணி தோழியான ma jin/wang xiao li இணையை தோற்கடித்தனர். இதன் மூலம் சர்வதேசளவில் வெளிப்படையான போட்டிகளில் தொடர்ந்து 3வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றுள்ளனர்.
ஆங்கில கால்பந்து பிரிமியர் சுற்றுப்போட்டியின் 7வது சுற்றுப்போட்டிகள் 6ம் நாள் முடிவடைந்தன. Chelsea அணி, 2-0 என்ற கோல் கணக்கில் Aston Villa அணியை தோற்கடித்து, தரவரிசையின் முதலிடத்தை பெற்றது.

அன்று நடைபெற்ற மற்றொரு போட்டியில், Liverpool அணி, 2 கோல்களை பெற்று பின்தங்கிய நிலையில், இருந்தாலும் இறுதியில் 3-2 என்ற கோல் கணக்கில் Manchester City அணியை தோற்கடித்துள்ளது.
ஜெர்மனி கால்பந்து அணிகளுக்கிடையிலான 6வது சுற்றுப்போட்டிகள் 6ம் நாள் விடியற்காலை முடிவடைந்தன. Cottbus அணி, 1-2 என்ற கோல் கணக்கில் Hamburg அணியிடம் தோல்வியடைந்தது.
சீன வீரர் சாவ் ஜியா ஈ, Cottbus அணியில் பெயர் பட்டியலில் இடம்பெற்றிருந்தும், ஆட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
Hamburg அணி தரவரிசையின் முதலிடத்தில் வகிகின்றது. Cottbus அணி 16வது இடம் பெற்றுள்ளது.

5ம் நாள் நடைபெற்ற உலக கால்பந்து சம்மேளனத்தின் 2008ம் ஆண்டு Futsal உலக கோப்பையின் ஒரு போட்டியில் சீன அணி, 2-6 என்ற கோல் கணக்கில் எகிப்து அணியிடம் தோல்வியடைந்தது. இது சீன அணி பெற்ற 2வது தோல்வியாகும்.
முதல் போட்டியில் 0-5 என்ற கோல் கணக்கில் சீன அணி, அர்ஜென்டீனா அணியிடம் தோல்வியடைந்தது. தற்போது C குழுவில் அர்ஜென்டீன அணி, முதலிடத்திலும் உக்ரைன், குய்தெமாலா, எகிப்து ஆகியவை 2வது இடத்திலும் உள்ளன. சீன அணி, கடைசி இடத்தில் இருக்கின்றது.