• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-03 16:37:00    
சீன-ஆப்பிரிக்க பண்பாட்டுப் பரிமாற்றம்

cri
2008 ஆப்பிரிக்க பண்பாடு என்ற பெரியளவிலான சீன-ஆப்பிரிக்க பண்பாட்டுப் பரிமாற்ற நடவடிக்கை, அக்டோபர் திங்கள் 23 முதல் 25ம் நாள் வரை,தென் சீனாவின் Shenzhen நகரில் நடைபெற்றது. சீனாவுக்கும் ஆப்பிரிக்காவுக்குமிடையிலான, பாரம்பரிய நட்புறவை தொடர்ந்து வெளிக்கொணர்ந்து, பரிமாற்றத்தை வலுப்படுத்தி, மேலதிகமான புரிந்துணர்வு வழிமுறைகளை விரிவாக்க வேண்டும் என்று இவ்விழாவில் கலந்துகொண்ட ஆப்பிரிக்க கலைஞர்களும் அதிகாரிகளும் எமது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது தெரிவித்தனர்.

2006ம் ஆண்டு, சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் உச்சிமாநாட்டுக்கு பிறகு, 2008 ஆப்பிரிக்க பண்பாடு என்ற சீன-ஆப்பிரிக்க பண்பாட்டுப் பரிமாற்ற நடவடிக்கை, சீனாவில் நடைபெற்ற மிகப் பெரிய ஆப்பிரிக்க பண்பாட்டு விழாவாகும். ஆப்பிரிக்காவின் 25 நாடுகளின் சுமார் 140 கலைஞர்கள், தொல் பொருள் ஆய்வு நிபுணர்கள், அதிகாரிகள் முதலியோர், சீனாவில், பயணம் மேற்கொண்டு பரிமாற்றம் செய்தனர். அதேவேளையில், தொடர்புடைய அரங்கேற்றங்கள் மற்றும் பொருட்காட்சிகளின் மூலம் அவர்கள், சீனாவின் பல்வேறு பிரதேசங்களில் கலந்தாய்வு மற்றும் விவாதங்களை நடத்தினர்.

2008 ஆப்பிரிக்க பண்பாடு என்ற பெரிய அளவிலான சீன-ஆப்பிரிக்க பண்பாட்டுப் பரிமாற்ற நடவடிக்கையின் முக்கிய அம்சமான கலைப் பொருட்காட்சியில், பல்வகை ஆப்பிரிக்க கலையம்சங்கள் பன்முகங்களிலும் காட்டப்பட்டன. செனகல் நாட்டு அருங்காட்சியகத்தின் அரியபெருட்கள், காபோன் நாட்டுப்புற கலை, எகிப்து தொல் பொருட்ககளின் பிரதிகள், சீன ஓவியர்கள் ஆப்பிரிக்காவில் பயணம் செய்து தீட்டிய படைப்புக்கள், சீனாவில் வெளியிடப்பட்ட ஆப்பிரிக்கா பற்றிய நூல்கள் முதலியவை இப்பொருட்காட்சியில் இடம்பெற்றன.

நண்பர்களே, சீன-ஆப்பிரிக்க பண்பாட்டுப் பரிமாற்றம் என்ற தகவலைப் படித்த பின், உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இந்தத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.