2008ம் ஆண்டின் முதல் 9 திங்களில், சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு, 2700கோடி யுவானுக்கு மேலாகும். கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட இது 9 விழுக்காடு அதிகமாகும். முதலீடு, நுகர்வு, ஏற்றுமதி, இறக்குமதி முதலிய துறைகளில் விரைவான அதிகரிப்பு வேகம் காணப்பட்டுள்ளது.
புள்ளி விபரங்களின் படி, திபெத்தின் சுற்றுலா துறை மீட்கப்பட்டது. இவ்வாண்டின் முதல் 9 திங்களில், திபெத்தில் சுற்றுலா பயணம் மேற்கொண்ட உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை 17 இலட்சத்துக்கு மேலாகும். சுற்றுலா மூல வருமானம் சுமார் 180கோடி யுவானாகும்.
லாசா நகரில் நிகழ்ந்த மார்ச 14 வன்முறை சம்பவத்தால், திபெத்தின் பொருளாதார அதிகரிப்பு வேகம், ஒரு காலத்தில் கடந்த 10 ஆண்டுகளிலான மிகத் தாழ்ந்த நிலைக்கு எட்டியிருந்தது. ஆனால், முதலீட்டு சூழநிலையை பெரிதும் மேம்படுத்துவது, வெளிநாட்டு வணிகர் முதலீட்டை ஈர்க்கும் ஆற்றலை வலுப்படுத்துவது, சிறப்புத்தொழில்களுக்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பது ஆகியவற்றுடன், திபெத்தின் பொருளாதாரம் சீரான வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியது.
|