• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-31 14:33:12    
பூமியில் சொர்க்கம்

cri

இப்போது, சீன வானொலி நிலையமும், சீன சிச்சுவான் மாநிலத்தின் சுற்றுலா ஆணையமும் இணைந்து நடத்துகின்ற அழகான சிச்சுவான் என்ற சுற்றுலா பொது அறிவுப் போட்டி நேரம். இன்று இது பற்றிய முதலாவது கட்டுரையை வழங்குகின்றோம். அதன் தலைப்பு, பூமியில் சொர்க்கம் என்பதாகும்.

நிகழ்ச்சி துவங்கும்முன், இரண்டு கேள்விகளை முன்வைக்கிறோம். ஒன்று, jiuzhaigou என்ற சுற்றுலா பிரதேசம், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் 9 கிராமங்கள் இருக்கின்றதால் பெயர் பெற்றதா? இரண்டு, jiuzhaigou மற்றும் ஹூவாங் லூங் சுற்றுலா பிரதேசங்கள், உலக மரபுச் செல்வ பட்டியலில் சேர்க்கப்பட்டனவா?அடுத்து, இதற்கான விடைகளை கண்டறியும் விதமாக, நிகழ்ச்சியை முழுமையாக கேளுங்கள்.
Jiu zhai gou சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் மேற்கு பகுதியின் abaஇல் திபெத்தின் qiang இன தன்னாட்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. அதன் 40 கிலோமீட்டருக்கு மேலான பள்ளத்தாக்குப் பரப்பில், 9 திபெத் இன கிராமங்கள் சிதறிக் கிடக்கின்றன. எனவே, Jiu zhai gou என்று பெயர் பெற்றது.
இஸ்ரேலிருந்து வந்த திரு Nerohem Yam, சீனாவின் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் செய்ய விரும்புகின்றார். பெய்ஜிங் ஷாங்காய் முதலிய இடங்களுக்குச்சென்ற பின், அவர் சீனாவின் நடையுடைபாவனைகளையும் எழில் மிக்க இயற்கை காட்சிகளையும் அறிந்து கொண்டார். ஆனால், அவர் Jiu zhai gou த்திற்குச் சென்ற பின்னர் தான், இங்குள்ள சிறப்பான அழகை வெகுவாகப் பாராட்டினார். இவ்விடம், சீனாவிலேயே மிகவும் எழிலானது. இதர இடங்களில் இது போன்ற அழகான மலைகளையும் ஏரிகளையும் நான் பார்த்ததில்லை. இவை, இதர அனைத்திற்கும் மேலானவை என்றார்.
நீர் வளத்தால், Jiu zhai gou அற்புதமானதாக தோற்றமளிக்கிறது. நீரே, அதன் ஆத்மா. அவ்விடத்தின் பள்ளத்தாக்குகளில், 100க்கும் அதிகமான சிறிய மற்றும்பெரிய வண்ண உயர் மலைகளும், ஏரிகளும் ஆங்காங்கே காணப்படுகின்றன. உள்ளூர் திபெத் இன மக்கள், இதை கடலின் மகன் என பொருட்படும் வகையில், ஹைசி என அழைக்கின்றனர்.
Jiu zhai gouவில், changhai என்னும் மிகப் பெரிய ஏரியின், அருகில் சென்று பார்ப்பதற்கு நீர் பசுமையாக காட்சியளிக்கிறது. ஏரியின் அடித்தளம் வரை நீர் தெளிந்து ஓடுகின்றது. தூரத்தில் இருந்து பார்க்கும் போது, ஏரிப் பரப்பு, நீளமானதாகவும் அலையில்லாமலும் அமைதியாகவும் காட்சி தருகின்றது. இரு கரைகளிலும் உள்ள பசுமையான மலைகள் தலைகீழாக அந்த ஏரியில் கிடப்பது போலவும் ஓவியம் போல் எழிலானவையாகவும் நீரில் தெரிவது, கண்கொள்ளாக் காட்சியாகும்.
ஜப்பானைச் சேர்ந்த Morishita Sadamasa, இத்தகைய ஏரியைக் கண்டு ரசித்த பின், வாயார பாராட்டினார்.
ஜப்பானில் இருந்த போது Jiu zhai gou பற்றிய தொலைக்காட்சி படத்தைப் பார்த்துள்ளேன். இங்கு வந்து, அதன் உண்மை காட்சியைப் பார்த்த பின்னர், தொலைக்காட்சியில் பார்த்ததை விட, மேலும் அழகானது என அறிந்து கொண்டேன். இத்தகைய ஏரிகள், ஜப்பானிலும் இருக்கின்றன. ஆனால், Jiu zhai gou அவற்றை விட அழகாக உள்ளது என்றார்.
Jiu zhai gouவிலுள்ள நீர், ஏரிகளில் இருக்கும் போது அதிகமாக அமைதியாகவுள்ளது. ஆனால், மரங்கள் நிறைந்து வளர்ந்துள்ள மலையிலிருந்து செங்குத்தாக வீழ்கின்ற போது, ஆர்ப்பரிக்கும் அருவியாக அது மாறிவிடுகிறது. Jiu zhai gouவில் 17 அருவிகள் உள்ளன.


இத்தகைய எழில் கொஞ்சும் பகுதி தான், Jiu zhai gou. பூமியில் சொர்க்கம் என சீனர்கள் அழைக்கின்றனர். Jiu zhai gou 1992ஆம் ஆண்டு யுனேஸ்கோ அமைப்பால் உலக இயற்கை மரபுச் செல்வப்பட்டியலில் சோர்க்கப்பட்டது.
இங்கு வசிக்கும் திபெத் இன மக்களின் கருத்தில், Jiu zhai gou, தங்களது புனித மலையும் புனித நீரும் ஆகும். இங்குள்ள மலைகள், நீர், வனம், கற்கள் எல்லாம் கடவுளால் அளிக்கப்பட்டவை என எண்ணுகின்றனர். திபெத் இன இளம் பெண் இனாமான்ஹுன் பேசுகையில், Jiu zhai gouவிலுள்ள புல், செடி, ஒவ்வொன்றையும் கவனமாக பேணிக்காக்க வேண்டும் என்று சிறு வயதிலிருந்தே அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
அனைத்துக்கும் ஆத்மா உண்டு என்று எங்கள் உள்ளூர் திபெத் இனத்தவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். மலைகள், ஆறுகள், மரங்கள் எல்லாம், கடவுளால் அளிக்கப்பட்ட அன்பளிப்புகள். மனிதகுலம் அவற்றைப் பாதுகாக்க வேண்டும். அவற்றைச் சீர்குலைக்க காரணம் ஏதுமில்லை என்றார்.
பயணிகள் திபெத் இனத்தவர்களின் வீட்டில் விருந்தினராக வெண்ணெய் தேனீரை அருந்தி, பார்லி மதுவைக் குடித்துக் கொண்டே திபெத் இனத்தவர்கள் ஆடிப்பாடுவதைக் கண்டு இரசிப்பது, மகிழ்ச்சியான ஒன்றாகும்.
Jiu zhai gouவைப் பார்வையிட்ட பின், பூமியிலான சொர்க்கத்தில் தொடர்ந்து சுற்றுலா செல்ல, வாகனம் மூலம் ஹுவான் லுன் எனும் காட்சிப் பிரதேசத்துக்குச் செல்லலாம். இவ்விரண்டுக்கும் இடையில் தூரம் 130 கிலோமீட்டர் மட்டுமே. Jiu zhai gouவைப் போல, 1992ம் ஆண்டு யுனேஸ்கோ அமைப்பால், ஹுவான் லுனும் உலக இயற்கை மரபுச் செல்வத்தின் பெயர்பட்டியலில் சேர்க்கப்பட்டது. நீர் வளமே இங்குள்ள முக்கியக் காட்சியாகும்.
ஹுவான் லுனில் நீர் வளக் காட்சியைக் கண்டு இரசிக்கும் போது, மலையிலிருந்து பள்ளத்தாக்கை நோக்கி பார்க்க வேண்டி வரும். பள்ளத்தாக்கில் சுமார் 4 கிலோமீட்டர் நீளமான மெல்லிய மஞ்சள் நிறத் தரையில் 3000க்கும் அதிகமான குளங்கள் இருக்கின்றன. படி வயல் போல் அவை காணப்படுகின்றன. அவற்றில், மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள சுனை, ஐந்து வண்ண சுனை என்று அழைக்கப்படுகிறது. இது, சுமார் 700 சிறு சுனைகளால் உருவாக்கப்பட்டது. சூரிய ஒளியில் அவை மின்னியபடி ஒளி வீசுகின்றன. வேறுபட்ட வண்ணங்களில், ஓடும் அழகான அந்த சுனைகள், ஹூவான் லூன் இயற்கைக் கட்சியின் மிக அழகான காட்சித் தலமாக என கூறலாம்.
நேயர்களே, பூமியின் சொர்க்கமாக அழைக்கப்படுகின்ற சீன சிச்சுவானின் Jiu zhai gou மற்றும் ஹூவான் லூங் சுற்றுலா பிரதேசங்கள் பற்றி கேட்டீர்கள்.