• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-31 14:33:38    
மர்மமான San Xingdui சிதிலம்

cri
சீன வானொலி நிலையம் மற்றும் சீனாவின் சிச்சுவான் சுற்றுலா ஆணையம் இணைந்து நடத்துகின்ற "அழகான சிச்சுவான்" என்னும் சுற்றுலா பொது அறிவு போட்டி நிகழ்ச்சி.இது தொடர்பான 2வது கட்டுரையை வழங்குகின்றோம். அதன் தலைப்பு மர்மமான San Xingdui சிதிலம் என்பதாகும்.

துவங்குவதற்கு முன் போட்டி தொடர்பான இரண்டு கேள்விகளை முன்வைக்கின்றோம்.

1. San Xingdui சிதிலத்தின் பொற்காலம் எத்தனை ஆண்டுகள் நீடித்தது?

2. San Xingdui சிதிலத்தில் கண்டறியப்பட்ட தொல் பொருட்களில் அப்போதைய மிகச் சிறந்த தொழில் செயமுறையை பிரதிநிதித்துவப்படுத்தும் தொல் பொருள் எது?வெள்ளி மணிக்கல் அல்லது வெண்கலம் ?

இவ்விரண்டு கேள்விகளுக்கான விடைகள் இன்றைய நிகழ்ச்சியில் இடம் பெறுகின்றன. தகவல்கள் அனைத்தையும் தெளிவாக கவனியுங்கள்.

முற்காலத்தில், San Xingdui எனும் சிதிலம் San Xing கிராமமாக அழைக்கப்பட்ட போது, இக்கிராமத்தில் வாழ்ந்த Yan என்ற குடும்பப் பெயரை கொண்ட விவசாயி ஒருவர், ஒரு முறை வசந்த கால சாகுபடியில் இந்த சிதிலத்தை எதிர்பாராதவாறு கண்டறிந்தார். இதற்கு பிந்திய பல பத்து ஆண்டுகளின் அகழ்வு மற்றும் ஆய்வின் மூலம், 3000-5000 ஆண்டுகளுக்கு முன், இங்கே Shu என்ற பண்டைக்கால நாட்டின் தலைநகர் அமைந்திருந்து கண்டறியப்பட்டது. San Xingdui சிதிலம் 2000 ஆண்டுகால பொற்காலத்தை கொண்டிருந்தது. Shu, 2000 ஆண்டுகால ஒளிவீசும் நாகரிக வரலாறுடைய நாடாகும். San Xingdui சிதிலம் கண்டறிக்கப்பட்டதால், Shu நாடின் வரலாற்று காலம், 2000 ஆண்டுக்கு முன்னதாக பதிவானது. இந்த முக்கிய கண்டறிதல், சீன நாகரிக வரலாற்று கட்டமைப்பை மேலும் மேம்படுத்தியது. மஞ்சள் ஆற்றுப்பள்ளத்தாக்கிலான நாகரிகம் போல், San Xingdui சிதிலத்தை பிரதிநிதியாக கொண்ட யாங்சி ஆற்றுப்பள்ளத்தாக்கிலான நாகரிகமும், சீன நாகரிகத்தைச் சேர்ந்தது என்பதை இது எடுத்துக்காட்டியது.

San Xing கிராமம், சீனாவின் தென் மேற்கு பகுதியிலுள்ள சிச்சுவான் மாநிலத்தில் அமைந்துள்ளது. சிச்சுவான் மாநிலத்தின் தலைநகரான செங்துவிலிருந்து வாகன மூலம் சுமார் 1 மணிநேரத்தில் San Xing கிராமத்தை அடைய முடியும். பத்து ஆண்டுகளுக்கு முன், இச்சிதிலம் கண்டறியப்பட்ட இடத்தில் அருங்காட்சியகம் நிறுவப்பட்டது. San Xingdui என்ற பெயர் இதற்கு சூட்டப்பட்டது. 30 பாகை வட நில நேர்க்கோட்டில் அமைந்துள்ள இச்சிதிலத்தின் கண்டுபிடிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று இவ்வருஙகாட்சியகத்தின் பணியாளர் Qiu Xueqing அம்மையார் எடுத்துக்கூறினார். அவர் கூறியதாவது:

ஜொல்மோ லுங்மா சிகரம், Mayan நகாரிகம், பெர்மூடா முக்கோணம் ஆகியவையும், இந்த அகல கோட்டியில் அமைந்துள்ளன. அவற்றின் பொதுத் தனிச்சிறப்பு மர்மமான அம்சமே. இது வரை, சீனாவின் தென்மேற்கு பிரதேசத்தில், கண்டறியப்பட்ட மிக விரிவான தொல் பொருட்கள், மிகச் செழுமையான பண்பாடு ஆகியவற்றை கொண்ட மிக நீண்டகாலப் பண்பாட்டுச் சிதிலம், San Xingdui ஆகும் என்றார் அவர்.

San Xingdui சிதிலத்தில் தோண்டியெடுக்கப்பட்ட தொல் பொருட்களைப் பார்த்தால் அவற்றின் மர்ம அம்சங்கள் மேலும் அதிகம். இந்தத் தொல் பொருட்களில் வெண்கலப் பொருட்கள் மக்களின் மிக அதிகமான கவனத்தை ஈர்த்துள்ளன. சில வெண்கலச் சிலைகளுக்கு இரு பெரிய கண்களும் எடுப்பான மூக்கும் உண்டு. ஆசிய மக்களின் தோற்றத்துடன் ஒப்பிடுகையில், இவை பெரிதும் வேறுபடுகின்றன என்று Qiu Xueqing அம்மையார் கூறினார். இவ்வருங்காட்சியகத்திலான ஒரு வெண்கல முகமூடி, மிகத் தனிச்சிறப்பு வாய்ந்த தொல் பொருளாகும். இது பற்றி, Qiu Xueqing அம்மையார் எடுத்துக்கூறியதாவது:  

இது, உலகில் மிகப் பெரிய வெண்கல முகமூடியாகும். எம் தேசிய நிலையான கருவூலமும் ஆகும். அதன் ஐந்து புலன்கள் மிகத் தனிச்சிறப்பு கொண்டன. அதன் கண்கள் உருள் தடி வடிவில் உள்ளன. கண்ணின் மணியின் முன்பகுதி சாய் சதுர வடிவில் உள்ளது. தவிரவும், அதன் காதுகள் பெரியாதகவும் கூர்மையாகவும் உள்ளன. மேற்கூறிய தனிச்சிறப்புகளால், மனக்கண்களுக்கும் காதுகளுக்கும் பார்க்கும் மற்றும் கேட்கும் திறன்களை தருகின்ற மூகமூடியாக இதை பயணியர் அழைக்கின்றனர் என்றார் Qiu Xueqing அம்மையார்.

Ao Tianzhao என்ற முதியவர் இவ்வருங்காட்சியகத்தின் ஆலோசகர் ஆவார். 70 வயதுக்கு மேற்பட்ட அவர், San Xingdui பண்பாடு பற்றி 50 ஆண்டுகள் ஆராய்ந்துள்ளார். San Xingdui சிதிலத்தில் தோண்டியெடுக்கப்பட்ட தொல் பொருட்களுக்கான ஆய்வுக்கு இணங்க, தேவர்களின் அதிகாரம், மன்னரின் அதிகாரத்துடன் நெருக்கமாக ஒன்றிணைப்பது என்பது அக்கால ஆட்சியின் தனிச்சிறப்பு ஆகும். அத்துடன், San Xingdui, அப்போதைய புனித பயணத்தின் மையமாகும் என்று அவர் கருதுகின்றார்.

San Xingdui பண்பாடு மக்களுக்கு எண்ணற்ற ஊகங்களை விட்டுச்சென்றது. எனவே, இவ்வருங்காட்சியகம் திறந்தற்கு பின்னான 10 ஆண்டுகளில், ஏராளமான சீன மற்றும் வெளிநாட்டு பயணியர்களை ஈர்த்துள்ளது. ஆப்பிரிக்காவை தவிர, San Xingdui தொல் பொருட்கள் இதர 4 பெரிய கண்டங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டன. San Xingdui சிதிலத்தின் அற்புதமான நேர்த்தியான தொல் பொருட்கள், அதன் மர்மம் மற்றும் பழமை வாய்ந்த நாகரிகம் ஆகியவை, வெளிநாட்டுப் பயணிகளை பொறுத்த வரை, மாபெரும் ஈர்ப்பு ஆற்றல் வாய்ந்தவை என்று San Xingdui அருங்காட்சியகத்தின் துணைத் தலைவர் Zhang Jizhong கூறினார். அவர் கூறியதாவது:

San Xingdui சிதிலத்தின் மழமையான மர்மமான பண்பாட்டின் மீது, பயணிகள் மிகவும் கவனம் செலுத்துகின்றனர். இது, யாங்சி ஆற்றுப்பள்ளத்தாக்கிலான நாகரிகத்தின் மணிமுடியாகும் என வெளிநாட்டினர் கருதுகின்றனர். San Xingdui தொல் பொருட்கள் உலகில் மாறுபட்ட தனித்தன்மையுடையவை. மணம் கமழும் கீழை பண்பாடு, பண்டைக்கால Shu நாட்டின் பண்பாட்டுடன் இணைந்த தனிச்சிறப்பு, இதற்கு உண்டு. எனவே, San Xingdui பண்பாடு, வெளிநாட்டு பயணிகளை பெரிதும் கவர்ந்திழுக்கும் ஆற்றல் கொண்டுள்ளது என்றார் அவர்.

பின்லாந்திலிருந்து வந்த பயணி Sirkka Korela அம்மையார் இந்த வெளிநாட்டு பயணிகளில் ஒருவராவர். San Xingdun பண்பாட்டுக்கு அவர் பேரார்வம் காட்டியுள்ளனர். அவர் கூறியதாவது:

இவ்வருங்காட்சியகத்தின் வடிவமைப்பு மிகவும் தனிச்சிறப்பானது. காட்சிக்கு வைக்கப்பட்ட தொல் பொருட்கள், குறிப்பாக அந்த முகமூடிகள் நமது கவனத்தை ஈர்க்கின்றன. அவை, மர்மமானவையாக உள்ளன. தவிர, அந்த வெண்கல மரங்களும் வெண்கலப் பறவைகளும் மிகவும் ஆர்வத்தை தூண்டுபவை என்றார் அவர்.