
தற்போது ஹாங்சோ நகரில், இரவு பொழுதுபோக்கு டவடிக்கைகளும் பலவிதமானவை. ஹாங்சோ நகரில் தனிச்சிறப்பு வாய்ந்த வீதிகள் அதிக அளவில் உள்ளன. நைன்சென் வீதியானது, பொழுதுபோக்கு வீதியாகும். பான(மது)அகம், தேநீர் அகம், குழம்பி அகம் ஆகியவை இடம்பெற்றுள்ள இவ்வீதி, சீன மற்றும் மேலை நாட்டுப் பண்பாட்டுத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த வீதியாகும். இவ்வீதிக்கு எதிரே, சிஹு ஏரி அமைந்துள்ளது. நைன்சென் வீதியில், ஓவியங்கள் தீட்டப்பட்ட தனிச்சிறப்பியல்பு வாய்ந்த நடைக்கூடமும் உண்டு. இரவில் இவ்வீதியில் நடந்துசென்றால் துன்பத்தை மறந்துவிடலாம்.

ஹாங்சோ நகரம், உண்மையில் வசதியான வீடு போன்றது. ஹாங்சோ மக்கள் இந்நகரை விட்டு வெளியேற விரும்பாததற்கு இதுவே காரணமாகும். பொழுதுபோக்கு நகரான ஹாங்சோ, வசிப்பதற்கு ஏற்ற இடமாகும். இந்நகர மக்களிடம் பரபரப்பு என்பது தென்படவில்லை. நகரின் நிலைமை அமைதியாக உள்ளது. நகரவாசிகள் சுமுகமாகவும் இணக்கமாகவும் இருந்து, சீரான வாழ்க்கை நடத்துகின்றனர்.

|