• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-17 10:11:54    
PING YA LI அம்மையாரின் ஒளிமயமான உலகம்

cri

PING YA LI அம்மையாரின் கண்பார்வை மிகவும் பலவீனமானது. ஊனமுற்ற குழந்தையின் தாயாகவும், வேலையை இழந்த பின் சொந்த உழைப்பைச் சார்ந்து தொழில் நடத்தும் பெண்ணாகவும் இருக்கிறார். இணையதளத்தில் சுய வலைப்பூ பக்கத்தை கொண்டுள்ளதோடு, தசை பிடிப்பவராகவும் அவர் வேலை செய்கிறார். மேலும், ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் தங்க பதக்கத்தை வென்றெடுத்த முதலாவது சீனராகவும் அவர் திகழ்கிறார். இதுதான் அவருடைய மிகப் புகழ்பெற்ற தகுநிலையாகும்.
பெய்ஜிங்கின் குளிர்காலத்தில் தட்பவெப்ப நிலை குறைவு. மேகமூட்டம் தோன்றிய நாட்கள் கொஞ்சம் அதிகம். கண் வெண்படல நோய்வாய்ப்பட்ட PING YA LI அம்மையாரைப் பொறுத்த வரை, கண்பார்வையிலான மங்கலான ஒளி வசதியாக இல்லை. இவ்வாறு ஒரு நாள் காலையிலும், கண் பார்வையற்றோருக்கு வழிகாட்டும் நாய் Luckyயின் வழிகாட்டலில், PING YA LI தனது தசை பிடிப்பகத்துக்கு சென்றார்.
PING YA LIயின் கண் பார்வையற்றோருக்கான உடல் நல தசை பிடிப்பு மையம்,

பெய்ஜிங் மாநகரின் ஹைதியன் பிரதேசத்திலுள்ள YI YUAN JU குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளது. பணியாளர் ZHANG செய்தியளரிடம் பேசுகையில், PING YA LI அம்மையார் 3 தசை பிடிப்பகங்களைக் கொண்டுள்ள போதிலும், தசை பிடித்து விடுபவர்கள், அதிகமான வாடிக்கையாளரை வரவேற்க முடியாத வேளையில், விளையாட்டு ஆடைகளை மட்டுமே அணிய விரும்பும் தனது மேலாளர் தசை பிடிக்கும் பணியில் ஈடுபடுவார் என்று கூறினார்.
பிறப்பிலிருந்தே கண் வெண்படல நோய்வாய்ப்பட்டதால், இயல்பான கண்களின் மூலம் உலகை பார்த்து ரசிக்க முடியாதது தான் PING YA LIவின் குறை. அவர் செய்தியாளரிடம் கூறியதாவது—
"என்னை உயிருடன் வளர்ப்பது மட்டுமே போதுமானது என்று எனது தாய், குழந்தை பருவத்திலிருந்தே கருத்து தெரிவித்தார்" என்றார் அவர்.
ஆனால், விளையாட்டு, அவருக்கு ஒளிமயமான ஓர் உலகத்தைக் கொண்டு வந்தது.
துவக்க பள்ளியின் போது, வேகமாக ஓடக் கூடிய PING YA LI, ஊனமுற்ற விளையாட்டு வீரர்களை தெரிவு செய்த பயிற்சியாளரால் தேர்ந்தெடுக்கப்பட்டார். உடல் நிலை நன்றாக இருந்ததால் அவர், அதிகாரப்பூர்வமாக நீளம் தாண்டுதல் பயிற்சி செய்யத் துவங்கினார். விளையாட்டு வாழ்க்கையின் தொடக்கப் பகுதியில், கடினமான பயிற்சிக்கு அப்பால், ஊனமுற்றோருக்கான சிறப்பு பயிற்சி திடல் இல்லாதது தான், PING YA LI சந்தித்த மிகப் பெரிய சிரமமாகும். அப்போது, PING YA LIயும் அவரது சக அணி தோழர்களும் சாதாரண விளையாட்டு வீரர்கள் உணவு சாப்பிடும் போதோ அல்லது ஓய்வு பெறும் போதோ மட்டுமே பயிற்சி செய்ய முடிந்தது.

துன்பம் முடிந்து இன்பம் வந்தது. சொந்த வாழ்வில் ஒளிவீசும் தருணத்தை PING YA LI வரவேற்றார். 1984ஆம் ஆண்டு ஜுன் திங்களில் அமெரிக்காவின் Los Angelesஇல் நடைபெற்ற ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் நீளம் தாண்டுதல் போட்டியில் அவர் தங்க பதக்கம் பெற்றார். ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சீனாவுக்கு பதக்கம் இல்லாத வரலாற்றை அவர் மாற்றி அமைத்தார்.
PING YA LI அம்மையாரின் தாய் அவர் 8 வயதாக இருக்கும் போது புற்று நோயால் காலமானார். அவர் செய்தியாளரிடம் கூறியதாவது—
"நான் தங்க பதக்கம் பெற்ற தருணத்தை மீண்டும் நினைவுகூரும் போது, எனது தாய் பற்றி அதிகமாக நினைக்கின்றேன்" என்றார் அவர்.
1988ஆம் ஆண்டு தனது மகனை பராமரிக்கும் வகையில், 9 ஆண்டுகள் தொடர்ந்த விளையாட்டு வாழ்க்கைக்கு PING YA LI முற்றுப்புள்ளி வைத்தார். அந்த 9 ஆண்டுகளில், மொத்தம் 10க்கு மேற்பட்ட பதக்கங்களை அவர் பெற்றிருந்தார். ஆனால், 1988ஆம் ஆண்டு, PING YA LI வேலை செய்த தொழிற்சாலையின் பொருளாதாரப் பயன் நன்றாக அமையாததால், ஒலிம்பிக் சாம்பியன் பட்டம் பெற்றிருந்த அவர், வேலையற்றவராக மாறினார். இது பற்றி அவர் கூறியதாவது—
"வெற்றி பெற்றவரின் மேடையிலிருந்து இறங்கிய பின், எனது வாழ்க்கை கடினமானது. ஆனால் நான் அப்போது இளமையோடு இருந்ததாக கருதினேன். அரசின் உதவித் தொகையைச் சார்ந்து வாழ்க்கை நடத்த நான் விரும்பவில்லை. சாதாரணமான மக்களைப் போல் வாழ்க்கை நடத்த விரும்பினேன். எனவே, நானே தொழில் நடத்தத் துவங்கினேன்" என்றார் அவர்.
சுயமாக தொழில் நடத்துவது என்பது, PING YA LI அம்மையாருக்கு ஒளிமயமான இரண்டாவது உயர் நிலையை கொண்டு வந்தது.

1999ஆம் ஆண்டு ஜுன் திங்கள் 29ஆம் நாள், பெய்ஜிங் கண்பார்வையற்றோர் பள்ளியிலிருந்து கற்றுக் கொண்ட தசை பிடிக்கும் நுட்பத்தைப் பயன்படுத்தி, தசை பிடிப்பகம் ஒன்றை அவர் திறந்தார். YI YUAN JU குடியிருப்பு பகுதியிலுள்ள மக்கள் இப்பகுதியில் அமைந்துள்ள PING YA LIயின் தசை பிடிப்பகத்துக்கு ஆதரவளிக்கின்றனர். PING YA LI அம்மையார் முழுமனதுடன் வேலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால், தொழில் நடத்தும் போக்கில் பல இன்னல்களை அவர் சந்தித்தார். அவர் கூறியதாவது—
"மூலதனம், தொழில் நடத்துவதற்கான முதலாவது முக்கிய சிரமமாகும். தொழில் நடத்தும் இடத்தைத் தேடுவது இரண்டாவது சிரமம்" என்றார் அவர்.
LIN JUN என்பவர், PING YA LI நடத்திய தசை பிடிப்பகத்தின் வாடிக்கையாளரில் ஒருவர். அவர் செய்தியாளரிடம் கூறியதாவது—
"ஊனமுற்றோர் ஒலிம்பிக் சாம்பியன் பட்டம் பெற்ற அவர், இன்னல் மிகுந்த வாழ்க்கையில் சிக்கிக் கொண்டதை நாங்கள் அனைவரும் கண்டோம். சாதாரண மக்கள் புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்ளக் கூடிய இன்னல் அது அல்ல. தொழில் நடத்துபவர் கொள்ள வேண்டிய அனைத்து திறன்களையும் அவர் கொண்டுள்ளார். விவேகத்துடனும் உற்சாகத்துடனும் அவர் இருக்கிறார். இன்னல்களைச் சந்தித்த போது அவர் எளிதாக துவண்டு போய்விடவில்லை" என்றார் அவர்.

இதுவரை, PING YA LI அம்மையாரின் வாழ்க்கை விறுவிறுப்பாகி வருகிறது. தசை பிடிப்பகங்களின் எண்ணிக்கை வளர்ந்து மூன்றாக அதிகரித்துள்ளது. ஓய்வு நேரத்தை அனுபவிக்கக் கூடிய அவர், இணையதளத்தில் சுயமான வலைப்பூ பக்கத்தைத் திறந்துள்ளார். தன்னை பற்றி அதிகமான மக்களுக்கு அறிவித்து, அனைவருக்கும் மேலும் பெரும் ஆற்றலை வழங்க அவர் விரும்புகிறார்.
PING YA LIயின் ஒளிமயமான உலகம் என்ற நம்பிக்கை தரும் வாக்கியம் அவரது இணைய வலைப்பூ பக்கத்திலான கண்ணைக் கவரும் இடத்தில் உள்ளது.
பேட்டியின் இறுதியில் PING YA LI அம்மையார் செய்தியாளரிடம் கூறியதாவது—
"ஆரோக்கியமான விளையாட்டு வீரர்களோ, ஊனமுற்ற வீரர்களோ, விளையாட்டு பயிற்சி செய்யும் போக்கில் வாழ்க்கையை கற்றுக் கொள்வதை மறக்காதீர்கள். தங்களது வாழ்க்கையை நடத்த கற்றுக் கொள்ள வேண்டும்" என்றார் அவர்.
நேயர்கள் இதுவரை, PING YA LI அம்மையாரின் ஒளிமயமான உலகம் பற்றிக் கேட்டீர்கள். இத்துடன் இன்றைய சீன மகளிர் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.