திபெத் தன்னாட்சிப் பிரதேசம், Qin Hai, Yun Nan முதலிய கடுமையான பனிச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு உதவி அளிப்பதற்காக, சீன பொதுத் துறை அமைச்சகமும் நிதி அமைச்சகமும் ஒரு கோடி யுவான் மதிப்புள்ள அவசர மீட்புதவி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளன. பருத்திகூடாரங்கள், பருத்தி ஆட்டைகள், போர்வை உள்ளிட்ட அவசர மீட்புதவிப் பொருட்களை இப்பிரதேசங்களுக்கு அனுப்ப பொதுத் துறை அமைச்சகம் ஒருங்கிணைப்பு மேற்கொண்டுள்ளது.
புள்ளி விபரங்களின் படி, 30ம் நாள் மாலை 4 மணிக்கு வரை, Nyingchi, naqu, shannan, rikezer முதலிய திபெத்தின் 19 மாவட்டங்கள் வேறுபட்ட அளவில் பாதிக்கப்பட்டன. இதில் 7 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காணாமல் போனார். தவிர, Qing Hai மாநிலத்தில் சுமார் 2இலட்சத்து 90ஆயிரம் ஆயர்கள் பாதிக்கப்பட்டனர். Yun Nan மாநிலத்தின் Di Qing திபெத் இனத் தன்னாட்சி சோவின் De Qin மாவட்டத்தில் 18ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர், ஒருவர் காணாமல் போனார்.
தற்போது, கடுமையான பனிச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுக்காப்பான இடத்திற்கு குடியமர்க்கப்பட்டனர். பல்வேறு பேரிடர் நீக்கப் பணிகள் விரைவாகவும் ஒழுங்காகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
|