• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-24 09:54:23    
உலக Formula 1 கார் பந்தயத்தின் ஜப்பான் போட்டி

cri
2008ம் ஆண்டுக்கான உலக Formula 1 கார் பந்தயத்தின் ஜப்பான் போட்டி 12ம் நாள் முடிவடைந்தது. இப்போட்டியில், Renault அணியின் ஸ்பெயின் வீரர் Alonso இவ்வாண்டின் தனது 2வது சாம்பியன் பட்டத்தைப் பெற்றார். BMW Sauber அணியின் Robert Kubica இரண்டாவது இடத்தைப் பெற்றார். Ferrari அணியின் பின்லாந்து வீரர் Raikkonen மூன்றாவது இடத்தை பிடித்தார். இப்போட்டிக்குப் பிறகு, 141 புள்ளிகளைப் பெற்ற நிலைமையில், Ferrari அணி போட்டியின் தரவரிசையில் முதலிடம் வகித்து வருகிறது.

வீரர்கள் தரவரிசையில் Hamilton, மாசா, Kubica ஆகியோர், முன்னணியில் உள்ளனர்.
உலக Formula 1 கார் பந்தயத்தின் சீனப் போட்டி 19ம் நாள், சீனாவின் கிழக்கு பகுதியிலுள்ள ஷாங்காய் நகரில் நடைபெறும்.
2016ம் ஆண்டு கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்த விண்ணப்பித்த பிரேசில், ஸ்பெயின், அமெரிக்கா மற்றும் ஜப்பானைச் சேர்ந்த 4 நகரங்கள் 11ம் நாள் மெக்சிகோவின் Acapulco நகரில் பல்வேறு நாடுகளின் விளையாட்டு அமைப்புகளுக்கு தங்களது தனிச்சிறப்புகளை வெளியிட்டன.

4 நகரங்கள் மேம்பட்ட அறிவியல் தொழில் நுட்ப நிலையையும் ஒளிமயமான வளர்ச்சியின் எதிர்காலத்தையும் கொண்டுள்ளன என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் Jacques Rogge சுட்டிக்காட்டினார். 2016ம் ஆண்டு கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தும் உரிமையை எந்த நகரத்துக்கு வழங்குவதற்கு பொது மக்களின் கருத்து முக்கியமானது என்றும் அவர் வலியுறுத்தினார்.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வெளியிட்ட தகவலின் படி, 2016ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறும் இடம் 2009ம் ஆண்டு அக்டோபர் திங்கள் டென்மார்க்கின் Copenhagen நகரில் வெளியிடப்படும்.
2010ம் ஆண்டு சீனாவின் குவாங் சோ நகரில் நடைபெறும் 16வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் தாம் கலந்துகொள்வதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் Rogge 19ம் நாள் இந்தோனேசியாவின் பாலி தீவில் தெரிவித்தார்.

குவாங் சோ மாநகராட்சியின் துணைத் தலைவரும், குவாங் சோ ஆசிய விளையாட்டு ஏற்பாட்டுக் குழுவின் துணைத் தலைமைச் செயலாளருமான Xu Ruisheng Roggeஇடம் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்த பணிகளை விவரித்தார்.
குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டி ஆசிய கண்டத்திலுள்ள நாடுகளின் விளையாட்டு விழாவாகும். ஆசியாவின் பல்வேறு நாடுகளுக்கும் பிரதேசங்களுக்கும் பண்பாட்டு பரிமாற்ற வாய்ப்பை இது வழங்கும் என்று Rogge தெரிவித்தார்.