• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-04 15:21:46    
மேய் லான் ஃபாங் நினைவு மண்டபம்

cri

மேய் லான் ஃபாங் நினைவு மண்டபம், பெய்ஜிங் சி ச்சேங் பிரதேசத்தின் ஹு குவொ கோயில் பாதையில் இருக்கிறது. அது, இரண்டு பக்கங்களிலும் முற்றங்களைக் கொண்ட நாலா பக்கங்களில் வீடுகளும் நடுவில் பெரிய முற்றமும் கொண்ட கட்டடமாகும். அதன் மொத்த பரப்பளவு 716 சதுர மீட்டராகும். மேய் லான் ஃபான் தமது கடைசி 10 ஆண்டுகாலத்தில் இங்கு தங்கியிருந்தார்.

முன்பு, இது ச்சிங் வம்சக்காலத்தில் ச்சிங் பேரரசர் இல்லத்தின் ஒரு பகுதியாகும். விடுதலைக்குப் பின், அது செப்பனிடப்பட்ட இம்மண்டபத்தில், மேய் லான் ஃபாங் தங்கிவாழ துவங்கினார். அவர் மரணமடைந்த பின், அவரது குடும்பத்தினர், குடும்பத்திலுள்ள அரிய புகைப்படங்கள், நாடகக் சுவடிகள், நினைவுப் பொருட்கள் முதலிய 30 ஆயிரத்துக்கு மேலான தொல்பொருட்கள் மற்றும் தகவல்களை நாட்டிற்கு அர்பணம் செய்தனர். 1986ம் ஆண்டு அக்டோபர் 27ம் நாள், இந்த நினைவு மண்டபம் கட்டியமைக்கப்பட்டு, மக்களின் பார்வைக்காகத் திறந்து வைக்கப்பட்டது.

அது, நாலா பக்க வீடுகளும் நடுவில் முற்றமும் கொண்ட ஒரு கட்டிடமாகும். சிவப்பு நிற கதவில் தொங்கவிடப்படும் நீண்ட குறட்பா பலகையில், தேங் சியௌ பிங்கால் இயற்றிய மேய் லான் ஃபாங் நினைவு மண்டபம் முதலிய சில சீன எழுத்துக்கள் காணப்படுகின்றன. வாயிலுக்குள், கற்களால் கட்டியமைக்கப்பட்ட சுவரின் மேல், பசுமையான மூங்கில்களில், மேய் லான் ஃபாங்கின் மார்பளவு சிலை காட்சியளிக்கின்றது.

இந்த நினைவு மண்டபத்தின் முக்கிய முற்றத்திலுள்ள வடக்கு குடியிருப்பின் நடுப்பகுதி, வரவேற்பு அறையாகும். உள் அறை, அமர்கின்ற அறையாகும். கிழக்கு மற்றும் மேற்கில் தங்கியிருக்கும் அறையும் படிப்பு அறையும் உள்ளன. இப்படிப்பறையில், அதிகமான கையால் எழுதப்பட்ட நாடக சுவடிகள் வைக்கப்பட்டுள்ளன. சுவரில் ச்சாங் தா ச்சியான், ச்சி பெய் ஷி முதலிய புகழ்பெற்ற ஓவியர்கள் வரைந்த படைப்புகள் தொங்கவிடப்பட்டுள்ளன. பல்வேறு பொருட்கள், மேய் லான் ஃபாங் வாழ்ந்த காலத்தில் இருந்தது போன்று வைக்கப்பட்டுள்ளன. கிழக்கு மற்றும் மேற்கில், மேய் லான் ஃபாங்கின் குழந்தைகள் தங்கியிருந்த அறைகளும் உணவு அறையும் உள்ளன. தற்போது, அவற்றின் ஒரு புறம், சிறப்புக் கண்காட்சி அறையாகியுள்ளதோடு, மறுபுறம் வரவேற்பு மற்றும் கலை நடவடிக்கை நடைபெறும் இடமாகியுள்ளன. வெளி முற்றத்தின் தெற்கிலான குடியிருப்பு, நினைவு மண்டபத்தின் முக்கியக் கண்காட்சி அறையாகும். அங்கு அதிகமான மதிப்புக்குரிய, அரிய புகைப்படங்கள் மற்றும் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.