• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-06 19:11:03    
ஆயிரம் தீவுகளைக் கொண்ட காட்சித் தலம்

cri

                 

சீனாவின் கிழக்கு கடலோரத்தில் அமைந்துள்ள செச்சியாங் மாநிலத்தில், ஆயிரம் தீவுகளைக் கொண்ட காட்சித் தலமொன்று உள்ளது. அங்கு நீர் பளிங்கு போன்றது. தீவுகளும் காட்சியும் பசுமையானவை. இந்த ஏரி, செச்சியாங் மாநிலத்தின் தலைநகரான ஹாங்சோவிலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதற்கும் உலக மரபுச்செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள மற்றொரு பிரபல காட்சித் தலமான ஹூசான் மலைக்குமிடையிலான தூரம் சுமார் 150 கிலோமீட்டர் ஆகும். ஆயிரம் தீவு ஏரி என்றால், ஏரி நீர் தவிர, ஏனையவை, பெரிய, சிறிய தீவுகளாகும். பெரிய, சிறிய முத்துக்கள் போல, ஏரி நீரில் பறவைகள், பரவுகின்றன. தீவுகளின் நிழல்களுக்கிடையில் வெண்ணிற மேகம் உலா போகின்றது. மீன்கள், தெளிந்த ஏரி நீரில் நெளிந்து விளையாடுகின்றன.

                                                                          

 1950ஆம் ஆண்டுகளின் இறுதியில், மின் நிலையத்தைக் கட்டியமைக்கும் பொருட்டு, நீரை இடைமறித்து சேகரிப்பதினால் உருவாக்கப்பட்ட செயற்கை ஏரி இதுவாகும். 573 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடையது.