• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-20 16:38:34    
ஆசிய கலை விழா

cri
10வது ஆசிய கலை விழா, அண்மையில், மத்திய சீனாவின் ஹெநான் மாநில Kaifeng நகரில் வெற்றிகரமாக நடைபெற்றது. இணக்கமான ஆசிய, ஹெநான் மாநிலத்தில் ஒன்றுகூடி மகிழ்வது என்பது இந்த ஆசிய கலை விழாவின் தலைப்பாகும். இந்த விழாவின் போது, தலைசிறந்த கலை நிகழ்ச்சிகள், நிழற் பட கண்காட்சிகள், பல மக்களின் பண்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஹெநான் மாநிலம், மகிழ்ச்சி கடலில் மூழ்கியது.
இந்த ஆசிய கலை விழா, செப்டெம்பர் திங்களின் இறுதியில், ஹெநான் மாநிலத்தின் தலைநகரான Zhengzhou இல் துவங்கியது. சுமார் 10 நாட்களில், ஆசியாவிலிருந்த ஏறக்குறைய 22 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 36 கலைக் குழுகளின் சுமார் 2 ஆயிரம் கலைஞர்கள், தனிச்சிறப்பு வாய்ந்த 80 கலைநிகழ்ச்சிகளை அங்கேற்றியுள்ளனர்.
ஆசிய கலை விழா, சீன அரசவையால் அனுமதி வழங்கப்பட்ட முதலாவது தேசிய நிலையில் பிரதேசம் கொண்ட சர்வதேச கலை விழாவாகும். 1998ம் ஆண்டு முதல், இது வரை, ஆசிய கலை விழா, பெய்ஜிங், காங்சொ உள்ளிட்ட பல நகரங்களில் நடைபெற்றுள்ளது. கலைஞர்களும் நோஞ்சாள்களும் பல நாடுகளின் கலைநிகழ்ச்சிகளைக் கண்டுரசிக்கலாம். இதன் மூலம், அவர்கள் ஒருவரோடு ஒருவர் பரிமாற்றி கற்றுகொண்டு வருகின்றனர். இது, ஆசிய கலை விழாவின் சிறப்பாகும். இந்த ஆசிய கலை விழா, ஹெநான் மாநில Zhengzhou, Kaifeng நகரங்களில் நடைபெற்றது. மக்கள் அனைவரும் இக்கலை விழாவில் கலந்துகொள்வது என்பது இந்த கலை விழாவின் இன்னொரு சிறப்பாகும்.
இந்த கலை விழாவின் போது, பல குடியிருப்புப் பிரதேசங்கள் மற்றும் சதுக்கங்கள் இதற்கு ஆயத்தம் செய்து வருகின்றன. குடியிருப்புப் பிரதேசங்களுக்கு சென்று, கலைஞர்கள் பொது மக்களுடன் சோர்ந்து கலை நிகழ்ச்சியை அங்கேற்றியுள்ளனர் என்று ஹெநான் மாநில பண்பாட்டு வாரியத்தின் தலைவர் yangping அம்மையார் தெரிவித்தார்.
நண்பர்களே, ஆசிய கலை விழா என்ற தகவலைப் படித்த பின், உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இந்தத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.