வாணி: வணக்கம் நேயர்களே. உங்கள் எண்ணங்களை அழகான மாலைபோல் தொகுத்து வழங்கும் நேயர் நேரம் நிகழ்ச்சியில் மீண்டும் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. தொடரும் உங்கள் அனைவரது கடித, மின்னஞ்சல் வழி ஆதரவுக்கு எமது நன்றிகள். க்ளீட்டஸ்: நிகழ்ச்சியின் முதலில் தொலைபேசி வழியாக நேயர்கள் தெரிவித்த கருத்துக்களை வழங்குகிறோம். முதலில், சேந்தமங்கலம் S.M. ரவிச்சந்திரன் அழகான சிச்சுவான் சுற்றுலா பொது அறிவுப்போட்டிக்கான கட்டுரைகளை கேட்டபின் தெரிவித்த கருத்து. வாணி: அடுத்து கீழ்வெளியூர் ஆர். வடிவேல் அறிவியல் உலகம் நிகழ்ச்சி குறித்து தெரிவித்த கருத்தை கேளுங்கள். க்ளீட்டஸ்: நிகழ்ச்சிகளில் காணப்பட்ட மாற்றங்களை பற்றி குறிப்பிடுகிறார், சேந்தமங்கலம் நந்தகுமார். வாணி: அடுத்து பேளுக்குறிச்சி கே. செந்தில் உலக நிதி நெருக்கடியை சமாளிப்பது தொடர்பான சீனாவின் முயற்சிகள் பற்றி கூறிய கருத்து. கடிதப்பகுதி வாணி: அடுத்து இலங்கை சு. லெ. பா. பஸீஹா எழுதிய கடிதம். பள்ளி மாணவியான இவர் அவரது தோழி ஷம்லா என்பவர் மூலம் சீன வானொலி பற்றி அறிந்து கேட்கத் தொடங்கினார். உறவினரது வீட்டிலும் சீன வானொலி கேட்கும் வழமை உள்ளதால், மக்கள் சீனம், இனப்பபயணம், கேள்வியும் பதிலும், அறிவியல் கல்வி மற்றும் நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சிகளை விரும்பி கேட்டு வருகிறார். தனது கல்வி மேம்பாட்டுக்கு உதவும் தகவல்களை உள்ளடக்கிய நிகழ்ச்சிகள் என்பதால் சீன வானொலியை கேட்பதில் மிகவும் மகிழ்ச்சியடைவாதாக பஸீஹா குறிப்பிட்டுள்ளார்.
க்ளீட்டஸ்: ஒலிம்பிக் விளையாட்டுச் செய்திகள் நிகழ்ச்சி குறித்து மணச்சநல்லூர் ந. சண்முகம் எழுதிய கடிதம். மாஸ்கோவில் 1980ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி பற்றிய தகவல்களை கேட்டேன். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் முதலிய நாடுகள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தபோதும், மாஸ்கோ ஒலிம்பிக் போட்டி வெற்றிகரமாக நடைபெற்றதை நினைவுகூர்ந்தது கேட்டு பிரமிப்படைந்தேன். வாணி: தாசப்ப கவுண்டன்புதூர் எஸ். சுதர்ஷன் எழுதிய கடிதம். செய்திகளில் சீனா கடல் மீன்கள், இறால், நண்டு ஆகியவற்றின் உற்பத்தியில் உலகில் முதலிடம் பெறுவதாக கேட்டோம். அவ்வண்ணமே இந்தியா நண்டு உற்பத்தியில் இரண்டாமிடத்தையும், கடல் மீன்கள் மற்றும் இறால் உற்பத்தியில் 10வது இடத்தையும் பிடித்துள்ளது என்று அறிந்தோம். சுவையான செய்தி, நன்றி. க்ளீட்டஸ்: ஈரோடு காளியப்பம்பாளையம் ராகம் பழனியப்பன் எழுதிய கடிதம். நட்புப்பாலம் நிகழ்ச்சியில் பல்லவி பரமசிவன் மற்றும் நாச்சிமுத்து அவர்களின் சீனப் பயண அனுபவம், தமிழ்ப்பிரிவின் 45 வது ஆண்டு நிறைவில் பங்கேற்றமை ஆகியவை பற்றிய பகிர்வை கேட்டேன். தமிப்பிரிவின் மூத்த பணியாளர்களையும், தற்போதைய பணியாளர்களையும் சந்தித்து மகிழ்ந்த இருவரையும் பாராட்டுகிறேன். வாணி: நாமக்கல் எஸ். மணிகண்டன் எழுதிய கடிதம். சீன வானொலியில் இடம்பெறும் விளையாட்டுச் செய்திகள் நிகழ்ச்சி மிகவும் அருமை. என்னை போன்ற சிறுவர்கள் விரும்பிக் கேட்கும் நிகழ்ச்சிகளை சீன வானொலி ஒலிபரப்புகிறது. சீனாவின் பெருஞ்சுவர் போலவே, சீன வானொலியும் உலக அதிசயமே.
மின்னஞ்சல் பகுதி ……செந்தளை என்.எஸ்.பாலமுரளி…… அக்டோபர் 4 ஆம் நாளன்று மதுரை மாவட்ட சீன வானொலி நேயர் மன்றம் தயாரித்து வழங்கிய உங்கள் குரல் நிகழ்ச்சியின் மூன்றாம் பகுதி கேட்டேன். அதில் பங்கேற்ற நேயர்களின் எண்ணக் கருத்துக்கள் நிகழ்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருந்தன. நிகழ்ச்சியை கேட்டபோது, முந்தைய இரண்டு பகுதிகளை கேட்க முடியவில்லையே என வருத்தம் உண்டாயிற்று. சிறப்பு நேயர்களாக கலந்து கொண்ட பாண்டிச்சேரி என்.பாலக்குமார், ராஜகோபால் மற்றும் திருச்சி அண்ணா நகர் வி.டி.இரவிச்சந்திரன் போன்றோர்க்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 。。。。。。வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம்。。。。。。 அக்டோபர் திங்கள் 17 ஆம் நாள் இடம்பெற்ற •சீன சமூக வாழ்வு• நிகழ்ச்சியில் எட்லிஸ் பட்டு பின்னும் ஓர் உய்குர் இனக்குடும்பம் பற்றிய சுவையான தகவல்களை சிலவற்றை அறிந்து மகிழ்ந்தேன். பண்டைக்கால தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கும் எட்லிஸ் பட்டுத் துணியை உருவாக்கும் முயற்சியில் தன் குடும்பத்தாருடன் ஊக்கத்துடன் ஈடுபட்டு வரும் நுல்மெமட்டி அவர்களை நான் மனதார பாராட்டுகின்றேன். கையால் பின்னப்படும் பட்டு, எப்போதும் தனித்தன்மை மிக்கது. நுல்மெமட்டியின் மகன் முத்தலீப் போல, மேலும் பலர் இப்பகுதியில் எட்லிஸ் பட்டு தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொண்டு, இப்பண்பாட்டுக் கலையை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என நான் விரும்புகின்றேன். அருமையான குடும்பம் ஒன்றை இன்றைய நிகழ்ச்சியில் அறிமுகம் செய்து வைத்ததற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். ஊட்டி, S.K.சுரேந்திரன் 2008=10=07 அன்று சீனப் பண்பாடு நிகழ்ச்சியை கேட்டேன். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் ஒன்றுகலந்து காணப்பட்ட சீன பண்பாட்டு அம்சங்களைப் பற்றி கேட்டேன். ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளின் பதக்கங்களிலுள்ள வெள்ளி மணிக்கல் சீனப் பாரம்பரிய மதிப்பீடுகளான நன்நெறி, நன்மதிப்பு ஆகியவற்றை எடுத்துக் காட்டுகிறது என்பதை அறிந்தேன் மேலும் சீன மனம் கமழும், சீன கலைச் சிறப்பும், தொழில் நுட்ப நேர்த்தியும் ஒன்றினைந்த ஒரு படைப்பாக பெய்சிங் ஒலிம்பிக் தீபக் கோல் அமைந்திருந்தது பற்றியும் அதன் தனிச் சிறப்புக்கள் பற்றியும் அன்றைய நிகழ்ச்சியின் மூலம் தெளிவாக அறிந்து கொண்டேன்.
……பெரியகாலாப்பட்டு பெ.சந்திரசேகரன்…… அக்டோபர் 11 ஆம் நாள் இசை நிகழ்ச்சியை திலகவதி அவர்கள் வழங்கக் கேட்டு ரசித்து மகிழ்ந்தோம். 56 தேசிய இனங்களின் பாடல்கள் எனும் ஒலிநாடாவில் ஒளிந்துள்ள 56 சீனத் தேசிய இனங்களின் மிகச் சிறந்த நாட்டுப்புற பாடல்களின் மூலம் ஒவ்வொரு இனங்களின் பண்பாட்டையும் தெரிந்து கொள்ள முடிகிறது. சீனா என்ற தாய்க்கு பிறந்த பிள்ளைகளாய் 56 தேசிய இனங்களும் ஒற்றுமையுடன் வாழ்ந்து செழித்து வளரும் அதன் பண்பாட்டை உலகம் அறிய செய்யும் அந்த ஒலிநாடாவை பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியின்போது அனைவருக்கும் அன்பளிப்பாக வழங்கி உள்ளது மிகவும் மகிழ்ச்சி தருகிறது. ……திருச்சி அண்ணா நகர் வீ. டி. ஆர்…… அக்டோபர் 13 நாளன்று சீனாவின் கிராமப்புற சீர்திருத்தம் மற்றும் வளர்ச்சி பற்றிய செய்தித் தொகுப்பினை செவிமடுத்தேன். இந்த மாபெரும் மாற்றமானது ஒட்டுமொத்த சீனக் கிராமங்களையும் விரைவில் எட்டிப் பிடிக்கும் என்பது உறுதி. கூடுதலாக, கிராமப்புற வளர்ச்சிக்கு கட்சி சாரா பிரமுகர்களின் ஆலோசனையையும் சீன அரசு கேட்டுள்ளது. இது மக்களின் நலனில் சீன அரசுக்கு இருக்கும் அக்கறையையும், அனைவரது கருத்திற்கும் செவி சாய்க்கும் பண்பையும் காட்டுகின்றது. பல நாடுகள் இதனை பின்பற்றினால் கிராமங்கள் அனைத்தும் விடியல் பெறும்.
|