• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-31 10:07:03    
Ballet நடனக் கலைஞரான Hou Honglan

cri
2008ஆம் ஆண்டு மே திங்கள், 5வது San Francisco சர்வதேச கலை விழா, San Franciscoவின் Yerba Buena கலை மையத்தில் துவங்கியது. 18 நாடுகளைச் சேர்ந்த 125 கலைஞர்கள் சிறப்பான அந்த விழாவில் கலந்து கொண்டனர். விழாவின் முதல் நாள், சீன மத்திய ballet நடனக் குழுவின் முன்னாள் முதன்மை நடிகை Hou Honglan, அமெரிக்க நடனக் கலைஞர் Jonesஉடன் இணைந்து, நகரத்தை வெற்றிகொண்ட காதல் என்ற ballet நடனத்தை அரங்கேற்றினர். அவர்களின் ஆழமான, உணர்வுப்பூர்வமான

அரங்கேற்றத்தினால், அனைத்து ரசிகர்களும் மனமுருகினர். Ballet நடனத்தின் ஈர்ப்பு ஆற்றல் அப்போதுதான் பரவலாக்கப்பட்டது. உண்மையில் 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே, சர்வதேச ballet அரங்கில் Hou Honglan பெரும் சாதனையைப் பெற்றுள்ளார்.
குழந்தை பருவத்தில் ballet நடனத்துடன் முன்வினைத் தொடர்பு கொண்ட Hou Honglan கலைப் பள்ளியில் தடையின்றி நுழைந்தார். தலைசிறந்த மதிப்பெண்ணுடன் பெய்ஜிங் நடனக் கல்லூரியின் ballet நடனத் துறையிலிருந்து படிப்பை முடித்த பின், மக்களின் பார்வையைக் கவரும் சீன மத்திய ballet நடனக் குழுவில் சேர்ந்து, Ballet நடனக்

கலைஞராக மாறினார். ஆனால், 1.75 மீட்டர் உயரமுடைய அவர், ballet நடனத் துறையில் பெரிதும் வரவேற்கப்படவில்லை. Ballet நடனக் கலைஞர்கள் பலர் அவரது நடனக் கூட்டாளியாக மாற விரும்பவில்லை. உடன் நடனமாடும் உரிய நடனக் கூட்டாளி இல்லாத நிலையில், பல்வகை கதா பாத்திரங்களில் நடனமாடும் தனது விருப்பத்தை Hou Honglan நிறைவேற்றுவது கடினமானது. மன உறுதி மிக்கவாரன அவர் வியக்கத்தக்க இரண்டு முடிவுகளைச் செய்தார். லக்சம்பர்க் நாட்டுக்கு தனியாக சென்று 4வது லக்சம்பர்க் சர்வதேச ballet நடனப் போட்டியில் கலந்து கொள்வது அவரது முதலாவது முடிவாகும். அந்தப் போட்டியில், வயது வந்தோர் மகளிர் குழுவுக்கான தங்கப் பரிசை அவர் வென்றெடுத்தார். அதே ஆண்டில், தனிநபர் ballet நடன அரங்கேற்ற நிகழ்ச்சியை நடத்துவது என்பது அவரது இரண்டாவது முடிவாகும். அந்த அரங்கேற்ற நிகழ்ச்சி

வெற்றி பெற்றது. 1999ஆம் ஆண்டில், Hou Honglan அழைப்பை ஏற்று, பிரான்சுக்குச் சென்று, பிரெஞ்சு Rhine ballet நடனக் குழுவுடன் உடன்படிக்கையை உருவாக்கி, அக்குழுவின் முதன்மை விருந்தினர் நட்சத்திரமாக மாறினார்.
பல "முதல் முறை" என்ற புகழாரங்களை Hou Honglan சூடிக் கொண்டார். தனிநபர் ballet அரங்கேற்ற நிகழ்ச்சியை அவர் நடத்தியது அதுவே முதல் முறை. சர்வதேச ballet போட்டியில் அவர் சொந்த செலவில் கலந்து கொண்டது அதுவே முதல் முறை. சீனாவின் முதலாவது நவீன ballet நாடகத்தை படைத்து கதா நாயகியாக அவர் நடித்தது அதுவே முதல் முறை. சீனாவைச் சேர்ந்த இளம் பெண்ணான அவர் பிரெஞ்சு செய்தி ஊடகங்களால் ballet இளவரசியாக அழைக்கப்பட்டதும் அதுவே முதல் முறை.

பல ஆண்டுகளாக சர்வதேச அரங்கில் நடனமாடும் அனுபவங்கள் அவருக்கு வழங்கியவை என்ன என்று கேட்கப்பட்ட போது, "தன்னம்பிக்கை" என அவர் தயக்கமின்றி பதிலளித்தார். இந்தத் தன்னம்பிக்கையின் காரணமாக தான், ballet நடனத்தின் அழகு மற்றும் உன்னதத் தரத்தை அவர் முழுமையாக வெளிப்படுத்துவதோடு, அவற்றை தனது ஆன்மாவின் ஒரு பகுதியாகவும் மாற்றியுள்ளார்.