• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-27 20:29:26    
தொல் பொருட்களின் சீரமைப்பு

cri

வென்ச்சுவான் நிலநடுக்கத்தில், ஷாங்சி மாநிலத்தின் சுமார் 86 தொல் பொருட்கள் பராமரிப்பு பிரிவுகள் பாதிக்கப்பட்டன. dayan பகோடா, xi'an மணி மற்றும் மேளக் கோபுரம் உள்ளிட்ட 35 தேசிய நிலை தொல் பொருட்கள் பராமரிப்புப் பிரிவுகள் இதில் அடங்குகின்றன. ச்சிங் வம்சத்தின் முதல் பேரரசரின் சுடுமண் வீரர் சிலைகள் அருங்காட்சியகத்தில் 7 போர்வீரர் சிலைகளும் நிலநடுக்கத்தில் ஓரளவு சேதமடைந்தன. இந்த நிலநடுக்கத்தால் இது வரை, ஷாங்சி மாநிலத்தில் சுமார் 20 கோடி யுவான் மதிப்புள்ள தொல் பொருட்களின் இழப்புகள், ஏற்பட்டன என்று தெரிகிறது.

 
நிலநடுக்கம் ஏற்பட்ட பின், ஷாங்சி மாநில தொல் பொருள் ஆணையம் பேரிடர் நீக்க நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளத் துவங்கியது. தொல் பொருட்களின் பாதுகாப்பு, கட்டிட வரைவுத் திட்டம், திட்டப்பணித் தொழில் நுட்பம் முதலிய துறைகளின் நிபுணர்கள், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு சென்று, பேரழிவு இழப்பின் நிலைமையை மதிப்பிட்டு, பேரிடர் நீக்கப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ஆலோசனைகளை முன்வைத்து, பேரிடர் நீக்கப் பணிக்கு வழிகாட்டினர்.

 
சில திங்களின் சோதனை மற்றும் மதிப்பீட்டுக்குப் பின், இது வரை, ஷாங்சி மாநில தொல் பொருட்களுக்கான பேரிடர் நீக்கப் பணியின் சீரமைப்பு என்ற வரைவுத் திட்டத்தை ஷாங்சி மாநில தொல் பொருள் ஆணையம் வகுத்துள்ளது.


இந்த வரைவுத்திட்டத்தை நிறைவேற்ற மூன்று ஆண்டுகாலம் தேவை. 2010ம் ஆண்டின் இறுதிக்குள், வென்ச்சுவான் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தொல் பொருட்களை முழுமையாக சீரமைக்க வேண்டும். தொல் பொருட்கள், நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் அளவை குறைக்கும் வகையில், தொடர்புடைய பிரதேசங்கள் மற்றும் நகரங்களுக்கு ஷாங்சி மாநிலம் 20 இலட்சம் யுவானை ஒதுக்கிவைத்துள்ளது என்று ஷாங்சி மாநில தொல் பொருள் ஆணையத்தின் தொல் பொருள் பிரிவின் துணை இ zhaoqiang கூறினார்.

 
நண்பர்களே, தொல் பொருட்களின் சீரமைப்பு என்ற தகவலைப் படித்த பின், உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இந்தத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.