• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-31 14:33:55    
ஓமெய் மலை மற்றும் லெசான் மலை

cri
சீன வானொலி நிலையமும் சீன சிச்சுவான் மாநிலத்தின் சுற்றுலா ஆணையமும் இணைந்து நடத்துகின்ற அழகான சிச்சுவான் என்ற சுற்றுலா பொது அறிவுப் போட்டி நிகழ்ச்சி.இது தொடர்பான 3வது கட்டுரையை வழங்குகின்றோம். அதன் தலைப்பு ஓ மெய்-லெசானில் சுற்றுப் பயணம் என்பதாகும்.

துவங்குவதற்கு முன் போட்டி தொடர்பான இரண்டு கேள்விகளை முன்வைக்கின்றோம். 1, ஓ மெய் மலை, சீனாவின் புனித புத்த மத இடங்களில் ஒன்றாக விளங்குகிறதா?2, லெசான் பெரிய புத்தர் சிலை, உலகில் மிகப் பெரிய புத்தர் சிலை. அதன் உயரம் எவ்வளவு? இவ்விரண்டு கேள்விகளுக்கான விடைகள் இன்றைய நிகழ்ச்சியில் இடம் பெறுகின்றன. தகவல்கள் அனைத்தையும் தெளிவாக கவனியுங்கள்.

ஓ மெய் மலை, சீனாவின் முதலாவது மலை என்று நீண்டகாலமாக அழைக்கப்பட்டு வருகிறது. கி.பி.4ம் நூற்றாண்டிலேயே இந்திய துறவி பெள சாங், இம்மலையில் சுற்றுலா மேற்கொண்ட பின், இம்மலையை சூரியன் உதயமாகும் இடத்தில் உதிக்கும் முதலாவது மலை என்று வியந்து பாராட்டினார். பண்டைக்கால இந்தியா, சீனாவை சூரியன் உதயமாகும் இடமென புகழ்ந்து போற்றியது. அதன் பின்னர், ஓ மெய் மலை, சீனாவின் முதலாவது மலை என்ற புகழை பெற்றது.

ஓ மெய் மலையின் தனிச்சிறப்பு வாய்ந்த கம்பீரமான தோற்றம், அதன் நீண்டகால வரலாறுடைய புத்த மதப் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. கி.பி. முதல் நூற்றாண்டில் இந்தியாவின் புத்த மதம், ஓ மெய் மலையில் பரவியது. மேலும் இங்குதான் சீனாவின் முதலாவது புத்த மதக்கோயில் கட்டியமைக்கப்பட்டது. சுற்றுப்புறங்களில் இதர கோயில்கள் அமைக்கப்பட்ட பின், ஓ மெய் மலை, சீன புத்த மதத்தின் புனித இடங்களில் ஒன்றாக மாறியது. இங்கு ஊதுவத்தியின் மணம் பரவிக் கொண்டே இருக்கிறது.

இம்மலையில் SAMANTABHADRA புத்தரை மக்கள் வழிபாடு செய்கின்றனர். அவர், உலகில் பல புத்தர்களின் மூத்த மகனாவார். புத்த மதம் இருக்கும் இடமெங்கும் அவர் காணப்படுகிறார். தற்போது ஓ மெய் மலையில் மொத்தம் 300க்கும் அதிகமான துறவிகளும் பிக்குனிகளும் ஆண் மற்றும் பெண் துறவிகள் இருக்கின்றனர். சுமார் 30 கோயில்கள் இங்கு காணப்படுகின்றன.

மலை உச்சியில் அமைந்துள்ள ஜின் திங் என்னும் இடம், ஓ மெய் மலையின் முக்கிய இடமாகும். இங்கு பளப்பளக்கும் மூன்று தங்க நிற மண்டபங்களுடன் 48 மீட்டர் உயரமுள்ள SAMANTABHADRA தங்க புத்தர் சிலை, மக்களின் பெரும் கவனத்தை ஈர்க்கிறது. வழிகாட்டி யாங் தௌ ம்மையார் கூறியதாவது:

இந்த SAMANTABHADRA புத்தர் கையில் தங்க ரூ யீ உடன், தலையில் பொன் மணிமுடியை அணிந்துள்ளார். ரூ யீ என்பது, மங்கலத்தைக்காட்டும் ஒரு வகை பொருளாகும். இந்தக் கம்பீரமான தோற்றத்தின் கீழ், அவர் பயணம் செய்யும் 6 தந்தங்கள் கொண்ட வெள்ளை யானை காணப்படுகிறது. மக்கள், எந்தத் திசையில் இருந்தாலும் அவருடை நேர் முகத்தை பார்க்க முடியும். புத்தர் மக்களை பார்த்த வண்ணம் அனைவருக்கும் இன்பம் தருவார். அனைவருக்கும் புகலிடம் தருவார் என்றார்.

லீ காங் யுவான், புத்த நம்பிக்கை மிகுந்தவர். இந்த முறை, அவர் தென் கொரியாவிலிருந்து ஓமெய் மலைக்கு வந்து, SAMANTA புத்தரை வழிபாடு செய்கிறார். அவர் கூறியதாவது:

சீனா, ஒரு மகத்தான நாடு என்று ஓமெய் மலையின் பெரிய புத்த சிலையை பார்த்த பின் நான் உணர்ந்துகொண்டேன். நான் புத்தர் சிலையை வழிபாடு செய்தேன் என்று அவர் கூறினார்.

புத்த மதம் ஓ மெய் மலையில் பரவி வளரும் போக்கில், இம்மலையின் பண்பாடும் வளம் பெற்றுள்ளது. குறிப்பாக இங்குள்ள பல கோயில்களும் புத்தர் சிலைகளும் ஓ மெய் மலையின் எழில் மிக்க இயற்கைக் காட்சியுடன் இணைந்த தலைசிறந்த பண்பாடாக உருவாயின. இதைக் கருத்தில் கொண்டுதான், யுனெஸ்கோ, ஓ மெய் மலையை உலக இயற்கை மற்றும் பண்பாட்டு மரபுச் செல்வ பட்டியலில் சேர்த்துள்ளது. இன்றைய ஓமெய் மலை, ஒத்த பண்பாடுகள் கொண்ட ஆசிய நாட்டு மக்களின் கவனத்தை ஈர்ப்பது மட்டுமல்ல, கடந்த ஆண்டில், ஐரோப்பிய பயணிகள் மிகவும் விரும்புகின்ற சீன சுற்றுலா காட்சி இடங்களில் ஒன்றாகவும் விளங்கியது. இந்த சுற்றுலா கட்சி பிரதேசத்தின் பொறுப்பாளர் duhui கூறியதாவது:

இங்குள்ள அடிப்படை வசதிகள் முழுமையானவை. சுற்று பயண வாகனம், நடைப் பாதை ஆகியவை காணப்படுகின்றன. சுமார் 3 ஆயிரம் படுக்கைகள் கொண்ட மூன்று மற்றும் 5 நட்சத்திர உணவகங்கள் இங்குள்ள உண்டு. இவையனைத்தும் சர்வதேச வரையறைபடி கட்டியமைக்கபட்டுள்ளன என்று அவர் கூறினார்.

ஓ மெய் மலையில் சுற்றுலா மேற்கொண்ட பின் இங்கிருந்து மேற்கு நோக்கி 30 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள லெ சான் பெரும் புத்தர் சிலையைக் காணலாம். இந்தச் சிலை, உலகில் மிகப் பெரிய புத்த சிலையாகும். இதிலிருந்து புத்த மதத்தின் மீதான அப்போதைய மத நம்பிக்கையாளர்களின் பக்தியை கண்டறிந்து வியப்படையலாம்.

எனவே, பல புத்தமத நம்பிக்கையாளர்கள், இங்கு புனிதப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மேற்கு சீனாவின் சிங்ஹாய் மாநிலத்தின் தொங்நாராச்சிங் கோயிலைச் சேர்ந்த வாழும் புத்தர் NORBU RINPOCHE இவர்களில் ஒருவராவார். அவர் கூறியதாவது:

புத்த மத நம்பிக்கையாளர்களாகிய எங்களைப் பொறுத்த வரையில், இங்கு வந்து நீண்டகால வரலாறு வாய்ந்த கம்பீரமான மாபெரும் புத்தர் சிலையை மரியாதையுடன் வணங்க முடிந்தமை, மன அமைதியை தந்தது என்றார் அவர்.