க்ளீட்டஸ்—வாணி, இன்றைக்கு தயாரிக்கும் நூடுல்ஸின் பெயர் என்ன? வாணி – பெயர் liang mian. குளிர்ச்சியான நூடுல்ஸ் என்று இதற்கு பொருள். க்ளீட்டஸ் – சரி. வாணி – தயாரிப்பு முறை எளிதானது. முதலில், தேவையான பொருட்களை கூறுகின்றேன். கோழி கால் 1, சைவ உணவு விரும்பும் நேயர்கள் இதனை பயன்படுத்தத் தேவையில்லை. வெள்ளரிக்காய் 1 உப்பு, சர்க்கரை, சோயா சாஸ், எள்ளுச் சாந்து,இஞ்சி, வெங்காயம் முதலியவை போதிய அளவு. க்ளீட்டஸ் – முதலில் நாம் தயாரிக்கப்பட்ட நூடுல்ஸை வெந்நீரில் போட்டு, வேக வைக்க வேண்டும்.
வாணி – பிறகு, அவற்றை வெந்நீரிலிருந்து எடுத்து ஒரு பெரிய பாத்திரத்தில் வையுங்கள். அவற்றின் மேல் சிறிதளவு நல்லெண்ணெயை ஊற்றுங்கள். நன்றாக கிளறலாம். இப்படி செய்தால், நூடுல்ஸ் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்ளாது. விசிறி மூலம் நூடுல்ஸை ஆறச் செய்யுங்கள். குளிர் சாதனப் பெட்டியில் வைத்தால், மேலும் நல்லது. க்ளீட்டஸ் – வெள்ளரிக்காயை நூடுல்ஸ் போல மெலிதாக நறுக்கிக் கொள்ளுங்கள். வாணி -- உப்பு, சர்க்கரை, சோயா சாஸ், எள்ளுச் சாந்து,இஞ்சி, வெங்காயம் முதலியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு, நன்றாக கிளறவும். இது தான் நூடுல்ஸின் சாஸ்.
க்ளீட்டஸ் – இறைச்சி விரும்பிய நேயர்கள், ஒரு கோழி காலின் தோலை நீக்கி, வெந்நீரில் வேகவைக்கலாம். பிறகு, அதனை வெளியே எடுக்கவும். சூடு ஆறிய பின், கைகளால் இதனை சிறிய அளவாக பிரித்துக் கொள்ளுங்கள். வாணி – தேவையான அனைத்துப் பொருட்களும் தயார். கடைசியாக, நூடுல்ஸ், கோழி இறைச்சி, நூடுல்ஸ் சாஸ் ஆகியவற்றைக் கலந்து கொள்ளுங்கள். இன்றைய liang mian என்ற நூடுல்ஸ் உணவு தயார். க்ளீட்டஸ்—கோடைக்காலத்தில் இது ஒரு நல்ல உணவு வகையாகும். நேயர்களே நீங்கள் வீட்டில் தயாரித்து ருசிப்பாருங்கள்.
|