• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-31 16:03:43    
மங்கோலிய இன மக்களின் விழாக்கள்(அ)

cri
சீனாவின் மங்கோலிய இன மக்கள், பல விழாக்களைக் கொண்டாடுகின்றனர். வசந்த விழா, டிராகன் படகு விழா, நிலவு திரு விழா, nadamu, ji'ebo, chengjisihan நினைவு நாள் முதலியவை, அவர்களின் முக்கிய விழாக்களாகும்.

ஒன்று, na da mu என்ற விழா

na da mu விழா, மங்கோலிய இனத்தின் நீண்ட வரலாறு கொண்ட பாரம்பரிய விழாவாகும். இது, மங்கோலிய இன மக்களின் வாழ்க்கையில் முக்கிய இடம் வகிக்கிறது.

ஒவ்வொரு ஜூலை மற்றும் ஆகஸ்ட் திங்களில், கால்நடைகள் செழித்து கொழுத்த நிலையில், na da mu விழா நடைபெறுகிறது. இது அறுவடையைக் கொண்டாட நடைபெறும் பொழுதுப் போக்கு நிகழ்ச்சியாகும். குதிரைப் போட்டி, மற்போர், அம்பு எய்தல், சதுரங்கம், ஆடல் பாடல்கள் முதலியவை இவ்விழாவில் இடம்பெறுகின்றன. போட்டியில் கலந்து கொள்ள அல்லது பார்க்க, மக்கள் குதிரையில் ஏறி புதிய ஆடைகளை அணிந்து, தொலைவிலிருந்து வருகின்றனர். குதிரைப் போட்டி இவ்விழாவிலான முக்கிய நடவடிக்கையாகும். ஊதுகுழல் ஒலித்தவுடன், எய்யப்பட்ட அம்புகளைப் போன்ற இளைஞர்கள், குதிரைகளில் ஏறி, சாட்டைகளை அசைக்கின்றனர். முடிவுக் கோட்டை அடையும் முதல்வர், வெற்றி வீரராகக் கருதப்படுகிறார்.

தவிரவும், இந்த விழா, வேளாண் உற்பத்திப் பொருட்களின் வர்த்தகப் பொருட்காட்சியாகவும் அமைகிறது. தொழில் மற்றும் உப தொழிலின் உற்பத்திப் பொருட்களைத் தவிர, தேசிய தனிச்சிறப்பு வாய்ந்த உணவுப்பொருட்களும் இதில் காணப்படுகின்றன.

இரண்டு, குதிரைப் பால் விழா

இது, மங்கோலிய இன மக்களின் பாரம்பரிய விழாவாகும். இவ்விழாவின் போது குதிரைப் பாலைக் குடிக்க வேண்டும் என்பதால், இவ்விழா அவ்வாறு அழைக்கப்படுகிறது.

Xilinguole மற்றும் eerduosi பிரதேசங்களின் ஆயர்கள் இவ்விழாவைக் கொண்டாடுகின்றனர். இது, சந்திர நாட்காட்டியின்படி ஆகஸ்ட் திங்களின் பிற்பாதியில் ஒரு நாள் கொண்டாடப்படுகிறது. அறுவடையைக் கொண்டாடி பரஸ்பர வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில், மங்கோலிய மக்கள் குதிரைப் பால் மதுபானத்தை குடித்து, விருந்தனர்களுக்கு பெரிய துண்டுகளாக இறைச்சியை வழங்குகின்றனர். தவிரவும், அவர்கள் குதிரைப் போட்டியை நடத்தி, இசை கலைஞர்கள் பாடல்கள் பாட, தேசிய இன மருத்துவர்களுக்கு வணக்கம் செய்கின்றனர். na da mu விழா, அந்த நடவடிக்கைகளிலிருந்து உருவாகியதே.