• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-31 10:09:44    
திபெத்தில் நிகழ்ந்த பனிச் சீற்றம்

cri
30ம் நாளிரவு வரை, சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் நிகழ்ந்த பனிப் பொழிவினால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஷான் நான் பிரதேசத்தின் லோங் சி மாவட்டத்தில், பாதிக்கப்பட்ட 80 விழுக்காட்டுக்கு மேற்பட்ட மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். தற்போது, இம்மாவட்டத்தில் 4 பேர் உயிரிழ்ந்தனர். ஒருவர் காணாமல் போயினார். 289 பேர் பனிச் சீற்றத்தில் சிக்கினர். முழுமையான மீட்புப்பணியை மேற்கொள்ள, திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் பல்வேறு நிலை அரசுகள், ஆட்களை அனுப்புகின்றன.

லோங் சி மாவட்டத்தில் 26ம் நாள் முதல் தொடர்ச்சியாக 36 மணி நேரம் பனிமழை பெய்தது. முழு மாவட்டத்திலும் பனிப்பொழிவின் அடர்த்தி, 1.5 மீட்டரை எட்டியது. அப்போது, இப்பனிச் சீற்றத்தில் சிக்கியோரின் எண்ணிக்கை, 1600க்கு மேலாகும் என்று லோங் சி மாவட்டத்திலிருந்து கிடைத்த புள்ளிவிபரம் காட்டியது.

30ம் நாள் நண்பகல் வரை, இப்பனிப் பொழிவினால், ஷான் நான், லின் சி முதலிய 5 பிரதேசங்கள் பாதிக்கப்பட்டன. 3000க்கு மேற்பட்டோர் பனிப்பொழிவில் சிக்கினர். 7 பேர் உயிரிழந்தனர்.