• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-31 14:34:14    
ராட்சத பாண்டாவின் வீடான வொலுங் இயற்கை பாதுகாப்பு மண்டலம்

cri
சீன வானொலி நிலையம் மற்றும் சீனாவின் சிச்சுவான் சுற்றுலா ஆணையம் இணைந்து நடத்துகின்ற "அழகான சிச்சுவான்" என்னும் சுற்றுலா பொது அறிவு போட்டி நிகழ்ச்சி.இது தொடர்பான நான்காவது கட்டுரையை வழங்குகின்றோம். அதன் தலைப்பு பாண்டாவின் வீடான வொலுங் இயற்கை பாதுகாப்பு மண்டலம் என்பதாகும்.

துவங்குவதற்கு முன் போட்டி தொடர்பான இரண்டு கேள்விகளை முன்வைக்கின்றோம்.

1. ராட்சத பாண்டாவின் ஊர், சுச்சுவான் மாநிலத்தில் உள்ளதா?

2. வொலுங் இயற்கை பாதுகாப்பு மண்டலத்தில் எத்தனை காட்டு ராட்சத பாண்டாக்கள் உள்ளன?

இவ்விரண்டு கேள்விகளுக்கான விடைகள் இன்றைய நிகழ்ச்சியில் இடம் பெறுகின்றன. தகவல்கள் அனைத்தையும் தெளிவாக கவனியுங்கள்.

சிச்சுவான் மாநிலத்தின் வட மேற்கு பகுதியில் அமைந்துள்ள வொலுங் இயற்கை பாதுகாப்பு மண்டலம், ராட்சத பாண்டாக்கள் முக்கியமாக வாழும் இடங்களில் ஒன்றாகும். எனவே, சுச்சுவான் மாநிலம், ராட்சத பாண்டாக்களின் ஊர் என கருதப்படுகின்றது. சிச்சுவான், ஷான்சி மாநிலங்களிலும் கான்சு மாநிலத்தின் ஒரு பகுதியிலும் உள்ள மலை மற்றும் வனப் பிரதேசங்களில் தான் காட்டு ராட்சத பாண்டாக்களை மக்கள் காண முடியும். எனவே, சீன மற்றும் வெளிநாட்டுப் பயணிகள், ராட்சத பாண்டாக்களை நேரில் பார்க்க வேண்டுமானால், அவர்கள் இயற்கை பாதுகாப்பு மண்டலத்திலுள்ள சீன ராட்சத பாண்டா பூங்காவுக்கு வர வேண்டும். இந்த மண்டலத்தின் பொறுப்பாளர் சாங் லி மிங் கூறியதாவது-

ராட்சத பாண்டாக்கள் தொடர்ந்து நலமோடு வாழ்வதற்கு உதவி செய்து, ராட்சத பாண்டாவை விரும்பும் உலக மக்களுக்கு ராட்சத, பாண்டாவை நேரில் பார்க்கும் வாய்ப்பை வழங்குவதும், உயிரின வாழ்க்கைச் சூழலை பாதுகாப்பதன் அவசியத்தை பயணிகளுக்கு தெரிவிப்பதும் தான் எங்கள் நோக்கமாகும் என்றார்.

சீனத் ராட்சத பாண்டா பூங்காவில் 100க்கும் அதிகமான ராட்சத பாண்டாக்கள் வளர்க்கப்படுகின்றன. இங்கு பல பாண்டாக்கள் வெளியே விளையாடுகின்றன, அவற்றில் சில, சலுக்கல் ஏணியில் விளையாடுகின்றன. வேறு சில, சூரிய ஒளியில் பாறையின்மீது சாய்ந்திருக்கின்றன. இன்னும் சில, மரங்களில் ஏறி, கடினமான விளையாட்டுகளில் ஈடுபடுகின்றன.

அமெரிக்காவிலிருந்து வந்த Rebecca Haase அம்மையார், ராட்சத பாண்டாக்கள் சாப்பிடுவது, நீர் குடிப்பது, மற்றும் விளையாடுவதை படம் பிடித்தார். அவர் ராட்சத பாண்டாவை முதல் முறை நேரடியாக பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அவர் கூறியதாவது-

நான் இங்கு வந்து ராடச்த பாண்டாக்களை நேரில் பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். அவை பார்ப்பதற்கு மிகவும் நலமுடனும் பாசமுள்ளதாகவும் இருக்கின்றன. வொலுங் இயற்கை பாதுகாப்பு மண்டலத்தில் மேலும் கூடுதலான ராட்சத பாண்டாக்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன் என்றார் அவர்.

சீனப் ராட்சத பாண்டா பூங்காவில் முன்னேறிய சாதனங்களுடன் கூடிய ஒரு குட்டி வளர்ப்பு அறை உண்டு, இதில் குட்டி பாண்டாக்கள் வளர்க்கப்படுகின்றன. சீன தைவானிலிருந்து வந்த திரு சாங் சி சாங் அவர்கள் இந்த அறையை அதிக நேரம் பார்த்தார். பணியாளர்கள் குட்டி பாண்டாக்களுக்கு பால் ஊட்டியதை முழுமையாக அவர் பார்வையிட்டார். அவர் கூறியதாவது  

சீனத் தேசிய பொக்கிஷமான ராட்சத பாண்டாக்கள் பற்றி இந்த முறை அதிகம் அறிந்துகொண்டேன், ராட்சத பாண்டா பற்றிய கதை, வளரும் சூழ்நிலை ஆகியவற்றை வழிகாட்டி ஒருவர் எங்களிடம் தெரிவித்தார். ராட்சத பண்டாக்களின் இனப்பெருக்கம் மிகவும் கடினமானது, தாய் பாண்டாவுக்கு தன் குட்டியை வளர்க்க தெரியாது என்றார் அவர்.

ராட்சத பாண்டாக்களை மிகவும் விரும்புவதால், மென்மேலும் கூடுதலான பயணிகள் நேரத்தை செலவிட்டு வொலுங்கிற்கு வந்து தொண்டர்களாக பணிபுரிய விரும்புகின்றனர். வளர்ப்பாளரின் ஆடையை அணிந்த ஜப்பானியர் Kodama Midori அவர்களில் ஒருவராவார். தம்முடன் சேர்ந்து மொத்தம் மூன்று பேர் வந்துள்ளதாகவும், ராட்சத பாண்டாக்களுடன் ஒரு வாரம் கழிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

நான் நாள்தோறும் காலையில் ராட்சத பாண்டாவுக்கு உணவு ஊட்டுகின்றேன், நண்பகலும் இரவிலும் அறையை சுத்தம் செய்து, அவற்றின் கழிவுகளை துப்புரவு செய்கின்றேன். சாதாரண நாட்களில் ராட்த பாண்டாக்களின் அருகே இருப்பது சாத்தியமாகாது. எனவே, இந்த முறை நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன் என்றார் அவர்.

வளர்ப்பு ராட்சத பாண்டாக்கள் தவிர, தற்போது, வொலுங் இயற்கை பாதுகாப்பு மண்டலத்தின் காடுகளில், 100க்கும் அதிமான காட்டு ராட்சத பாண்டாக்கள் வளர்கின்றன. உலகில் உள்ள ராட்சத பாண்டாக்களின் மொத்த எண்ணிக்கையில் இது பத்தில் ஒரு பகுதியாகும். உயர் நிலை பயணிகளுக்கு சேவை செய்யும் வகையில், அண்மையில் இந்த இயற்கை பாதுகாப்பு மண்டலத்தில் ராட்சத பாண்டாக்களின் வாழ்க்கை பற்றிய உலகின் முதலாவது ஆராய்ச்சி நடவடிக்கை துவங்கியுள்ளது. அவர்கள் அறிவியல் தொழில் நுட்பத் திறனுடைய கண்காணிப்புக் கருவிகள் மூலம் காட்டிலுள்ள பாண்டாக்களின் வாழ்க்கை நிலையை நேரில் பார்க்கலாம்.

நேயர்களே, நீங்கள் ராட்சத பாண்டாவின் வீடான வொலுங் இயற்கை பாதுகாப்பு மண்டலத்துக்குச் சென்று, கண்டுகளிக்க வரவேற்கின்றோம். கடைசியில், மேலே கேட்ட இரண்டு வினாக்களை மீண்டும் கூறுகிறேன்.

1. ராட்சத பாண்டாவின் ஊர், சுச்சுவான் மாநிலத்தில் உள்ளதா?

2. வொலுங் இயற்கை பாதுகாப்பு மண்டலத்தில் எத்தனை காட்டு ராட்சத பாண்டாக்கள் உள்ளன?