• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-22 09:23:18    
F1 கார் பந்தயத்தின் சீனப் போட்டி

cri
2008ம் ஆண்டுக்கான உலக Formula 1 கார் பந்தயத்தின் சீனப் போட்டி 19ம் நாள் சீனாவின் கிழக்கு பகுதியிலுள்ள ஷாங்காய் நகரில் முடிவடைந்தது. இப்போட்டியில், Mclaren அணியின் பிரிட்டன் வீரர் Hamilton சாம்பியன் பட்டத்தைப் பெற்றார். Ferrari அணியின் பிரேசில் வீரர் மாசா இரண்டாவது இடத்தைப் பெற்றார். அவரது அணித் தோழர் Raikkonen மூன்றாவது இடத்தை பிடித்தார். இப்போட்டிக்குப் பிறகு, 155 புள்ளிகளைப் பெற்ற நிலைமையில், Ferrari அணி போட்டியின் தரவரிசையில் முதலிடம் வகித்து வருகிறது. வீரர்கள் தரவரிசையில் Hamilton, மாசா, Kubica ஆகியோர், முன்னணியில் உள்ளனர்.
உலக Formula 1 கார் பந்தயத்தின் பிரேசில் போட்டி நவம்பர் 2ம் நாள் நடைபெறும். அந்த போட்டியில், 2008ம் ஆண்டுக்கான உலக Formula 1 கார் பந்தயத்தின் சாம்பியன் பட்டம் வழங்கப்படும்.

2010 Vancouver குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்த பணிகள் மற்றும் சந்தை வளர்ச்சி பணிகள் நாணய நெருக்கடியினால் பாதிக்கப்படவில்லை என்று போட்டியின் ஏற்பாட்டுக்குழு அண்மையில் அறிவித்தது.
புதிய நிதி ஆண்டில், நிதி பற்றக்குறை 4 கோடியே 81 இலட்சம் கனடா டாலரை எட்டியது. ஆனால், குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணிகள் ஆழமாகுடன், திட்டமிட்ட அளவில் இந்த தொகை திட்டத்திற்குட்பட்டது. முழு போட்டிக்காக 160 கோடி கனடா டாலர் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றது என்று Vancouver குளிர்கால ஒலிம்பிக் ஏற்பாட்டுக்குழு வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியது.

11வது தேசிய விளையாட்டுப் போட்டியின் அமைப்புக் குழு 13ம் நாள் சீனாவின் கிழக்குப் பகுதியிலுள்ள Ji Nan நகரில் தேசிய விளையாட்டுப் போட்டியின் தன்னார்வ தொண்டர் சின்னத்தை வெளியிட்டு, இவ்விளையாட்டுப் போட்டியில் தொண்டர்களை சேர்க்கைத் திட்டத்தை விவரித்தது. 11வது தேசிய விளையாட்டுப் போட்டிக்கான தொண்டர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை எட்டும். திட்டப்படி, இவற்றில், போட்டி மற்றும் நகர தன்னார்வ தொண்டர்கள் இடம் பெறுகின்றனர். 11வது தேசிய விளையாட்டுப் போட்டி 2009ம் ஆண்டு அக்டோபர் திங்கள் Ji Nan நகரில் நடைபெறும்.
2008ம் ஆண்டு பெய்சிங் சர்வதேச நீண்டதூர ஓட்டப்போட்டி அக்டோபர் 19ம் நாள் துவங்கும். நடப்பு போட்டியின் புதிய நெறியின் படி, பறவைக் கூடு, நீர் கன சதுரம் முதலிய 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் முக்கிய திடல்களையும் அரங்குகளையும் இது கடந்து செல்லும். 2008ம் ஆண்டு பெய்சிங் சர்வதேச மாரத்தான் நீண்டதூர ஓட்டப்போட்டியின் செய்தியாளர் கூட்டத்திலிருந்து கிடைத்த தகவல் இதை தெரிவித்தது.

நடப்புப் போட்டி அக்டோபர் 19ம் நாள் காலை 8 மணிக்கு துவங்கும். துவக்க இடம் பெய்சிங் தியென் அன் மன் சதுக்கமாகும். முடிவு இடம் தேசிய ஒலிம்பிக் விளையாட்டு மையமாகும். 29வது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பெய்சிங்கில் வெற்றிகரமாக நடைபெற்றதால், இந்த நீண்டதூர ஓட்டப்போட்டியின் நெறி ஒலிம்பிக் தனிச்சிறப்பியல்புக்கு முக்கியத்துவம் அளிக்கும். வீரர்கள் பறவைக் கூடு, நீர் கன சதுரம் முதலிய 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் முக்கிய திடல்களையும் அரங்குகளையும் கடந்து செல்வர். தவிர, புதிய நெறி போக்குவரத்து நிர்ப்பந்தத்தை தணிவு செய்வதற்கு துணை புரியும். வீரர்கள் சிறந்த சாதனைகளைப் பெறுவதற்கு இது நன்மை பயக்கும்.
2008ம் ஆண்டு பெய்சிங் சர்வதேச நீண்டதூர ஓட்டப்போட்டி சர்வதேச தடகள கூட்டமைப்பின் 8 முக்கிய போட்டிகளில் ஒன்றாகும்.