இதுவரை 42 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் ஷாங்காய் சர்வதேச பொருட்காட்சி ஆணையகத்திடம் கலை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளும் விண்ணப்பத்தை தெரிவித்துள்ளன. இவற்றில் 20க்கும் அதிகமான ஐரோப்பிய நாடுகள் தத்தமது பண்பாட்டு நடவடிக்கை திட்டத்தை அமைப்பு குழுவிடம் வழங்கின. 19ம் நாள் நடைபெற்ற சீனாவின் 10வது ஷாங்காய் சர்வதேச கலை விழா தொடர்பான உயர்வட்ட கருத்தரங்கிலிருந்து கிடைத்த தகவல் இவ்வாறு அறிவித்தது.
10வது ஷாங்காய் சர்வதேச கலை விழா
சர்வதேச பொருட்காட்சி ஆணையகத்தின் துணை தலைவர் ஹு ச்சின் ஜுன் கருத்தரங்கில் உரைநிகழ்த்துகையில் 2010ம் ஆண்டு ஷாங்காய் சர்வதேச பொருட்காட்சி நடைபெறும் போது 20 ஆயிரம் கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படும். இவற்றில் 50 விழுக்காடு வெளிநாடுகளிலிருந்து அறிமுகப்படுத்தப்படும். இது சர்வதேச அரங்கேற்ற சந்தைக்கு மாபெரும் வணிக வாய்ப்பு ஏற்படுத்துவதில் ஐயமேயில்லை என்று கூறினார். தற்போது முக்கிய நடவடிக்கை இடங்களின் கட்டுமானம் அடுத்தடுத்து துவங்கியுள்ளது. பல்வகை கலை நிகழ்ச்சிகள் பற்றி விண்ணப்பம் செய்வதும் நடைபெற்று வருகின்றது.
|