• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-20 09:18:22    
2வது உலக பட்டதாரி மாணவர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன் போட்டி

cri
2வது உலக பட்டதாரி மாணவர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன் போட்டி 11ம் நாள் பெய்சிங் துப்பாக்கி சுடுதல் அரங்கில் முடிவடைந்தது. இறுதி நாள் போட்டியில், சீன அணி 5 தங்கம் பதக்கங்களை பெற்றது. இதில், 25 மீட்டர் மகளிர் கை துப்பாக்கி சுடும் போட்டியில், சீன வீராங்கனை Fei Fengji சாம்பியன் பட்டம் பெற்றதோடு, உலக சாதனை பதிவை உருவாக்கியுள்ளார்.

3 நாள் நீடித்த உலக பட்டதாரி மாணவர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன் போட்டியில், சீன அணி மொத்தமாக 12 தங்கப் பதக்கங்கள் உள்பட 22 பதக்கங்களை வென்று. பதக்க வரிசையில், சீனா முதலிடம் பெற்றது.
நடப்பு உலக பட்டதாரி மாணவர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன் போட்டியில் குழல் துப்பாக்கி சுடுதல், கை துப்பாக்கி சுடுதல் உள்பட 16 போட்டிகள் இடம் பெற்றன. 29 நாடுகளையும் பிரதேசங்களையும் சேர்ந்த 180 பல்கலைக்கழகங்களின் 400 பட்டதாரி மாணவ விளையாட்டு வீரர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டனர்.
2010ம் ஆண்டு ஆடவர் கால்பந்து உலக கோப்பையின் ஐரோப்பிய பிரதேசத்திலுள்ள

தேர்வாட்டங்கள் 12ம் நாள் நடைபெற்றன. 6வது குழுவில், இங்கிலந்து அணி 5-1 என்ற கோல் கணக்கில் கசகஸ்தான் அணியைத் தோற்கடித்து, 3ஆம் முறையாக வெற்றிபெற்றது. இங்கிலந்து அணி 9 புள்ளிகளைப் பெற்ற நிலைமையில், இந்த குழுவில் முதலிடம் வகிக்கின்றது.
இதர போட்டிகளில், 4வது குழுவில் ஜெர்மனி அணி 2-1 என்ற கோல் கணக்கில் ரஷிய அணியைத் தோற்கடித்தது. 5வது குழுவில், ஸ்பெயின் 3-0 என்ற கோல் கணக்கில் Estonia அணியைத் தோற்கடித்தது. 9வது குழுவில், Holland 2-0 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தை தோற்கடித்தது. ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் Holland அணிகள் தங்களது குழுவில் முதலிடம் பெற்றுள்ளன.

தவிர, 2010ம் ஆண்டு ஆடவர் கால்பந்து உலக கோப்பையின் தென் அமெரிக்க பிரதேசத்திலுள்ள தேர்வாட்டங்களின் 9வது சுற்றுக்கான ஒரு போட்டியில், உலக கால்பந்து கோப்பை போட்டியில் 5 முறை சாம்பியன் பட்டத்தை பெற்ற பிரேசில் அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெனிசுலா அணியை தோற்கடித்தது. தற்போது, தென் அமெரிக்க பிரதேசத்தின் தர வரிசையில் இது இரண்டாவது இடம் வகிக்கின்றது. Paraguay முதலிடம் பெற்றுள்ளது.