• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-29 10:30:29    
அமெரிக்க மகளிர் கூடைப்பந்து அணிகளுக்கிடை போட்டி

cri

அமெரிக்க மகளிர் கூடைப்பந்து அணிகளுக்கிடை இறுதிப்போட்டி, 6ம் நாள் முடிவடைந்தது. Detroit Shock அணி, சாம்பியன் பட்டம் பெற்றது.
அன்றையப் போட்டியில், உபசரிப்பு அணி Detroit Shock, 76-60 என்ற புள்ளிக் கணக்கில் San Antonio Silver Stars அணியை தோற்கடித்தது.
Detroit Shock அணி, கடந்த 6 ஆண்டுகளில், 3 முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.
சீனா நடத்தும் 2008ம் ஆண்டு உலக பனிச்சறுக்கு நடனப் போட்டி நவம்பர் 6 முதல் 9ம் நாள் வரை, பெயசிங்கில் நடைபெறும். பெய்சிங் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்ற பின், உலக உயர் நிலை போட்டியான இதனை சீனா மீண்டும் நடத்துகின்றது. சீன பனிச்சறுக்கு விளையாட்டு சங்கத்திலிருந்து கிடைத்த தகவல் இதை தெரிவித்தது.

சர்வதேச பனிசறுக்கு விளையாட்டு குழுவால் ஏற்பாடு செய்யப்படும் உலக உயர் நிலை போட்டி உலக பனிச்சறுக்கு நடனமாகும். இதில், 6 போட்டிகளும், ஒரு இறுதிப்போட்டியும் இடம் பெறும். அக்டோபர் இறுதி முதல், டிசம்பர் பாதிக்குள், அமெரிக்கா, கனடா, சீனா, பிரான்ஸ், ரஷியா மற்றும் ஜப்பான் நாடுகள் இவ்வாண்டின் 6 பந்தய போட்டிகளை தத்தமது நாட்டில் தனித்தனியாக நடத்தும்.
2003ம் ஆண்டு முதல், உலக பனிச்சறுக்கு நடன பந்தயப் போட்டியை சீனா நடத்த துவங்கியது. 14 நாடுகளையும் பிரதேசங்களையும் சேர்ந்த 60 உலக உயர் நிலை பனிச்சறுக்கு நடன வீரர்கள் நடப்பு போட்டியில் கலந்துகொள்வர்கள்.
ஜெர்மனி கால்பந்து அணிகளுக்கிடையிலான 6வது சுற்றுப்போட்டிகள் 6ம் நாள் விடியற்காலை முடிவடைந்தன. Cottbus அணி, 1-2 என்ற கோல் கணக்கில் Hamburg அணியிடம் தோல்வியடைந்தது.

சீன வீரர் சாவ் ஜியா ஈ, Cottbus அணியில் பெயர் பட்டியலில் இடம்பெற்றிருந்தும், ஆட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
Hamburg அணி தரவரிசையின் முதலிடத்தில் வகிகின்றது. Cottbus அணி 16வது இடம் பெற்றுள்ளது.
2010ம் ஆண்டு ஆடவர் கால்பந்து உலக கோப்பையின் ஐரோப்பிய பிரதேசத்திலுள்ள தேர்வாட்டங்கள் 12ம் நாள் நடைபெற்றன. 6வது குழுவில், இங்கிலந்து அணி 5-1 என்ற கோல் கணக்கில் கசகஸ்தான் அணியைத் தோற்கடித்து, 3ஆம் முறையாக வெற்றிபெற்றது. இங்கிலந்து அணி 9 புள்ளிகளைப் பெற்ற நிலைமையில், இந்த குழுவில் முதலிடம் வகிக்கின்றது.
இதர போட்டிகளில், 4வது குழுவில் ஜெர்மனி அணி 2-1 என்ற கோல் கணக்கில் ரஷிய அணியைத் தோற்கடித்தது. 5வது குழுவில், ஸ்பெயின் 3-0 என்ற கோல் கணக்கில் Estonia

அணியைத் தோற்கடித்தது. 9வது குழுவில், Holland 2-0 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தை தோற்கடித்தது. ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் Holland அணிகள் தங்களது குழுவில் முதலிடம் பெற்றுள்ளன.
தவிர, 2010ம் ஆண்டு ஆடவர் கால்பந்து உலக கோப்பையின் தென் அமெரிக்க பிரதேசத்திலுள்ள தேர்வாட்டங்களின் 9வது சுற்றுக்கான ஒரு போட்டியில், உலக கால்பந்து கோப்பை போட்டியில் 5 முறை சாம்பியன் பட்டத்தை பெற்ற பிரேசில் அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெனிசுலா அணியை தோற்கடித்தது. தற்போது, தென் அமெரிக்க பிரதேசத்தின் தர வரிசையில் இது இரண்டாவது இடம் வகிக்கின்றது. Paraguay முதலிடம் பெற்றுள்ளது.