• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-05 14:41:07    
உலக F 1 கார் பந்தயத்தின் பிரேசில் போட்டி

cri

உலக F 1 கார் பந்தயத்தின் பிரேசில் போட்டி 3ம் நாள் முடிவடைந்தது. உபசரிப்பு நாட்டின் வீரர் மாசா, சாம்பியன் பட்டம் பெற்றார்.
இது வரை, இப்பந்தயத்தின் அனைத்து போட்டிகளும் முடிவடைந்துள்ளன. பாராலி அணி, வாகன அணிக்கான சாம்பியன் பட்டம் பெற்றது. மேக்லாரன் அணியின் வீரர் ஹாமில்டன் சிறந்த கார் பந்தய வீரருக்கான சாம்பியன் பட்டம் பெற்றார். உலக F 1 கார் பந்தய வரலாற்றில் மிக இளவயது சாம்பியனாக அவர் மாறியுள்ளார்.
நவம்பர் முதல் நாள் நடைபெற்ற ஸ்பெயின் கால் பந்தாட்ட மன்றங்களிடைப் போட்டியின் 9வது சுற்று போட்டிகளில், Barcelona அணி, 4-1 என்ற கோல் கணக்கில் Malaga அணியை தோற்கடித்தது. இது கடந்த 11 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று,

தரவரிசையின் முதலிடத்தில் உள்ளது. Valencia அணி, 2-4 என்ற கோல் கணக்கில் Santander அணியிடம் தோல்வியடைந்தது.
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு பின், பெய்ஜிங் மாநகரம், புதிய பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகளைக் கொண்டு பிடிக்க பாடுபட்டு வருகின்றது. சுங் குவன் சுன் அறிவியில் தொழில் நுட்பப் பூங்கா, நிதி நிறுவனங்களின் சாலை, பெய்ஜிங் சிறப்பு பொருளாதார தொழில் நுட்ப பிரதேசம், ஒலிம்பிக் மையப்பகுதி முதலிய 6 முக்கிய பிரதேசங்கள், பெய்ஜிங் பொருளாதாரத்தின் ஆதாரத்தூணாக மாறும் என்று பெய்ஜிங் நகரின் நிரந்தர துணைத் தலைவர் ஜி லின் அக்டோபர் 31ம் நாள் தெரிவித்தார்.
2008ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோர் ஆசிய கால்பந்து சாம்பியன் பட்டப் போட்டி, நவம்பர் முதல் நாள் சௌதி அரேபியாவில் துவங்கியது. 16 அணிகள் இப்போட்டியில்

கலந்துகொள்கின்றன. 16 அணிகள், 4 குழுக்களாக பிரிந்து போட்டியிடுகின்றன. குழுப்பிரிவின் முதல் 2 அணிகள், காலிறுதி ஆட்டத்தில் நுழையும். சீனா, தஜிக்ஸ்தான், லெபனான், வட கொரியா ஆகிய அணிகள் C குழுவில் இடம்பெறுகின்றன.
நவம்பர் முதல் நாள் சீன அணி, 6-0 என்ற கோல் கணக்கில் தஜிக்ஸ்தானை தோற்கடித்தது. சீனா அடுத்து, லெபனான் அணியுடன் மோதும்.
ஆசிய துடுப்பு நீச்சல் சாம்பியன் பட்டப் போட்டி, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. இப்போட்டி 1989ம் ஆண்டு நவம்பர் திங்களில் ஜப்பானில் முதன் முதலாக நடைபெற்றது. 10 அணிகள் இப்போட்டியில் கலந்துகொள்கின்றன.