• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-31 10:03:08    
6வது சீனாவின் விவசாயி விளையாட்டுப் போட்டி

cri
6வது சீன விவசாயி விளையாட்டுப் போட்டி இன்றிரவு சீனாவின் தென் பகுதியிலுள்ள Fu Jian மாநிலத்தின் Quan Zhou நகரில் துவங்கியது. நடப்பு விவசாயி விளையாட்டுப் போட்டியில் தடகளம், நீச்சல், சதுரங்க ஆட்டம் உள்ளிட்ட 150க்கு அதிகமான போட்டிகள் இடம் பெற்றன. தைவான் குழு உள்ளிட்ட 32 பிரதிநிதிக் குழுகளைச் சேர்ந்த 3000க்கு அதிகமான வீரர்கள் இப்போட்டியில் கலந்துகொள்கின்றனர். தைவானை சேர்ந்த தெய் யா இன மற்றும் ஆ மெய் இன ஆடல் பாடல் குழு துவக்க வழாவில் அரங்கேற்றியது. 6வது சீன விவசாயி விளையாட்டுப் போட்டி நவம்பர் முதல் நாள் நிறைவடையும். 2008ம் ஆண்டு ஆகஸ்டு திங்கள், 29வது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை பெய்சிங் வெற்றிகரமாக நடத்தியது.

முழு உலகத்தின் விளையாட்டு ரசிகர்களுக்கு அருமையான காலத்தை இது வழங்கியுள்ளது. ஆனால், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு பின், சீனாவுக்கும் சர்வதேச முதல் நிலை விளையாட்டுப் போட்டிகளுக்குமிடையில் நெருக்கமான தொடர்பு நிலவுமா என்பதில் மக்கள் அனைவரும் அக்கறை செலுத்தி வருகின்றனர். சீனாவுக்கும் சர்வதேச முதல் நிலை விளையாட்டுப் போட்டிகளுக்குமிடையிலான நெருங்கிய தொடர்பு ஏற்கனவே துவங்கியது. உலக Formula 1 கார் பந்தயத்தின் சீனப் போட்டி மற்றும் ஷாங்காய் டென்னிஸ் மாஸ்டர் கோப்பையின் ஒருங்கிணைப்பாளரும், ஷாங்காய் ச்சியு சிய் சர்வதேச விளையாட்டு போட்டி நிர்வாக நிறுவனத்தின் பொது மேலாளருமான Jiang Lan, நமது செய்தியாளருக்கு பேட்டி அளித்த போது, இவ்வாறு தெரிவித்தார். விசைப்பொறியின் ஒலியுடன், 2008ம்

ஆண்டுக்கான உலக Formula 1 கார் பந்தயத்தின் சீனப் போட்டி 19ம் நாள் சீனாவின் கிழக்கு பகுதியிலுள்ள ஷாங்காய் மாநகரில் நடைபெற்றது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு பின், சீனாவில் முதலாவதாக நடைபெற்ற முதல் நிலை போட்டியான ஷாங்காய் கார்பந்தயப் போட்டி பல்லாயிரக்கணக்கான விளையாட்டு ரசிகர்களை ஈர்த்துள்ளது. உலக Formula 1 கார் பந்தயத்தின் சீனப் போட்டி மற்றும் ஷாங்காய் டென்னிஸ் மாஸ்டர் கோப்பையின் ஏற்பாட்டுக்குழுவான ஷாங்காய் ச்சியு சிய் சர்வதேச விளையாட்டுப் போட்டி நிர்வாக நிறுவனத்துக்கு மாபெரும் நிர்ப்பந்தத்தையும் உயிராற்றலையும் இது வழங்கியது. சர்வதேச முதல் நிலை விளையாட்டு போட்டிகள் மீதான சீன மக்களின் சறுர்வம் தொடர்ந்து அதிகரிப்பதை இது முழுமையாக எடுத்துக்காட்டியுள்ளது. இரு தரப்புகளுக்கிடையில் மேலும் அதிக நெருங்கிய தொடர்பு நிலைநிறுத்தப்படும் என்று ஷாங்காய் ச்சியு சிய் சர்வதேச விளையாட்டு போட்டி நிர்வாக நிறுவனத்தின் பொது மேலாளர் Jiang Lan தெரிவித்தார்.

இந்த உறவு மேலும் அதிக நெருங்கிய தொடர்பை நிலைநிறுத்தும் என்று நான் கருதுகின்றேன். முதலாவதாக, கடந்த 10 ஆண்டுகளில், உலக Formula 1 கார் பந்தயத்தின் சீனப் போட்டி, ஷாங்காய் டென்னிஸ் மாஸ்டர் கோப்பை உள்ளிட்ட விளையாட்டுச் சந்தை வசதியான அடிப்படையை உருவாக்கியுள்ளது. இரண்டாவதாக, வெளிநாட்டுத் திறப்பு அளவு தொடர்ந்து அதிகரிக்கப்படுவதுடன், மேலதிக சர்வதேச முதல் நிலை விளையாட்டுப் போட்டிகளை நடப்பதன் மூலம் சீனாவின் செல்வாக்கை விரிவாக்கி, நவீன சேவை நிலையை உயர்த்தி, தொடர்புடைய தொழிற்துறைகளை தூண்டும். எனவே, தேவையையும் சந்தை நிலைமையையும் பார்க்கும் போது, இந்த சர்வதேச முதல் நிலை விளையாட்டுப் போட்டிகளுக்கும் சீனாவுக்குமிடையில் மேலும் அதிக நெருங்கிய தொடர்பு நிலைநிறுத்தப்படும் என்றார் அவர். உலக Formula 1 கார் பந்தயம்,

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, ஆடவர் உலகக் கோப்பை கால்பந்து ஆகியவை உலகில் முக்கிய 3 விளையாட்டுப் போட்டிகளாகும் என்று பொதுவாகக் கருதப்படுகின்றது. இது வரை, அவை 50 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றைக் கொள்கின்றன. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பரவலான ரசிகர்கள் மற்றும் விளம்பரதாரர்கள் உள்ளனர். உலக Formula 1 கார் பந்தயத்துக்கு 180க்கு அதிகமான நாடுகள் தொலைக்காட்சி ஒளிபரப்பை மேற்கொண்டு வருகின்றன. இதில் 30 கோடிக்கு அதிகமான பார்வையாளர்கள் உள்ளனர். 2004ம் ஆண்டு, சீனாவின் ஷாங்காய் மாநகரம் இப்போட்டியை நடத்த துவங்கியது. ஷாங்காய் மாநகருக்கு சீரான சர்வதேச புகழை இது வழங்கியுள்ளது. சீனாவின் விளையாட்டு தொழிற்துறையில், உலக Formula 1 கார் பந்தயம் முக்கியத்துவம் வாய்ந்தது.