• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-03 10:26:37    
2008ம் ஆண்டு உலக ஸ்னூக்கர் போட்டி

cri
2008ம் ஆண்டு உலக ஸ்னூக்கர் போட்டியின் வோ சோ போட்டி 26ம் நாள் முடிவடைந்தது. இறுதிப் போட்டியில் சீன வீரர் Ding Junhuiஉம் 1997ம் ஆண்டு உலக சாம்பியன்பட்டப் போட்டியின் வெற்றியாளருமான Ken Dohertyஉம் மோதினர். இப்போட்டியில் 6-4 என்ற ஆட்டக் கனக்கில் Ken Dohertyஐத் தோற்கடித்து, இவ்வாண்டின் தனது இரண்டாவது சர்வதேச சாம்பியன் பட்டத்தை Ding Junhui பெற்றார்.

உலக Formula 1 கார் பந்தயம் முக்கியத்துவம் வாய்ந்தது என்று பொதுவாகக் கருதப்படுகின்றது. இது வரை, சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் உலக Formula 1 கார் பந்தயமும் டென்னிஸ் மாஸ்டர் கோப்பையும் வணிக நிலை மற்றும் சர்வதேச புகழில் ஒரளவுக்கு உயர்வானவையாகும். அத்துடன், இரு போட்டிகளை பற்றி நாம் அதிகம் அறிந்துவைத்துள்ளோம். சீன விளையாட்டுத் தொழிற்துறையின் வளர்ச்சியை தூண்டுவதற்கு இது வரலாற்று கடப்பாட்டையும் கடமையையும் கொண்டு வருகின்றது என்றார் அவர்.
2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு பின், 2008ம் ஆண்டுக்கான உலக Formula 1 கார் பந்தயத்தின் சீனப் போட்டி, ஷாங்காய் டென்னிஸ் மாஸ்டர் கோப்பை போட்டி உள்ளிட்ட பல உலக முதல் நிலை விளையாட்டுப் போட்டிகள் சீனச் சந்தையில் நுழைந்தன. சீன மக்களின் விளையாட்டு உற்சாகத்தை

இது மேலும் தீவிரமாக்கியுள்ளது. சீனா உலக முதல் நிலை விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி புதிய வாய்ப்புகளை வழங்கும் என்று Jiang Lan கூறினார்.
முதலாவதாக, சீன மக்கள் விளையாட்டு பணியில் கவனம் செலுத்துவது என்பது முக்கியமானது. ஏனென்றால், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மக்களின் ஆர்வத்தையும் அக்கறையையும் தீவிரமாக்கியுள்ளது. இரண்டாவதாக, விளையாட்டு சந்தையின் ஈர்ப்பு ஆற்றலையும் சிறப்பான பங்கையும் பல்வேறு பெரிய தொழில் நிறுவனங்கள் கண்டறிந்துள்ளன. எனவே, சீனாவில் சர்வதேச முதல் நிலை விளையாட்டுப் போட்டிகளின் வளர்ச்சிக்கு சீரான வாய்ப்பை இது வழங்கும் என்றார் அவர்.

6வது சீனாவின் விவசாயி விளையாட்டுப் போட்டி
6வது சீன விவசாயி விளையாட்டுப் போட்டி இன்றிரவு சீனாவின் தென் பகுதியிலுள்ள Fu Jian மாநிலத்தின் Quan Zhou நகரில் துவங்கியது.
நடப்பு விவசாயி விளையாட்டுப் போட்டியில் தடகளம், நீச்சல், சதுரங்க ஆட்டம் உள்ளிட்ட 150க்கு அதிகமான போட்டிகள் இடம் பெற்றன. தைவான் குழு உள்ளிட்ட 32 பிரதிநிதிக் குழுகளைச் சேர்ந்த 3000க்கு அதிகமான வீரர்கள் இப்போட்டியில் கலந்துகொள்கின்றனர். தைவானை சேர்ந்த தெய் யா இன மற்றும் ஆ மெய் இன ஆடல் பாடல் குழு துவக்க வழாவில் அரங்கேற்றியது.
6வது சீன விவசாயி விளையாட்டுப் போட்டி நவம்பர் முதல் நாள் நிறைவடையும்.