• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-27 09:47:46    
2008ம் ஆண்டு பெய்சிங் சர்வதேச மராதன் ஓட்டப்போட்டி

cri
19ம் நாள் நடைபெற்ற 2008ம் ஆண்டு பெய்சிங் சர்வதேச மராதன் ஓட்டப்போட்டியில், சீன வீராங்கனை Bai Xue 2 மணி 26 நிமிடம் 38 வினாடி என்ற பதிவில் மகளிர் பிரிவின் சாம்பியன் பட்டத்தைப் பெற்றார். அவரது அணித் தோழி Chen Rong இரண்டாவது இடத்தை பெற்றார். Zhang Yingying மூன்றாம் இடத்தை பெற்றார்.
ஆடவர் பிரிவில், கென்ய வீரர் Benjamin Kiptoo 2 மணி 10 நிமிடம் 14 வினாடி என்ற பதிவில் ஆடவர் பிரிவின் சாம்பியன் பட்டத்தைப் பெற்றார்.
உலக 30 ஆயிரத்துக்கு அதிகமானோர் இப்போட்டியில் கலந்துகொண்டனர். போட்டி துவங்கிய இடம் பெய்சிங் தியென் அன் மன் சதுக்கமாகும். முடிவு பெற்ற இடம் தேசிய

ஒலிம்பிக் விளையாட்டு மையமாகும். 29வது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பெய்சிங்கில் வெற்றிகரமாக நடைபெற்றதால், இந்த மராதன் ஓட்டப் போட்டியின் நெறி ஒலிம்பிக் தனிச்சிறப்பியல்புக்கு முக்கியத்துவம் அளித்தது. வீரர்கள் பறவைக் கூடு, நீர் கன சதுரம் முதலிய 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் முக்கிய திடல்களையும் அரங்குகளையும் கடந்து சென்றனர்.
பெய்சிங் சர்வதேச மராதன் ஓட்டப்போட்டி சர்வதேச தகள கூட்டமைப்பின் 8 முக்கிய போட்டிகளில் ஒன்றாகும்.
முதலாவது உலக அறிவாற்றல் விளையாட்டுப் போட்டி 18ம் நாளிரவு பெய்சிங்கில் நிறைவடைந்தது. அடுத்த உலக அறிவாற்றல் விளையாட்டுப் போட்டி இலண்டன் அல்லது மாஸ்கோவில் நடைபெறும் என்று சர்வதேச அறிவாற்றல் விளையாட்டு லீக்கின் தலைவர் Jose Damiani தெரிவித்தார்.

முதலாவது உலக அறிவாற்றல் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணிகளை Jose Damiani வெகுவாக பாராட்டினார். அத்துடன், சீன அரசு, பெய்சிங் மாநகர அரசு, சீன தேசிய விளையாட்டு ஆணையம் ஆகியவற்றுக்கு நன்றி தெரிவித்தார். நடப்பு அறிவாற்றல் விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. இப்போட்டிக்கு உபசரிப்பு நாடான சீனா மாபெரும் முயற்சி மேற்கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
முதலாவது உலக அறிவாற்றல் விளையாட்டுப் போட்டியில், சீன பிரதிநிதிக் குழு 12 தங்கப் பதக்கங்கள், 8 வெள்ளி பதக்கங்கள் மற்றும் 6 வெண்கல பதக்கங்களை பெற்று, பதக்க வரிசையில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக நடப்பு அறிவாற்றல் விளையாட்டுப் போட்டியின் சீனச் சதுரங்கப் போட்டிகளில், ஆடவர் உயர்வேக சதுரங்கம், ஆடவர் தனிநபர் போட்டி, மகளிர் தனிநபர் போட்டி, ஆடவர் குழு போட்டி, மகளிர் குழு போட்டி உள்ளிட்ட போட்டிகளின் அனைத்து 5 தங்கப் பதக்கங்களை சீன அணியே வென்றுள்ளது.

ரஷிய பிரதிநிதிக் குழு 5 தங்கப் பதக்கங்களைப் பெற்று, பதக்க வரிசையில் இரண்டாவது இடத்தை வகித்தது.
நடப்பு அறிவாற்றல் விளையாட்டுப் போட்டியில் கோ விளையாட்டிலும், சீனச் சதுரங்கம், சர்வதேச சதுரங்கம், பிரிட்ஜ் என்ற சீட்டுவிளையாட்டிலும், சர்வதேச checkers இடம் பெற்றன. இதில் 35 தங்கப் பதக்கங்கள் உள்ளன. 143 நாடுகளையும் பிரதேசங்களையும் சேர்ந்த 3000க்கு அதிகமான வீரர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டனர். இப்போட்டியில், 17 நாடுகளும் பிரதேசங்களும் தங்கப் பதக்கம் பெற்றுள்ளன. 33 நாடுகளும் பிரதேசங்களும் பதக்கங்கள் பெற்றுள்ளன.