• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-30 10:10:00    
பெய்ஜிங்கின் இளைஞர் விடுதிகள்

cri
பையைத் தோளில் சுமந்து கொண்டு, தனியாக வெளியூர் சென்று சுற்றுப்பயணம் மேற்கொள்வது என்பதே, தற்போதைய இளைஞர்களின் மிகவும் பரவலான வாழ்க்கை முறையாகும். இளைஞர் விடுதிகள், அவர்கள் அடிக்கடி தங்கியிருக்கும் தளமாக மாறியுள்ளன. பெய்ஜிங்கில் இளைஞர் விடுதிகள் தொடரமைப்பின் கிளை விடுதிகள் அதிகமாக உள்ளன.

இளைஞர் விடுதிகள் என்ற கருத்து, கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் ஏற்பட்டது. 1909ம் ஆண்டில், ஜெர்மன் ஆசிரியர் ஒருவர், அவரது மாணணவர்களுடன் இணைந்து நடந்து செல்லும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். வழியில் மழை பெய்ததால், அவர்கள் ஒரு கிராமப்பள்ளியில் தங்கி ஓய்வு எடுத்ததோடு, தரையில் தூங்கினர். இதனால், இளைஞர்கள் தங்குமிட வசதிகளோடு அமைந்த சிறப்பு விடுதியை நிறுவும் எண்ணத்தை, அந்த ஆசிரியர் கொண்டார். இப்பொழுது, இளைஞர் விடுதிகள், உலகளவில் மிக பெரிய தங்குமிட வசதிகள் கொண்ட தொடரமைப்பாக மாறியுள்ளது. ஆண்டுத்தோறும்,

உலகில் மொத்தம் ஒரு கோடி இளம் வயதுடைய பயணிகள், அதன் கிளை விடுதிகளில் தங்குகின்றனர்.
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியினால், ஏராளமான வெளிநாட்டுப் பயணிகள், அவர்களுடைய மனதில் புதிரான நாடாக எண்ணியிருந்த சீனாவுக்கு வந்தனர். இளைஞர் விடுதிகள் தான், பயணிகளுக்கு நல்ல ஓய்வு இடங்களை வழங்குகின்றன. பெய்ஜிங்கில், போக்குவரத்து மிக வசதியான தொடர்வண்டி நிலையங்களுக்கு அருகிலும், ஒரு சிறிய வீதியிலுள்ள நாலா பக்கங்களில் வீடுகளும் நடுவில் முற்றமும் கொண்ட கட்டிடத்திலும், இளைஞர் தங்குமிட வசதித் தொடரமைப்பின் நீல வண்ணத்திலான முக்கோணச் சின்னம் காணப்படலாம்.
பெய்ஜிங் தொடர்வண்டி நிலையத்தின் எதிர் பக்கத்தில் அமைந்துள்ள நகர இளைஞர் விடுதி, மிகவும் புகழ்பெற்றது. தலைச்சிறந்த புமியியல் நிலை காரணத்தால், இந்த

விடுதி, பயணிகளால் வரவேற்கப்படுகின்றது. இவ்விடுதியில் வசதிகள் மிகவும் முழுமையாக இருக்கின்றன. இங்கு பயணிகள் மற்றவர்களுடன் இணைந்து பெரிய அறைகளைப் பகிர்ந்து கொள்ளலாம், அல்லது, தனக்கொன ஒரு அறையை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். சுற்றுலா தகவல் மையம், சமையலறை, சலவை இயந்திரம், இணைய வசதி, தொலைக்காட்சி, மது அகம் உள்ளிட்ட பல்வேறு வாழ்க்கை மற்றும் பொழுதுப்போக்கு வசதிகள் இதில் நிறைய உள்ளன.
இந்த விடுதி, மிதிவண்டிகளை வாடகைக்கு வழங்குவது குறிப்பிடத்தக்கது. எல்லா இடங்களுக்கும் சென்று சுற்றிப் பார்க்க விரும்புகின்ற பயணிகளைப் பொறுத்தவரை, சுரங்க தொடர்வண்டி மற்றும் பேருந்துகள் அவர்களுடைய சுற்றுலா நோக்கங்களை

நிறைவு செய்ய முடியாது. இதனால், பெரிய நகரங்களில், மிதிவண்டி, நடந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு மிகவும் பிடிக்கும் போக்குவரத்து வசதியாக மாறியுள்ளது. சுற்றுப்பயணத்தை மிகவும் விரும்பும் திரு.Alex Thomas Bradshaw, பெய்ஜிங்கில் சிறிது காலம் தங்கியிருந்தார். அவர் கூறியதாவது:
நான் பெய்ஜிங்கிற்கு பல முறை வந்திருக்கிறேன். இப்பொழுது இங்கு தங்கி வாழ்கின்றேன். பெய்ஜிங்கில் மிதிவண்டி ஓட்டுவது மிகவும் வசதியானது என்றார் அவர்.