
ஹாங்சோ நகரம், கிழக்கு சீனாவின் கடலோரத்தில் அமைந்துள்ளது. ஹாங்சோ, மிகுந்த பண்பாட்டுப் பின்னணி உண்டு. உலகப் புகழ்பெற்ற சுற்றுலாக் காட்சி நகர் அது. அங்குள்ள சிஹு ஏரி மையக் காட்சிப் பிரதேசத்தில் மட்டும், 100க்கும் அதிகமான புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள் உள்ளன.

மனிதர் வசிப்பதற்கு ஏற்ற இடங்களில் ஒன்று ஹாங்சோ. தலை சிறந்த குடியிருப்புப் பிரதேசப் பரிசை அதற்கு ஐ. நா வழங்கியது. சர்வதேசப் பூங்கா நகரமெனவும் அது தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிஹு ஏரியுடன் நகர்ப்பகுதி இணைந்துள்ளது. ஹாங்சோ நகரின் இந்த ஏரியானது, நகரின் ஆத்மாவாகும். சிஹு ஏரிக் காட்சிப் பிரதேசத்தின் பரப்பளவு 60 சதுர கிலோமீட்டராகும். இங்குள்ள எழில் மிக்க ஏரிக் காட்சியும் தொல் பொருள், வரலாற்றுச் சின்னம் ஆகியவையும் ஒன்றிணைந்து, இயற்கை அழகை வெளிப்படுத்தி நிற்கின்றன.

|