2ம் நாள் பிற்பகல் 2 மணிக்கு வரை, சீனத் திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் Shan Nan இடத்தில் நிகழ்ந்த வரலாற்றில் அரிதான கடும் பனிச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும், பாதுக்காப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர் அல்லது உரிய முறையில் ஏற்பாடு செய்து தரப்பட்டனர்.
அக்டோபர் 26ம் நாள் முதல், திபெத்தின் பெரும்பாலான பகுதிகள், கடுமையான பனிச் சீற்றத்தால் பாதிக்கப்பட்டன. அப்பகுதிகளிலுள்ள பனி அடர்த்தி, 1.2-1.5 மீட்டரை எட்டியது. 3000க்கு மேலானோர் சிக்கலில் மாட்டிக் கொண்டனர். உயிரிழப்பு ஏற்பட்டது.
பனிச் சீற்றத்துக்கு பின், திபெத்தின் பல்வேறு நிலை அரசுகளும் Shan Nan பிரதேசத்திலான படைப்பிரிவும் உடனடியாக பேரிடர் நீக்கப் பணியை மேற்கொண்டன. 3கோடியே 80இலட்சம் யுவான் மதிப்புள்ள அவசர மீட்புதவி நிதியை பாதிக்கப்பட்ட இடங்களுக்கு உள்ளூர் அரசு ஒதுக்கீடு செய்ததோடு, பல கால்நடை தீவனம், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட மீட்புதவிப் பொருட்களை அனுப்பியுள்ளது.
|