• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-23 09:36:28    
நிங் சியா அருங்காட்சியகம்

cri
புதிர் போன்ற சி சியா வம்சத்தின் சிதிலங்கள், சீனாவின் நிங் சியா ஹுய் தன்னாட்சி பிரதேசத்தில் அமைந்துள்ளன. இன்றைய நிகழ்ச்சியில், நாம் அவற்றைப் பற்றி பார்க்கலாம்.
11ம் நூற்றாண்டின் துவக்கம் முதல் 13ம் நூற்றாண்டின் துவக்கம் வரையான இரண்டு நூற்றாண்டுகளில், நாடோடிகளாக மேய்ச்சல் வாழ்வைக் கொண்ட சியாங் இனத்தின்

கிளையான தாங் சியாங் இனத்தவர்கள், தற்போதைய நிங் சியா ஹுய் தன்னாட்சி பிரதேசத்தை மையமாக கொண்ட சீனாவின் விடமேற்கு பகுதியில் சி சியா வம்சத்தை நிறுவினர். அப்போதைய ஜின் மற்றும் தெற்கு சூங் வம்சங்களுடன் சேர்ந்து ஒரே காலக்கட்டத்தில் இது நிலவியது.
இந்தத் தலைச்சிறப்பியல்பான கற்சிலைகள், சி சியா வம்ச காலத்தில், தலைச்சிறந்த கற் சிற்பத் தொழில் நுட்பத்தை எடுத்துக்காட்டுகின்றன. அதன் தோற்றங்கள், உள்ளூர் சுற்றுலா பயணத்துக்கான நினைவு வணிகப் பொருட்களின் முக்கிய சின்னங்களாக மாறியுள்ளன. மலர் கலசம், முத்திரை, முகமூடி முதலிய நினைவுப்பொருட்களில் இந்த உருவங்கள் அடிக்கடி காணப்படலாம். பெய்ஜிங்கிலிருந்து வந்த பயணி சியென், முத்திரை ஒன்றை வாங்கி, சி சியா மொழி மூலம் தமது பெயரை அதில் செதுக்குமாறு கேட்டுக்கொண்டார். அவர் கூறியதாவது:

இந்த உருவம், மிகவும் துணிவாகவும் வலிமையாகவும் இருப்பதால், இதை பாதுகாக்கும் கடவுள் போன்றதாக, உணர்ந்துகொண்டேன். சி சியா எழுத்துகள் எமக்கு தெரியாது. ஆனால், இது மிகவும் அழகாக உள்ளது என்றார் அவர்.
பண்டைகால சி சியா எழுத்துக்கள், அழகானவை, புதிரானவை கூட. இதுவரை, ஏளாரமான புத்த மதமறைகள், அகராதி, மருத்துவ புத்தகங்கள் உள்ளிட்ட, சி சியா மொழியிலான வரலாற்று ஆவனங்கள் உள்ளன. இதில், 818 ஆண்டுகளுக்கு முன் அச்சான சி சியா-ஹென் மொழி அகராதி குறிப்பிடத்தக்கது. நிங் சியா அருங்காட்சியகத்தில், இந்த மதிப்புள்ள அகராதியின் மிஞ்சிய பகுதியைப் பார்க்கலாம். சீனாவில் மிகவும் புகழ்பெற்ற சி சியா இயல் நிபுணர் Shi jin bo அடிக்கடி இங்கே வருகின்றார். அவர் கூறியதாவது:

இதுவே, சீன வரலாற்றில் முதலாவது இரு மொழி விளக்க அகராதியாகும் என்று கருதுகிறேன். அப்போதைய சி சியா மக்கள், இதைப் பயன்படுத்தி ஹென் மொழியையும் ஹென் இனப் பண்பாட்டையும் கற்றுக்கொண்டனர் என்றார் அவர்.
தவிர, உலகளவில் மிகப் பழமையான, மரத்தால் செய்யப்பட்ட எழுத்துக்களை மாற்றிப் பொருத்தக்கூடிய சி சியா மொழி புத்த மதமறை, நிங் சியா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. சீனா, எழுத்துக்களை மாற்றி பொருத்தும் அச்சுத் தொழில் நுட்பத்தைக் கண்டறிந்த நாடு என்பதை இது உறுதியாக மெய்ப்பித்துள்ளது.
தவிர, இவ்வருங்காட்சியகத்தில், நாட்டுக் கருவூல நிலையான தொல் பொருட்கள் உள்ளன. தங்க மூலாம் பூசப்பட்ட வெண்கல மாடு, பெரிய குதிரை கற்சிலை

ஆகியவை, சி சியா வம்சகால வெண்கல வார்ப்பு மற்றும் கற்சிலையைச் செதுக்கும் தொழில் நுட்பத்தின் தலைச்சிறந்த நிலையை எடுத்துக்காட்டி, சி சியா மக்களின் வாழ்வு நிலைமையை தொடர்ந்து வெளிப்படுத்துகின்றன.
சி சியா பேரரசர் கல்லறைகள், நிங் சியா அருங்காட்சியகம் ஆகியவற்றைத் தவிர, யின் சுவான் நகரிலுள்ள சி சியா வம்சத்தின் கற்குகைகள், கோயில்கள், கோபுரங்கள், கற்சிற்பங்கள் முதலியவை, இந்தப் பண்டைக்கால வம்சத்தின் பிரகாசமான வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளன. இதுவரை, சி சியா வரலாறு மற்றும் பண்பாட்டில் எண்ணற்ற இரகசியங்கள் மறைந்தே உள்ளன.