• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-24 09:58:40    
Qi Qi Ha Er நகரில் பூத்தையல் செய்யும் பெண்கள் பற்றி

cri
மூன்று ஆண்டுகளுக்கு முன், Jin Qi Leiஉம், Song Li Hongஉம் தங்கள் வேலைகளை இழந்தனர். அதற்கு பின், அவர்களின் வாழ்க்கைக்கு உத்தரவாதமில்லை. 20 ஆயிரம் யுவான் வங்கி கடனின் துணையால், தற்போது அவர்களின் வாழ்க்கை மேம்பட்டுள்ளது. அவர்களை போல், அரசின் உதவியுடன், Hei Long Jiang மாநிலத்தின் Qi Qi Ha Er நகரில் வேலை இழந்தவர்கள் பலர் மறு வேலைவாய்ப்புகள் பெற்றுள்ளனர்.
Qi Qi Ha Er நகரின் Tie Feng பிரதேசத்தில் உள்ள சாதாரண வீட்டுக்குள் நுழைந்ததும், தாழ்வாரத்தின் இரு பக்கங்களிலும் தலைசிறந்த பூத்தையல் வேலைப்பாடுகள், மக்களின் கவனத்தை ஈர்க்கின்றன. பூத்தையலகத்தில் சுமார் 7 பெண்கள் உட்கார்ந்து பூக்கள் தைக்கின்றனர். அத்தையலகத்தின் சுவர்களில் வெவ்வேறான பூ வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. "Jin Xiu Gong Yi" என்னும் பூத்தையலகம் இதுவாகும். உள்ளூர் பிரதேசத்தில் இது புகழ் பெற்றுள்ளது.
Jin Qi Lei என்னும் பெண், இப்பூத்தையலகத்தை நிறுவினார். மூன்று ஆண்டுகளுக்கு முன், அவர் பணி புரிந்த தொழில் நிறுவனத்தில் பங்கு முதலீட்டு முறையில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டதால், அவர் வேலையை இழந்தார். வாழ்வில் ஏற்பட்ட நிர்ப்பந்தத்தினால், Jin Qi Lei, தனக்கு ஏற்ற வேலைவாய்ப்பை தேட வேண்டியிருந்தது.

அவர் பூத்தையல் வேலைப்பாடுகளை மிகவும் நேசிப்பவர். எனவே, தென் சீனாவின் Su Zhou நகருக்குச் சென்று, மூன்று திங்கள் நீடித்த பூத்தையல் பயிற்சி பெற்றார். அவர் கூறியதாவது:
"நான் வேலையை இழந்தேன். எனக்கு ஏற்ற வேலை வாய்ப்பை தேடுவது, எளிதல்ல. பூத்தையலை நேசிக்கின்றேன். இது பாராம்பரிய கைவினை கலையாகும். பூத்தையலில் ஈடுபடுமாறு வேலையை இழந்த பெண்களை அணிதிரட்ட வேண்டும் என்று விரும்புகின்றேன். இந்த பூத்தையலகத்தை நடத்துவதில், Tie Feng பிரதேசத்தின் பல்வேறு நிலை அரசுகள் எனக்கு பெரிதும் ஆதரவளித்துள்ளன"என்றார், அவர்.
கடந்த சில ஆண்டுகளாக, சீனாவின் பிற நகரங்களைப் போல், Qi Qi Ha Er நகரில், தொழில் நிறுவனங்களில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பின், பலர் தங்கள் வேலைகளை இழந்தனர். அவர்களுக்கு மறு வேலை வாய்ப்பு வழங்குவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும், Qi Qi Ha Er நகரில் சுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் வேலை இழந்தவர்களுக்கு மறு வேலைவாய்ப்பு வழங்க வேண்டியுள்ளது. தவிர, இந்நகரில் புதிதாக அதிகரிக்கும் 25 ஆயிரம் உழைப்பாளர்களுக்கு வேலைகள் ஏற்பாடு செய்ய வேண்டியுள்ளது. கடினமான நிலைமையை எதிர்நோக்கி, Qi Qi Ha Er நகர அரசு, புதிய வழிமுறைகளை முன்வைத்து, வேலைவாய்ப்புக்களை அதிகரிக்கும் உகந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
தொழில் நடத்துவதற்கு தேவைப்படும் நிதித்தொகை பிரச்சினையைத் தீர்க்க, Qi Qi Ha Er நகரத் தலைவரின் தலைமையில், அரசின் பல்வேறு வாரியங்களின் பணியாளர்கள், வேலை இழந்தவர்களுடன் தொடர்பு கொண்டனர். அவர்களுக்கு ஒருவர் பின் ஒருவராக உதவி செய்து, கடன் வழங்கினர்.
இந்நகரில், வேலை இழந்தவர்கள் தொழில் நடத்துவதை ஆதரிக்கும் பேரெழுச்சியில், Jin Qi Lei பூத்தையலகம் ஒன்றை நிறுவ உறுதி பூண்டார். Tie Feng பிரதேசத்தின் உழைப்பு மற்றும் சமூக காப்பீட்டு அலுவலகத்தின் பணியாளர் Huang Ying Ge அம்மையாரின் உதவியுடன், Jin Qi Lei வங்கியிலிருந்து 20 ஆயிரம் யுவான் கடனாக பெற்றார். Jin Qi Lei தொழில் நடத்த உதவுவது, தமக்கு மகிழ்ச்சி தருகிறது என்று Huang Ying Ge அம்மையார் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
"அவருக்கு திறமைகள் உண்டு என்று கருதுகின்றேன். இந்த நிதித்தொகையைப் பயன்படுத்தி, அவர் பல பெண்களை வேலைக்கு அமர்த்தலாம். அவர்கள் தங்கள் வீட்டிலேயே பூத்தையல் செய்ய முடியும். 20 ஆயிரம் யுவான் கடன் பயன்மிக்கது என்று நினைக்கின்றேன். எனக்கு மிக்க மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது" என்றார், அவர்.
இப்பூத்தையலகம் நிறுவப்பட்ட 2 ஆண்டுகளில், இங்கு வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கை, 8 பேரிலிருந்து சுமார் 200 பேர் வரை அதிகரித்துள்ளது. அவர்களில், வேலை இழந்தவர்களைத் தவிர, ஊனமுற்றோர், பணியிலிருந்து ஓய்வு பெற்றோர், குறைவான வருமானம் கொண்டவர்கள் அடங்குகின்றனர்.
Song Li Hong அம்மையார், இப்பூத்தையலகத்துக்கு வருவதற்கு முன் வேலையை இழந்திருந்தார். அவருக்கு வருமானம் இல்லாததால், வாழ்க்கை கடினமானது. இப்பூத்தையலகம், வேலை இழந்தவர்களை பணியமர்த்துகிறது என்று அவர் எதேச்சையாகக் கேள்விபட்டு, அங்கு வந்தார். Jin Qi Lei அம்மையாரிடமிருந்து பூத்தையல் நுட்பத்தை அவர் கற்றுக்கொண்டார். கடந்த இரண்டு ஆண்டுகளில், பூத்தையலகத்தில் சகோதரிகளின் உதவியுடன், அவரின் பூத்தையல் திறன் விரைவாக உயர்ந்துள்ளது.

தற்போது, அவரும் ஆசிரியராக மாறி, புதிய மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கின்றார். இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய தமது வாழ்க்கையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது அவர் கூறியதாவது:
"இப்பணியை செய்ய தொடங்கி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. தற்போது எனது வருமானம் அதிகரித்துள்ளது. அதனால் நிறைவான மன நிலை கொண்டிருக்கின்றேன். ஒவ்வொரு பூ வேலைப்பாட்டையும் முடிக்கும் போது, எனக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது" என்றார், அவர்.
பூத்தையலகத்துடன் உடன்படிக்கை உருவாக்கிய பின், அனைத்து பெண்களும் தத்தமது வீட்டில் பூத்தையல் செய்ய முடியும். அவ்வேலைப்பாடுகளை முடித்த பின், அவர்கள் தங்கள் பூத்தையல்களை தையலகத்துக்கு கொண்டு வருகின்றனர். இப்பூத்தையல் வேலைப்பாடுகள், ரஷியா, தென் கொரியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
67 வயதான Li Jiu Lan அம்மையார், முன்பு இயந்திரத் துறையில் வேலை புரிந்தார். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின், இந்த பூத்தையலகத்துக்கு வந்து அதன் நுட்பத்தைக் கற்றுக்கொண்டார். பூத்தையலகத்தின் வெற்றி பற்றி அவர் பேசுகையில், Jin Qi Lei அம்மையார் இந்நிலையம் பூ வேலைப்பாட்டின் தரத்தில் மிகுந்த கவனம் செலுத்தும் அதே வேளையில், சக பணியாளர்களுக்கு பெரும் மதிப்பும், அக்கறையும் அளிப்பதாக கூறினார். பூத்தையலகத்தில் மகிழ்ச்சியும், அன்பும் நிரம்பியுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். 67 வயதாக இருந்த போதிலும், பூத்தையலகத்தில் மற்றவர்களுடன் இணைந்து, பூத்தையல் நுட்பத்தைக் கற்றுக்கொள்ள விரும்புவதாக அவர் கூறினார்.
அரசின் கொள்கை தான், தொழில் நடத்துவதில் தாம் வெற்றி பெறுவதற்கு காரணமாகும் என்று Jin Qi Lei அம்மையார் கருத்து தெரிவித்தார். 20 ஆயிரம் யுவான் கடன் இல்லாமல், தாம் வெற்றி பெற்றிருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"சிறு தொகை கடன் வழங்கப்படும் கொள்கை நடைமுறைக்கு வந்த பின், வேலை இழந்தவர்களுக்கு மாபெரும் ஊக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் துணையுடன், வேலை இழந்த பின்னர், வாழ்க்கையின் திசையை கண்டுபிடித்தேன். இப்பயிற்சி தளத்தை நிறுவினேன். இதனால் பல பெண்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். அரசு மற்றும் பல்வேறு வாரியங்கள் வெளியிட்ட புதிய கொள்கைகளுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். எங்கள் வருமானம் அதிகரித்துள்ளது. முன்பை விட சிறப்பான வாழ்க்கை நடத்துகின்றோம்" என்றார், அவர்.
புள்ளி விபரங்களின் படி, கடந்த ஆண்டின் இறுதி வரை Qi Qi Ha Er நகரில் 20 ஆயிரத்துக்கு அதிகமானோருக்கு சுமார் 40 கோடி யுவான் கடன் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தொழில் நடத்தும் அதே வேளையில், உள்ளூர் பிரதேசத்தில் 60 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். மேலதிக மக்கள், சிறு தொகை கடன் மூலம், தொழில் நடத்தத் துவங்கியுள்ளனர். இதனால், மேலும் அதிகமான வேலை வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன.